Sunday, 14 December, 2008

பதிவுலக மாவீரன் பட்டம்-- சென்னை பதிவர் சந்திப்பில்

பதிவுலகுக்கு வந்து ஒரு 6 மாசம் ஆகிப்போச்சு. இந்த 6 மாசத்துல தமிழ்மணத்துல வாரத்துல ஒரு தடவையாவது நம்ம பதிவருங்க முகம் தெரியாத யாரோடவாவது சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி எழுதுற பதிவும் சில நிமிடங்களில் சூடான பகுதிக்கு போயிடும். ஒரு வேளை தங்களை எல்லோரும் கவனிக்கனும்னு சண்ட போடுறாங்களோ என்னவோ?

இப்படி வாரா வாரம் முகம் தெரியாதவங்களோட சண்ட போடுறவங்களுக்கு நேரடியா சண்ட போடுவதற்கு ஒரு அரிய வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதிஙக. தமிழனுக்கு அடுத்தவனோட மறைமுகமா சண்ட போடுறாதுன்னா ரொம்ப பிடிக்கும்.அதுவும் பதிவுலகில கேக்கவே வேணாம். எப்படினாலும் திட்டிக்கலாம். கண்டிப்பா நேர்ல வரமுடியாதுன்ற தைரியம்தான். எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்குறது.

அதனால இந்த அரிய வாய்ப்பை பதிவர்கள் முக்கியமா மாவீரன்னு பேரெடுக்க வெறியா இருக்கும் பதிவர்கள் இதை பயன்படுத்திக்கலாம்.
அதாவது வருகிற சென்னை பதிவர் சந்திப்புல இந்த வீரவிளையாட்டு அறிமுகப்படுத்தப்போறோம்.என்கிட்ட ஒரு நாலஞ்சு அருவா சும்மாத்தான் இருக்கு. அதை எடுத்துக்கிட்டு வர்றேன். ஒரே நேரத்தில் இருவர்தான் சண்டையிட முடியும். ஜெயிக்கிறவங்களுக்கு 5 அடி திருப்பாச்சி அருவாவும், 5 கிலோ அல்வாவும் பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் கலந்துக்கனும்னா போட்டி அமைப்பாளர் அதிஷாவை தொடர்பு கொள்ளவும்.

நடுவர்களா மாறவர்மன் நர்சிம்மும்,அக்னிபார்வையும் இருப்பாங்கோ.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி தாமிரா, முரளி கண்ணன்


பரிசுகள் வழங்வோர் : வீரத்தளபதி ஜே.கே. ரித்தீஸ் ரசிகர் மன்ற பொருளாளர் திரு. புதுகை அப்துலா அண்ணாச்சி


போட்டி நடைபெறும் இடம்: மெரினா பீச் காந்தி சிலைக்கு பின்னால்.

போட்டி நடைபெறும் நாள் : அதிஷா,லக்கி, முரளி கிட்ட கேளுங்க.


பின்குறிப்பு : அருவாளை கையில வச்சி தான் சண்ட போடனும்.

20 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னால் கத்திச் சண்டை போட முடியாது. உங்களுக்காக, கத்தி, சண்டை போடுகிறேன் :)

கார்க்கி said...

வீரனை விட சிறந்தவன் மாவீரன். அப்போ அவரை ஜெயிப்பவர்கள் என்ன மாமா வீரனா?

குப்பன்_யாஹூ said...

அருவா எல்லாம் அந்தக் காலம், பாம் (வெடிகுண்டு ) போடறதுதான் இப்போ பேஷன் . நாரைகினறு நாராயண தேவர்ட்ட சொல்லி ஆறு வெடிகுண்டோட வாரேன்.


குப்பன்_யாஹூ
தாழையூத்து ஒன்றியம்.

தராசு said...

தேதிய மட்டும் சொல்லுங்க, வந்து கலக்கிருவ்ம்ல

தராசு said...

தேதி எப்ப சொல்லுவீங்க, ஒரு 20ம் தேதிக்கு மேல வைக்கலாமே?

அத்திரி said...

//என்னால் கத்திச் சண்டை போட முடியாது. உங்களுக்காக, கத்தி, சண்டை போடுகிறேன் :)//

நன்றி சுந்தர் சார்.


//வீரனை விட சிறந்தவன் மாவீரன். அப்போ அவரை ஜெயிப்பவர்கள் என்ன மாமா வீரனா?//
அந்த மாவீரன்!!!! யார் சகா

நன்றி சகா

அத்திரி said...

//அருவா எல்லாம் அந்தக் காலம், பாம் (வெடிகுண்டு ) போடறதுதான் இப்போ பேஷன் . நாரைகினறு நாராயண தேவர்ட்ட சொல்லி ஆறு வெடிகுண்டோட வாரேன்.//

எப்பவுமே அருவாதான் பெஸ்ட். நீங்க தாழையூத்தா.. நான் படிச்ச ஊராச்சே..

நன்றி குப்பன்

அத்திரி said...

//தேதிய மட்டும் சொல்லுங்க, வந்து கலக்கிருவ்ம்ல
தேதி எப்ப சொல்லுவீங்க, ஒரு 20ம் தேதிக்கு மேல வைக்கலாமே?//

தேதி அதிஷா கிட்ட கேளுங்க தராசு.

வருகைக்கு நன்றி தராசு

Sharepoint the Great said...

ஆகா

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

அதிஷா said...

நண்பா அதுக்குள்ள சீக்ரட் எப்படி கசிஞ்சிச்சு...

உளவுத்துறை மிக நன்றாக வேலை செய்கிறது போலிருக்கிறது..

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும்னு நினைக்கிறேன்..

அத்திரி said...

//ஆகா

வாழ்க வளமுடன்//

வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்

அத்திரி said...

//நண்பா அதுக்குள்ள சீக்ரட் எப்படி கசிஞ்சிச்சு...
உளவுத்துறை மிக நன்றாக வேலை செய்கிறது போலிருக்கிறது..//

உளவுத்துறை வேலையெல்லாம் கிடையாது. தேதி 15 தாண்டிருச்சி யாருமே எதுவும் சொல்லல. அதான்.
எப்ப நண்பா சீக்கிரம் சொல்லுங்க.
நன்றி athishaa

Cable Sankar said...

எதுக்கும் நாம கொஞ்சம் சாக்ரதையா இருந்துக்க வேண்டியது தான் போலருக்கு..

அத்திரி said...

வரும்போது நீங்களும் ஏதாவது கொண்டு வாங்க சார்.

நன்றி கேபிள் சார்

லக்கிலுக் said...

அதிரடி மன்னன் ஜோசப் பால்ராஜ் சென்னை வருகிறார். அதையொட்டி சந்திப்பை வைத்துக் கொள்ளலாமா என்று நண்பர்கள் சொல்லவும்.

சென்னைப் பதிவர் சந்திப்புக்காக ஒரு கூகிள் க்ரூப் ஆரம்பித்து விட்டால் இந்த கந்தாயங்களை விவாதிக்க வசதியாக இருக்கும்.

narsim said...

வணக்கம் சகா..

அத்திரி said...

எப்ப வேணும்னாலும் வச்சிக்கலாம் லக்கி. தேதிய மட்டும் சொல்லுங்க.

நன்றி லக்கி

//வணக்கம் சகா..//

வெறும் வணக்கம் மட்டும்தானா சகா.

நன்றி நர்சிம்

மெல்போர்ன் கமல் said...

நாங்களும் வரட்டுமா???

pathivu said...

அருவாளும் அல்வாவும் தான் பரிசா? எனக்கு வேண்டாம்.

அத்திரி said...

//நாங்களும் வரட்டுமா???//

தாராளமா வரலாம்.. கமல். நன்றி

//அருவாளும் அல்வாவும் தான் பரிசா? எனக்கு வேண்டாம்.//

வேண்டாம்னு சொன்னா விட்டுடுவமா...!!!!!

நன்றி பதிவு.