Sunday, December 28, 2008

தி.நகர்-- நடேசன் பார்க்--- பதிவர் சந்திப்பு 27.12.08--- தங்கமணி

நேற்று எனக்கு வார விடுமுறை. சரியா 5மணிக்கு நடேசன் பார்க்குல இருக்கனும் அப்படின்னே நினைச்சுட்டே தூங்கிவிட்டேன். முழிச்சி பாத்தா மணி 4:15 க்கு மேல் ஆகிவிட்டது. ஆஹா பரபரன்னு கிளம்பி என் பையனிடம் அப்பா ஆபிஸ் போறேன்டான்னு சொல்லி எஸ்கேப்.தி.நகர் வந்தடையும்போது மணி 5:30 ஆகிவிட்டது. தாமிராவுக்கு மிஸ்டு கால் கொடுத்து பேசினேன். ஒன்னும் அவசரமில்லை மெதுவா வாங்க" என்றார். சரி நடேசன் பார்க்குக்கு தண்டபானி தெரு வழியா போனா பக்கமா இல்லை பர்கிட் ரோடு சிக்னல் வழியா போனா பக்கமானு ஒரு சந்தேகம். ஒரு பெருசு கிட்ட கேட்டு சரியான வழியில் வந்தடைந்தேன்.

சந்திப்பு ஆரம்பமாகியிருந்தது. அதிஷா தனியாக நின்று செல் பேசிக்கொண்டிருந்தார்.


வந்திருந்தவர்கள்
1. டோண்டு
2.ஜியோராம் சுந்தர்.
3.கேபிள் சங்கர்
4.காவேரி கணேஷ்
5.லக்கி லுக்
6.அதிஷா
7.தாமிரா
8.நர்சிம்
9.முரளிகண்ணன்.
10.அக்னி பார்வை
12.பாலபாரதி
14.கார்க்கி
15.இளவஞ்சி
16.பாபு ( தமிழ்கணிணி)
17.தராசு
18.ராஜராஜன்
19.ஊர்சுற்றி
20. ஜோசப் பால்ராஜ்
21.பாலு
22.புதுகை அப்துல்லா
23.குகன்
+ 3 வாசகர்கள் ( பெயர் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)


திருமணமானவர்களின் பிரச்சினை பற்றி ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்க. காமெடியா பேசவேண்டிய மேட்டர் எப்படித்தான் சீரியஸ் மேட்டரா ஆச்சோ?. டோண்டு சார் நேபாளிகளின் திருமணமுறை பற்றி தெரியாத மேட்டரையெல்லாம் சொன்னார். திடீர்னு பாலபாரதி திருமண வாழ்க்கையில் ஆண்களுடைய டாமினேஷன் தான் அதிகம்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டுட்டார். நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... நீங்களே ஒருநியாயத்தை சொல்லுங்க. அப்படியே பேச்சு ஒரின சேர்க்கை பற்றி திசைதிரும்பியது. அதிஷா இதுக்கு ஆதரவு கொடுத்ததால "அவனா நீ" அப்படி சொல்லிட்டு நகர்ந்து உட்கார்ந்தார். நம்ம தங்கமணித்தாமிரா " கல்யாணம் தேவையில்லை காதல் ஓகே" ( இருங்க ஊர்ல இருந்து அண்ணி வரட்டும்)என்றார். ஒருவேளை படிக்கும் போதும், திருமணத்திற்கு முன்னாலும் ஏகமா லவ்விக்கிட்டு இருந்திருப்பாரோ ?????!!!!!!


பேச்சு அரசியல் பக்கமும், மீடியாக்களின் செயல்பாடு பற்றியும் திரும்பியது.வருகிற மக்களவைத்தேர்தலில் திமுகவுக்கு எப்படியும் 20 சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னார். அப்படியே திருமங்கலம் தேர்தலில் அதிமுக ஜெயிக்கனும் என்றும். இப்படி நடந்தால் திமுக உஷாராகும்னு சொன்னார். அஞ்சா நெஞ்சன் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா???.. மீடியாக்களின் செய்தி வெளியிடும் முறை குறித்து பாலபாரதி குமுறிட்டார்.( மனுஷர் எதை பற்றி பேசினாலும் ஓவர் டென்சன் ஆகிறார்). இவ்வளவு கூத்தும் நடக்கும்போது கார்க்கியிடமும், தாமிராவிடமும் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றேன். கொசுக்கடி அதிகமானதால் அப்படியே டீக்கடைக்கு நகர்ந்துவிட்டோம். கடைசி நேரத்தில் ஜோசப் பால்ராஜ் இணைந்துகொண்டார்.வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் மன்றத்திலிருந்து என்ன பரிசு கொடுக்கபோகிறீர்கள் என்று அப்துல்லா அண்ணாச்சியிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிவிட்டு ராஜராஜனுடன் சைதாப்பேட்டை வந்து பின் பஸ் ஏறினேன். தமிழ் எழுதும் முறை குறித்து ராஜராஜன் பல யோசனைகள் சொன்னார்.


வீட்டை அடையும் போது மணி 8:45. சன் டீவியில் அதிரடி சிங்கர் ஓடிக்கொண்டிருந்தது.போட்டியாளர் " நீயா பேசியது என் அன்பே" என்றபாடலை நரம்பு புடைக்க பாடிக்கொண்டிருந்தார். பாடல் முடிந்ததும் ஈரோடு மகேஷ் உங்க தாடிக்குப் பின்னால் யாருங்க ?? என்று கலாய்த்தார். இந்தக் கேள்வி எனக்கு வந்தது. " வேற யாரு இதுக்கு பின்னாடி நீதான்" முடிப்பதற்குள் ணங்......அவ்வ்வ்வ்...........

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

27 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

நசரேயன் said...

சந்திப்பு வெகு விமரிசையாகவும் வெற்றிகரமாகவும் நடத்திருக்கு

நசரேயன் said...

/*திடீர்னு பாலபாரதி திருமண வாழ்க்கையில் ஆண்களுடைய டாமினேஷன் தான் அதிகம்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டுட்டார். நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... */
நானும் தான்

கோவி.கண்ணன் said...

புரூனோ சார் வரவில்லையா ?

Cable சங்கர் said...

உங்கள் பதிவை இணைத்திருக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

உங்கள் உபயத்தால் இன்னும் சில பெயர்களை சேர்க்க முடிந்தது. நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அத்திரி said...

//நான் தான் முதல்ல//

நன்றி

//சந்திப்பு வெகு விமரிசையாகவும் வெற்றிகரமாகவும் நடத்திருக்கு//

ஆமா

//*திடீர்னு பாலபாரதி திருமண வாழ்க்கையில் ஆண்களுடைய டாமினேஷன் தான் அதிகம்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டுட்டார். நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... */
நானும் தான்//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நசரேயன்

அத்திரி said...

//புரூனோ சார் வரவில்லையா ?//

வரலையே. .. நன்றி கோவி கண்ணன்

//உங்கள் பதிவை இணைத்திருக்கிறேன்.//

நன்றி கேபிள் சார்

//உங்கள் உபயத்தால் இன்னும் சில பெயர்களை சேர்க்க முடிந்தது. நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நன்றி டோண்டு சார்

கார்க்கிபவா said...

சந்திப்புக்கு படு ஸ்மார்ட்டாக,ஸ்டைலாக, யூத்தாக ,கலக்கலா வந்தவருன்னு சொல்லவேயில்லையே என்னைப் பற்றி?

குடுகுடுப்பை said...

நசரேயன் சொன்னது…

/*திடீர்னு பாலபாரதி திருமண வாழ்க்கையில் ஆண்களுடைய டாமினேஷன் தான் அதிகம்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டுட்டார். நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... */
நானும் தான்
நானும் தான்
நானும் தான்
நானும் தான்
நானும் தான்
நானும் தான்

தராசு said...

முரளிகண்ணன் அருமையாக விவாதத்திற்கான தலைப்புகளை கூறிக்கொண்டிருந்தார். திருமணத்தைக்குறித்து இளவஞ்சியும் தனது கருத்துகளை முன்வைத்தார்.

ஆனால் பாலபாரதிக்கு முன்னால் யாரும் எடுபடவில்லை.

குப்பன்.யாஹூ said...

good write up.

முரளிகண்ணன் said...

அத்திரி, மணவாழ்க்கை குறித்து நீங்கள் கூறிய கருத்தை பதிவு செய்யவில்லையே ஏன்?

நல்லா மாட்டிக்கிட்டீங்களா?

Anbu said...

அன்புடன்,
அன்பு

மதுரை காவேரி கணேசுடன்

அத்திரி said...

//சந்திப்புக்கு படு ஸ்மார்ட்டாக,ஸ்டைலாக, யூத்தாக ,கலக்கலா வந்தவருன்னு சொல்லவேயில்லையே என்னைப் பற்றி//

மறந்துட்டேன் சகா இதைப்பற்றி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். நன்றி

//அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... */
நானும் தான்
நானும் தான்
நானும் தான்
நானும் தான்
நானும் தான்
நானும் தான்//

ரொம்பவே பாதிப்பு போல.. நன்றி குடுகுடுப்பை

//முரளிகண்ணன் அருமையாக விவாதத்திற்கான தலைப்புகளை கூறிக்கொண்டிருந்தார். திருமணத்தைக்குறித்து இளவஞ்சியும் தனது கருத்துகளை முன்வைத்தார்.

ஆனால் பாலபாரதிக்கு முன்னால் யாரும் எடுபடவில்லை.//


அதிரடிக்கு முன்னால எதுவுமே எடுபடாது போல. நன்றி தராசு

அத்திரி said...

//good write up.//

ரொம்ப நாளா ஆளைக்காணோமே நன்றி குப்பன்.

//அத்திரி, மணவாழ்க்கை குறித்து நீங்கள் கூறிய கருத்தை பதிவு செய்யவில்லையே ஏன்?
நல்லா மாட்டிக்கிட்டீங்களா?//

அப்படி என்னத்த சொல்லிட்டேன்.. எல்லாரும் கல்யாணம் முடிச்சி சந்தோசமா இருங்கன்னு சொன்னேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்.
நன்றி முரளி அண்ணே


//அன்புடன்,
அன்பு
மதுரை காவேரி கணேசுடன்//

நன்றி அன்பு

narsim said...

வணக்கம் சகா

அத்திரி said...

//வணக்கம் சகா//

நன்றி சகா

Anonymous said...

நம்ப பக்கம் எட்டி பாருங்க., உங்களுக்கு விருது இருக்கு,

அத்திரி said...

நன்றி ஆனந்த்

ஊர்சுற்றி said...

சந்திப்போட ஆறிப்போன படங்கள் இங்கே எனது பதிவில் உள்ளன!

ஸ்ரீ.... said...

பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தவர்களில் நானும் ஒருவன். தகவலுக்கு நன்றி.

ஸ்ரீ..

அத்திரி said...

//சந்திப்போட ஆறிப்போன படங்கள் இங்கே எனது பதிவில் உள்ளன!//

படங்கள் நன்றாக இருந்தது ஊர்சுற்றி நன்றி

//பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தவர்களில் நானும் ஒருவன். தகவலுக்கு நன்றி.//

நன்றி SRI

Anonymous said...

:)

வனம் said...

வணக்கம் அத்திரி

மீண்டும் உங்களை எப்படி பிடிப்பது என்று நிணைத்துக்கொண்டு இருந்தேன்

ம்ம்ம்ம் பிடித்துவிட்டேன்

இன்றுதான் மீண்டும் அலுவலகம் வந்தேன்

நிறைய பதிவுகள், ஒரு அவசர பார்வை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்

மீண்டும் வருவேன்

நன்றி
இராஜராஜன்

அத்திரி said...

//:)//

வெறும் சிரிப்பு மட்டும்தானா நன்றி தூயா

அத்திரி said...

//வணக்கம் அத்திரி
மீண்டும் உங்களை எப்படி பிடிப்பது என்று நிணைத்துக்கொண்டு இருந்தேன்
ம்ம்ம்ம் பிடித்துவிட்டேன்
இன்றுதான் மீண்டும் அலுவலகம் வந்தேன்
நிறைய பதிவுகள், ஒரு அவசர பார்வை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்

மீண்டும் வருவேன்
நன்றி
இராஜராஜன்//

முதல் வருகைக்கு நன்றி ராஜராஜன்...