Thursday, 25 December, 2008

2008ன் சிறந்த மொக்கை திரைப்படங்கள்.--என் பார்வையில்

நம்ம தமிழ் திரைப்படங்களில் நல்ல படங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமான வேலை....!!!!!!!!!!. ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் மிகக்குறைந்த அளவு படங்களே நல்ல திரைப்படமாகவும், வெற்றிப்ப்டமாகவும் அமைகின்றன. ஆனால் வெளியாகும் திரைப்படங்களில் கிட்டதட்ட 90 சதவீதம் மொக்கைப்படங்களாக இருப்பதால் அவற்றுள் சிறந்ததை தேர்ந்தெடுப்பது ரொம்ப கடினம். இருந்தாலும் பல கடினமான சுற்றுகளையும் தாண்டி இறுதி சுற்றுக்கு வந்திருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்குள்.....!!!!!!!!!!!!!!!!! மூச்சு முட்டிருச்சி.
6. குசேலன்


கிளிய வளர்த்து பூனை கையில கொடுத்த மாதிரி, கதபறயும் போள் எனும் அருமையான கதையை டைரக்டர் வாசு கையில கொடுத்ததால இந்த படம் சிறந்த வரிசையில வர வேண்டியது, மொக்கையில வந்திடிச்சி. இந்த ஜென்மத்துல ரசினி காந்த் வாசு இருக்குற பக்கம் தல வச்சி கூட படுக்க மாட்டார். கிளைமாக்ஸை மட்டும் நம்பி திரைக்கதையை கொத்தி கூறு போட்டுட்டாரு நம்ம டைரக்டர்.ரசினி படம்னாலே பாட்டுதான் ஹிட்டாவும். ஆனா எல்லா பாட்டுமே....????/ நயந்தாரா குனிவது, சோனா வின் மேல் வச்ச நம்பிக்கையை கொஞ்சம் திரைக்கதை மேல் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பா ஹிட் ஆகியிருக்கும். சூப்பர் ஸ்டாருக்கு எந்திரனாவது எந்திச்சி நிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம்.


5.குருவி


என் தல விசய் படம் இந்த மொக்கையில வந்ததுக்கு என் மனசு அழுதுப்பா............அவ் அவ்வ்..என்ன பண்றது... கடப்பா மேட்டர் மட்டும் இல்லைனா படம் டப்பா ஆகியிருக்கும். படத்துல விசயின் பல சாகசங்களால் தான் இந்த இடத்துக்கு வந்திருக்கு. ஓட்டைக் காரை நல்லா ஓட்டி ஜெயிப்பது-- தலாஇக்கு ஆப்பு வச்சதா நினச்சி தனக்கே ஆப்பு வச்சிக்கிட்டார். ரெயில்வே பாலத்தை அசால்டா தாவுறதுன்னு சும்மா கில்லி மாதிரி சுத்தி சுத்தி அடிச்சாரு.. ஆனா என்ன பண்றது சரக்கு இல்லாம போச்சே.....பேசாம இந்தியா சார்பா ஒலிம்பிக்ல நீளம் தாண்டுவதில் கலந்திருந்தா கூட ஒரு பதக்கம் கிடைச்சிருக்கும்.. இல்ல பார்முலா 1 ரேஸ் ல கலந்துகிட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கலாம். இந்தியா ஒரு விளையாட்டு வீரனை மிஸ் பண்ணிடுச்சிப்பா.... வில்லு சும்மா விர்ர்ருனு வருமா??


4.சத்யம்


இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னால இன்னா பில்டப் கொடுத்தாங்கோ..வசூல்ல அப்படியே பிச்சிக்கிட்டு போகனும்னு பாத்தாங்க.. ஆனா தியேட்ட்ர வுட்டே பிச்சிக்கிட்டு போயிடுச்சி.. அண்ணன் விசாலு உடம்பை ஏத்துறேன்னு சொல்லி சும்மா சோனி பையன் மாதிரி வந்து நின்னாரு பாருங்க ... முடியல.. அதுவும் கிளைமாக்ஸ்ல ரெண்டு டுப்பாக்கிய வச்சிக்கிட்டு சும்மா டமார் டம்மர் நு சுட்டுக்கிட்டே மொட்டை தலையோட வில்லன ரணகளம் பண்றதுதான் உச்சகட்ட காமெடி. இந்த படத்துக்கு இசை ஹாரிஸ்னா யாராவது நம்புவாங்களா?.... டைரக்டருக்கு இதுதான் முதல் படமாம். அவரோட எதிர்காலத்துல விசாலு விளையாடிட்டாரு.


3.ஏகன்


அட தலயோட படம் சிரிப்பு சிரிப்பா வருதுப்பா.. மொத்தத்துல இந்த படமே சிரிப்பு படம் தான். பின்ன தல காலேஜ் பையனா வருவாரு பாருங்க... !!!!! முடியலைங்க....அவ் அவ்... ராஜூ சுந்தரம் பேசாம தன்க்கு தெரிஞ்ச வேலையவே பாத்துருக்கலாம். தலயோட டான்ஸ் தான் ஹைலைட்.. ஷாலா ஷாலான்னு தொப்பய வச்சிக்கிட்டு ஆடுற ஆட்டம்............. தாங்காது இந்த பூமி?????. தலைக்கு அடுத்தப்படமாவது நல்லா களையா வருமானு பாக்கலாம்.

2.பழனிமசாலா படம் எடுக்கிறேன்னு சொல்லிட்டு காமெடிப்படமா எடுத்து தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் பணியை நல்லாவே செய்றார் பேரரசு. நம்ம பரத்து இதுல அடிக்கிற பன்ச் டயலாக்கால தான் இது ரெண்டாவது இடத்துக்கு வந்திருக்கு. போதாக்குறைக்கு டைரக்டர் பேரரசு இன்சுபெக்டரா வந்து டெரரா நடிப்புல பின்னி எடுப்பார்.நம்ம குசுபு அக்கா சென்டிமென்டுல பின்னியிருப்பார். இந்த படம் சன் டிவியில டாப் டெனல முதல் இடத்துல இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை....

1.

....
...
....
....
....
....
....
.....
.....


நாயகன்

நம்ம பதிவுலகம் எதிர்பார்த்த மாதிரியே ரொம்பக் கஷ்டப்பட்டு முதல் இடத்துக்கு வந்திருக்கு.. நம்ம வரிசையில் உள்ள படங்களை விட 0.00001 மதிப்பெண் அதிகம் பெற்று முதல் இடத்தை பிடிச்சிருக்கு. இந்த படத்த பற்றி என்ன சொல்ல நம்ம பதிவுலக மக்கள் ஏற்கனவே வீரத்தளபதி பேர்ல பிளாக் ஆரம்பிச்சி கலக்குறாங்க. இந்தபடம் முதல் இடத்துக்கு வருவதற்கு முழுமுதற்காரணம் சிங்கம் ஜேகே ரித்தீஸ்தான். இருந்தாக்கா அள்ளிக்கொடு இல்லனா சொல்லிக்கொடு பாடல் காட்சி ஒன்றே போதும்..... கிராபிக்ஸ்னா என்ன என்பதை இந்த பாடல் காட்சி மூலம் தான் கத்துக்கனும்.. நிலா நிலா ஓடி வா பாடல் காட்சியில் நம்ம சிங்கம் எல்லா எக்ஸசைசையும் செஞ்சு முடிச்சிருவார். அவர் ஆடும் போதும், டயலாக் பேசும் போதும் அவர் கண்ணில் தெரியும் தன்னம்பிக்கைதான் படத்துக்கு மிகப்பெரிய பலம். ரவுடிய ஊஞ்சல் கட்டி அடிக்கிற மேட்டர்தான் நம்ம தமிழ்நாடு காவல்துறையில ஹைலைட்டான பேச்சாம்.


முதலிடத்துக்கு வந்த வெற்றியை வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்ற போர்ப்படைத்தளபதி கார்க்கிக்கு அர்ப்பணிக்கிறேன்.( ஏதோ பரிசு கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க... அதான் ஐஸ் )


டிஸ்கி: உங்க ஓட்டை நல்லா குத்துங்கடே...

21 comments:

அதிரை ஜமால் said...

இவ்வளவு படத்தையும் நீங்க பார்த்தீங்களா ...

அதுக்கே உங்களுக்கு அவார்டு கொடுக்கனும் ...

அத்திரி said...

//இவ்வளவு படத்தையும் நீங்க பார்த்தீங்களா ...

அதுக்கே உங்களுக்கு அவார்டு கொடுக்கனும் ...//
எனக்கு அவார்டு எல்லாம் வேண்டாம்.... குருவியும்,குசேலனும்தான் பாத்தேன்...ஹிஹிஹிஹி....

நன்றி ஜமால்

அதிரை ஜமால் said...

\\டிஸ்கி: உங்க ஓட்டை நல்லா குத்துங்கடே...\\

குத்திட்டம்லே ...

அதிஷா said...

அத்திரி இந்த வாரம் சனிக்கிழமை பதிவர் சந்திப்பு வந்திடுங்கண்ணா...

;-)

பதிவு சூப்பர்

ரித்திஷின் புகழ் அகிலமெல்லாம் பரவட்டும்\

PoornimaSaran said...

// நிலா நிலா ஓடி வா பாடல் காட்சியில் நம்ம சிங்கம் எல்லா எக்ஸசைசையும் செஞ்சு முடிச்சிருவார்//

சத்தம் போட்டு சிரித்து விட்டேன்
:)))))))))))))))))))))

PoornimaSaran said...

கலக்கலா வரிசைப் படுத்தி இருக்கீங்க !!!

Anonymous said...

;-)

நசரேயன் said...

இந்த படங்களை எல்லாம் பார்த்த உங்களுக்கு சிறந்த படமகன் விருது கொடுக்கணும்

Anonymous said...

\\முதலிடத்துக்கு வந்த வெற்றியை வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்ற போர்ப்படைத்தளபதி கார்க்கிக்கு அர்ப்பணிக்கிறேன்\\
நிசமாலும் பரிசு உங்களுக்குதான்

ஆளவந்தான் said...

நாங்க அவ்ளோ சொல்லியும் கேககாம...

இதெல்லாம் நல்லால ஆமா சொல்லிட்டோம்

ஆளவந்தான் said...

//
ரவுடிய ஊஞ்சல் கட்டி அடிக்கிற மேட்டர்தான் நம்ம தமிழ்நாடு காவல்துறையில ஹைலைட்டான பேச்சாம்.
//
இண்டர்போல் லெவெல்ல பேசிகிட்டு இருககாங்க தெரியும்ல

ச்சின்னப் பையன் said...

நல்ல வேளடா சாமி.. இந்த படங்கள்லே எதையும் நான் பாக்கலே!!!

அந்த எக்சர்சைஸ் படம் உட்பட!!!

அத்திரி said...

//குத்திட்டம்லே ...//

நன்றி ஜமால்

//அத்திரி இந்த வாரம் சனிக்கிழமை பதிவர் சந்திப்பு வந்திடுங்கண்ணா...
;-)
பதிவு சூப்பர்

ரித்திஷின் புகழ் அகிலமெல்லாம் பரவட்டும்\//

பதிவர் சந்திப்புக்கு இன்னும் தங்கமணியிடம் இருந்து பர்மிசன் கிடைக்கல அவ்....

நன்றி அதிஷா


//சத்தம் போட்டு சிரித்து விட்டேன்
:)))))))))))))))))))))கலக்கலா வரிசைப் படுத்தி இருக்கீங்க !!!//

நன்றி பூர்ணிமா சரண்.

அத்திரி said...

//;-)//

நன்றி ஆனந்த்
பதிவர் சந்திப்புக்கு உங்களை எதிர்பார்க்கிறேன்


//இந்த படங்களை எல்லாம் பார்த்த உங்களுக்கு சிறந்த படமகன் விருது கொடுக்கணும்//

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நசரேயன். ( என் தங்கமணியின் ஊர்க்காரராச்சே)


\\முதலிடத்துக்கு வந்த வெற்றியை வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்ற போர்ப்படைத்தளபதி கார்க்கிக்கு அர்ப்பணிக்கிறேன்\\
நிசமாலும் பரிசு உங்களுக்குதான்//

நன்றி கவின். பரிசு கிடச்சா பாதி உங்களுக்கு

அத்திரி said...

//நாங்க அவ்ளோ சொல்லியும் கேககாம...
இதெல்லாம் நல்லால ஆமா சொல்லிட்டோம்//

என்ன இப்படி சொல்லிட்டீங்க...பதிவுலக மக்களின் விருப்பமே என் விருப்பம்

//இண்டர்போல் லெவெல்ல பேசிகிட்டு இருககாங்க தெரியும்ல//


இதெல்லாம் ஜுஜுபி சிங்கத்தோட அடுத்த படத்தை பாருங்க..

நன்றி ஆளவந்தான்

//நல்ல வேளடா சாமி.. இந்த படங்கள்லே எதையும் நான் பாக்கலே!!!

அந்த எக்சர்சைஸ் படம் உட்பட!!!//

இப்படி சொல்லிட்டா நாங்க நம்பிருவமா என்ன?

முதல் வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்

முரளிகண்ணன் said...

அத்திரி, அருமை

வெங்கட்ராமன் said...

டக்கர் விமர்சனம்

அத்திரி said...

//அத்திரி, அருமை//

நன்றி முரளி அண்ணே

//டக்கர் விமர்சனம்//

நன்றி வெங்கட்ராமன்

தாமிரா said...

:-))))

கார்க்கி said...

அண்ணே நான் ஜோக் அடிக்கல.. நிச்சயம் நீங்க சொன்ன படத்துல நாயகன் தான் நல்ல படம்.. யபடம் பார்த்தவங்கள கேளுங்க.. நிஜமா ஒரு முறை பார்க்க கூடிய படம்.. இந்த லிஸ்ட்ல கண்டிப்பா சேர்த்திருக்க வேண்டியது காளை.. நாயகன எடுத்திடுங்க.. எனக்கு அழுகையா வருது..

அத்திரி said...

//:-))))//

நன்றி தாமிரா அண்ணே


//அண்ணே நான் ஜோக் அடிக்கல.. நிச்சயம் நீங்க சொன்ன படத்துல நாயகன் தான் நல்ல படம்.. யபடம் பார்த்தவங்கள கேளுங்க.. நிஜமா ஒரு முறை பார்க்க கூடிய படம்.. இந்த லிஸ்ட்ல கண்டிப்பா சேர்த்திருக்க வேண்டியது காளை.. நாயகன எடுத்திடுங்க.. எனக்கு அழுகையா வருது..//

இதுக்கெல்லாம் அழக்கூடாது....

நன்றி சகா