Tuesday, December 9, 2008

நடுநிலை -- தமிழ்த்தொலைக்காட்சிகளின் பார்வையில்

சன் டிவி--

(ஒன்னு கூடுவதற்கு முன்னால்)
தமிழகமெங்கும் மின்வெட்டு, ஆர்ப்பாட்டம், அமைச்சர்களின் ஊழல்
கலைஞரின் அறிக்கை 1நிமிடம்
அம்மாவின் அறிக்கை 4நிமிடங்கள்!!!!!
விசயகாந்த், சரத் அறிக்கை
தலைவர் கலைஞருக்கு கட்டுப்படுவேன்!!!!
அழகிரியின் அக்கிரமம்!!!
தளபதி ஸ்டாலின்


(ஒன்னு கூடியதற்கு பின்னால்)
மின்வெட்டை அரசு சமாளிக்கிறது.???
தாத்தா கலைஞர்,மாமா அழகிரி,மாமா ஸ்டாலின்??!!!
கலைஞரின் அறிக்கை 4நிமிடங்கள்
ஜெயாவின் அறிக்கை 1நிமிடம்???
விசயகாந்து, சரத்தை காணோம்
மதுரை தமிழ்நாட்டுல எங்க இருக்கு???

கலைஞர் டிவி-
(அமொவுன்ட் ரவுண்டா வருவதற்கு முன்னால்)
சன் டிவி,தினகரன் பொய் விஷம பிரச்சாரம்
மின்வெட்டா? கழக ஆட்சியில் தமிழகம் செழிக்கிறது.
காடுவெட்டி குரு கூட்டணி காண்டில் கைது.
வளர்த்த கடா மார்பில் பாயுது.


(அமொவுன்ட் ரவுண்டா வந்ததுக்கு அப்புறமா)
நெஞ்சம் இனித்தது, கண்கள் பணித்தன,கைகள் எண்ணியது.
அன்பு, புகழ்
சமுதாய செம்மல் குருவே வருக


ஜெயா டிவி--
மைனாரிட்டி திமுக அரசு, ஆர்ப்பாட்டம்,
கருணாநிதி ராஜிநாமா
இருண்ட தமிழகம் கருணாநிதி ஆட்சியில்
இந்தியாவுல பூகம்பமே வந்தாலும்
அம்மா அறிக்கை தான் முதலில்
புதுசா கம்யூனிஸ்ட் தோழர்கள்


மக்கள் டிவி--
( கூட்டணியில் இருக்கும் போது)
அய்யாவின் வழிகாட்டுதலில் தமிழகம் முன்னேறுது.
( கூட்டணியிலிருந்து தூக்கியெரிந்த பிறகு)
அய்யோ மின்வெட்டு, விலைவாசி, குடியில் தமிழகம் தடுமாறுது
சமூக நீதிக்காவலன் குரு கைது.
மாநில அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி


ராஜ் டிவி--
தங்கத்தலைவன் கலைஞரின் ஆட்சியில் தமிழகம் பூத்து குலுங்குது.
(இப்போது)
ஒன்னுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது,
மர்மமா இருக்குது,
இருந்தாலும் கலைஞர் ஆட்சி நல்லா இருக்கு.





இன்னும் ஏதாவது இருந்தா சொல்லுங்கடே சேத்துக்கிறேன்

15 comments:

Anonymous said...

மக்கள் தொலைக்காட்சியை ஏன் ஐயா வம்புக்கு இழுக்குறீங்க...

தமிழ்நாட்டு மக்களை சிந்திக்கவிடாம குட்டிச்சுவரா மாற்றும் வேலையில் சிறப்பாக செயலாற்றும் தொலைக்காட்சிகளுக்கு நடுவில்...

தமிழ்நாட்டுல உருப்படியான நிகழ்ச்சிகளை தரும் அந்தத் தொலைக்காட்சியை பாராட்டுவோம்.

அத்திரி said...

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் எனக்கும் பிடிக்கும். நான் சொன்னது செய்திகளை பற்றிதான்.

நன்றி கரிகாலன்

astle123 said...

மிகவும் இரசிக்க வைத்த பதிவு.

தமிழக ஊடகங்களின் அவல நிலையை நையாண்டியுடன் எடுத்து சொல்லி உள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்!!

அத்திரி said...

//மிகவும் இரசிக்க வைத்த பதிவு.
தமிழக ஊடகங்களின் அவல நிலையை நையாண்டியுடன் எடுத்து சொல்லி உள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்!!//


வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வீரன்

Anonymous said...

if you want to hear real news that is whats happening in tamil nadu u should see WIN tv

அத்திரி said...

//if you want to hear real news that is whats happening in tamil nadu u should see WIN tv//

விண் டிவி---
அம்மாவே சரணம்
பிஜேபியும் சரணம்


நன்றி ஹுசைன்

அத்திரி said...

//:-)))//



என்ன கிரி வெறும் சிரிப்பு தானா???

நன்றி

ஆட்காட்டி said...

,,,,

RAMYA said...

எல்லாத்தையும் நீங்களே சொல்லிடீங்களே
எண்ணாக பாக்கி இருக்கு
ரொம்ப நல்லா செய்தி தயாரிக்கிறீங்க
Suuuuuuuuuuuuuuuper

RAMYA said...

எல்லாத்தையும் நீங்களே சொல்லிடீங்களே
எண்ணாக பாக்கி இருக்கு
ரொம்ப நல்லா செய்தி தயாரிக்கிறீங்க
Suuuuuuuuuuuuuuuper

அத்திரி said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரம்யா

Anonymous said...

இவர்களுடைய நடுநிலை இவ்வளவுதான். வேறு எந்த மாநிலத்திலும் இப்படி அரசியல் கட்சிகள் சேடிலைட் டிவி ஆரம்பித்து தாங்கள் நினைப்பவற்றை மக்களிடம் திணிப்பது இல்லையென்றே நினைக்கிறேன்.

அத்திரி said...

எனக்குத் தெரிந்து கர்நாடகாவில் தேவகவுடாவின் குடும்பத்திலிருந்து கஸ்தூரி எனும் சேனல் செயல்படுது. மற்றபடி எல்லா மாநிலங்களிலும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரிக்கும் சேனல்களும் இருக்கு... ஆனா நம்ம தமிழ்நாட்டுலதான் அரசியல் கட்சிகள் சேனல்களை நடத்துகின்றன.

நன்றி பதிவு.

Anonymous said...

Vijay TV??

அத்திரி said...

விஜய் டிவில தான் நியூஸ் எதுவும் இல்லையே.

நன்றி குணா