Saturday, 8 November, 2008

நானும் எழுதிட்டேன்ல புத்தக தொடர் பதிவு

மறுபடியும் என்னை மாட்டிவிட்டுட்டாங்க. ஏற்கனவே சினிமா தொடர் பதிவு எழுதி ,அதை நம்ம மக்களெல்லாம் சந்தோசமா படிச்சிருப்பீங்கன்னு நம்பி ???? எழுதுறேன். பாபு நேத்து ரொம்ப மிரட்டினதால விசயத்துக்குள்ள போகலாம்.


புத்தகம் -- ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போதுதான் சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகியது.என் ஊர் சிறிய கிராமம் என்பதால் காலை 8 மணிக்கு மேல்தான் செய்தித்தாள் கிடைக்கும். அதுவும் இரு இடங்களில் 1. டீக்கடை 2. பஞ்சாயத்து ஆபிஸ்.

டீக்கடையில் தினத்தந்தி, பஞ்சாயத்தில் தினமலர். அதுவும் வெள்ளிக்கிழமைனா 9 மணி வரைக்கும் காத்திருந்து சிறுவர்மலரை பார்த்த பிறகு தான் அடுத்த வேலை. அதில் வரும் உயிரைத்தேடி எனும் தொடர்தான் ஹாட் டாபிக். அதே போல் ஞாயிறு என்றால் வாரமலர். ஒரு பக்கம் விடாமல் படிச்சதுக்கப்புறம் தான் சோறு தண்ணி எல்லாம்.இதே லீவு நாளில் அம்மாவிடம் அடி வாங்கியதும் ( பீடி மடக்க சொல்லுவார்கள்) அப்படியே எஸ்கேப் ஆகி வாரமலர் முழுவதும் படித்துவிட்டு வீட்டுக்கு போனா அடி வாங்கிட்டுதான் வேலை நடக்கும்.

அடுத்த ஸ்டேஜில் அறிமுகமாகியது காமிக்ஸ்புத்தகங்கள். இந்த மாதிரி புக் வாங்கனும்னா அம்பை இல்லைனா தென்காசி போய் தான் வாங்கனும். ஒரு புக் வாங்கி 3 மாதமானாலும் படிப்பேன். அப்போது மாயாவி தான் நம்மளோட சூப்பர் ஸ்டார். கிருஷ்னகிரியிலுள்ள என் மதினி வீட்டிற்கு மே மாத விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது புத்தகங்களுக்கென்றே தனி அறை வைத்திருந்தார்கள். கடல் புறாவில் இருந்து க்ரைம் நாவல் வரைக்கும் அனைத்தும் இருந்தது. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அந்த அறையிலதான் எப்பவுமே. கடல் புறா அப்போதைக்கு படிக்கும் போது புரிந்தும் புரியாமலும் இருந்தது. ஆழ்வார்குறிச்சியில் படிக்கும் பொழுது அங்குள்ள நூலகத்திற்கு சென்று அனைத்து செய்திதாள்களையும் படித்துவிடுவேன் . கையேடுகள் எனப்ப்டும் வாசகர் வட்ட புத்தகங்களை முழுவதும் படிப்பது ( லோக்கல் நியூஸ் அதிகமா இருக்கும்+ கவிதைகள்)

டிப்ளமா தாழையூத்தில் படிக்கும் போதுதான் விகடன், குமுதம், பாக்யா, ஜெமினி சினிமா,ராஜேஸ்குமார்,சுபான்னு புத்தகங்களை தேடி அலையும் பழக்கம் ஆரம்பமாகியது. அதிலும் ஜெமினி சினிமா புக் படிக்கலைனா அந்தவாரம் சோகமாத்தான் இருக்கும். சினிமா நியூஸ் படிக்கலைனா தல வெடிச்சிரும். பாக்யாவில் வரும் தகவல்கள் பூமி அழிந்துவிடும்,நட்சத்திரம் தாக்கப்போகுது போன்ற பரபரப்பான நியூஸ்க்காகவே அதை படிப்பேன்.டிப்ளமா முடித்துவிட்டு கடையநல்லூரில் வேலை பார்க்கும் பொழுது விகடன் தான் என்னோட விருப்பம். இன்டெர்நெட்னா என்ன என்பது விகடன் மூலம் தான் அறிந்து கொண்டேன் ( 1996ல் இதைப்பற்றி தொடர் வந்தது.)சுஜாதாவின் கதைகள், மதன் கார்ட்டுன், வசகர் கவிதைகள்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கலாம். அந்த மாதிரி புக்கும் தான் ( ஓசியில தான் படிப்பேன்)

சென்னையிலும் விகடன் தான் என்னுடைய தோழனாய் இருந்தான். வைரமுத்துவின் கருவாச்சி காவியம், ராமகிருஷ்ணனின் தொடர், மதன் கேள்வி பதில்களெ என போய்கிட்டேயிருந்தது.பெரிய எழுத்தாளர்களின் புத்தகமெல்லாம் வாங்கி படிக்கும் பழக்கம் கிடையாது.

இப்பவெல்லாம் எந்த புத்தகமும் அவ்வளவாக வாங்குறதும் கிடையாது, படிக்கிறதும் கிடையாது.நெட்ல எல்லாத்தையும் ஓசியிலே படிப்பதுதான்

இப்ப உள்ள நிலைமைக்கு வீட்டில் ஒரு நியூஸ் பேப்பர் கூட படிக்க முடியாது. அப்படியே படிச்சாலும் பேப்பர் மேல் இரண்டு கால்கள் நிற்கும் "அப்ப்ப்ப்பா தண்ணீ ......... ஒரு சத்தம் கேட்கும். எடுத்துக்கொடுப்பேன். " டீவீஈஈஈ .... ஆன் பண்ணுவேன். பாட்டூஊஊஊஊஉ>>.> சன் மியூசிக்கோ, இசை அருவியோ ஓடும். திடீர்ன்னு ரென்டு அடி முதுகிலோ முகத்திலோ விழும். அமைதியாக எழுந்து நானும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவேன் ( டான்ஸ்தான்).பையனின் அன்புத்தொல்லை.???!!!!!!

நான் அழைப்பது.1. நர்சிம்
2.முரளி கண்ணன்
3.தமிழ் பிரியன்
4.தூயா
5.கடையம் ஆனந்த்


பெரிய ஆளுங்களை கூப்பிட்டதனால நானும் பெரிய ஆளாயிட்டேன்

14 comments:

பாபு said...

என்னங்க ,எப்ப பார்த்தாலும் ஞாநி கட்டுரைய போடுவீங்க,ஆனா அவர பத்தி ஒன்னும் எழுதலயே?
அந்த கடைசி வரிகள் எனக்கும் பொருந்தும்.ரொம்ப சின்னதா முடிச்சுட்ட மாதிரி இருக்கு.தொடர் எழுதியதற்கு நன்றி

குற்றாலம்,செங்கோட்டை,அம்பாசமுத்திரம் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த இடம்.
நான்கு ஐந்து முறை குற்றாலம் வந்திருக்கிறேன்.அதுக்கு பக்கத்திலேயே இருக்கற உங்கள பார்த்து எனக்கு பொறாமையா இருக்கு

அத்திரி said...

வாங்க பாபு. யோசிச்சதை அப்படியே எழுதிட்டேன். பதிவை முடிச்சப்புறம் ப்டிச்சு பாத்தா அதை எழுதியிருக்கலாமோ? இதை எழுதியிருக்கலாமோன்னுதான் தோனும். ஞாநியின் கட்டுரைகளை பதிவுலகிற்கு வந்ததற்கு அப்புறம் தான் படிக்கவே ஆரம்பிச்சேன்.

ஆபிஸ்ல வச்சுதான் இதையெல்லாம் எழுத முடியும், அதான் சீக்கிரமா முடிச்சிட்டேன். என்னை பாத்து ஏன் பொறாமை? . நான் தற்போது சென்னையிலதான் இருக்கேன். ஊரைவிட்டு வந்து ரொம்ப வருசமாச்சு. பயணக் கட்டுரையை ஆரம்பிங்க கலக்கிடுறேன்..

தமிழ்ப்பறவை said...

உங்களோட புத்தக அனுபவமே, கிட்டத்தட்ட எனக்கும்...நம்மையொத்த வயதினர் எல்லாருக்கும் இதே போல்தானிருக்கும் என நம்புகிறேன்.
கேபிள் டி.வியற்ற குழந்தைப் பருவம் நம் கற்பனைப்பசிக்கு அபாரத்தீனி போட்டது.வயது ஏற,ஏற படிப்பு குறைந்துவிட்டது.
//விகடன் தான் என்னுடைய தோழனாய் இருந்தான். வைரமுத்துவின் கருவாச்சி காவியம், ராமகிருஷ்ணனின் தொடர், மதன் கேள்வி பதில்களெ என போய்கிட்டேயிருந்தது//
எனக்கும் பலப்பல விஷயங்களை அறிமுகப் படுத்தியதில் விகடனின் பங்கு முக்கியமானது...ஜோக்ஸ்,ஓவியங்கள் எனக்குப் பிடிக்கும் விகடனில்...
//ஆழ்வார்குறிச்சியில் படிக்கும் பொழுது //
ஆழ்வார்குறிச்சின்னா எனக்கு நினைவுக்கு வர்றது ஆழ்வார்குறிச்சி ஜே.டி. ரஞ்சிதா தான்....
என் பக்க்த்திற்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி அத்திரி....

தமிழ்ப்பறவை said...

its for mail followup oly...

அத்திரி said...

வாங்க தமிழ்ப்பறவை. என் அனுபவம் தங்களுக்கும் ஒத்துப்போகிறது என்பது சந்தோசம். வருகைக்கு நன்றி.

narsim said...

மிக அற்புதமான வாசிப்பு அனுபவங்களை பகிந்துகொண்டுள்ளீர்கள் அத்திரி..

தொடர்கிறேன்.. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்..

நல்ல பதிவு

நர்சிம்

அத்திரி said...

நன்றி நர்சிம்.

Anonymous said...

மிக அற்புதமான வாசிப்பு அனுபவங்களை பகிந்துகொண்டுள்ளீர்கள் அத்திரி..

தொடர்கிறேன்.. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்..

பாபு said...

mail.comநரசிம் , ஏற்கனவே பரிசல் தொடரில் அழைக்கபட்டார்,கவனிக்கலையா??

அத்திரி said...

கவனிக்கலை பாபு. அவரை குறுந்ஃதொகையிலிருந்து வெளிகொண்டு வருவதற்கு இன்னும் 10பேர் கூப்பிடனும்.

அத்திரி said...

சினிமாதொடர் மாதிரி சுருக்கமா முடிச்சிடாதிங்க ஆனந்த்

முரளிகண்ணன் said...

அழைப்பிற்க்கு நன்றி அத்திரி. விரைவில் எழுதிவிடுகிறேன்

Anonymous said...

வணக்கம் அத்திரி,

இத்தனை புத்தகங்களா படித்தீர்கள்? இருதாலும் உங்கள் பையனின் நடனத்திற்கு ஈடாகுமா? நானும் உங்களை போலவே இப்போதெல்லாம் அதிகம் இணையத்தில் தான் படிக்கின்றேன்.

என்னையும் இத்தொடரிற்கு அழைத்தமைக்கு நன்றிகள். வெகு விரைவில் எழுதுகின்றேன்.

அத்திரி said...

நான் படித்த புத்தகங்கள் ரொம்ப குறைவு. இப்பதான நம்ம பதிவர்கள் இந்த தொடரை ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களோட புத்தக வாசிப்பு என்னைவிட அதிகமா இருக்கும்.

நன்றி தூயா