Monday, 15 December, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்- பயங்கரவாதிகளை அத்வானி ஒப்படைப்பாரா?

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள்.என்ன செய்யப் போகிறார்கள்? தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா? கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா? முப்படைகளையும் வழி நடத்துவார்களா?


ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும் சேனல்களால் செய்யவைக்க முடிந்தால் அதுவே பெரிய சாதனை தான். தாஜ், ஓபராய் ஓட்டல்கள் இருக்கும் தென் மும்பை மக்களவைத் தொகுதியில் சென்ற தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களைப் போல இரு மடங்கு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டே போடவில்லை!பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம்.


இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும்.ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள்.


ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா? காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும்.


பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது.ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன? உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா?இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.


காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது.காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம்.

பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான்.பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது.சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று நிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான்.

இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை.தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை.


பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இத்தகைய மோசமான சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல. ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள்.

இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும்.பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான்.

அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும்.


தன் மதவாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா?.

நன்றி குமுதம்

14 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நான் குமுதத்தில் படித்தேன். இந்தச் சூழலில் மிக முக்கியமான கட்டுரை.

அத்திரி said...

நன்றி சுந்தர் சார்

Anonymous said...

அத்வானி அப்படிச் சொன்னவுடன்
ஜிகாதிகள் எல்லோரும் தில்லிக்கு
வந்து நாங்கள் இந்தியாவை இனி
தாக்கமாட்டோம் என்று உறுதி
மொழி கொடுத்து சரணடைவதாக
ஞாநியிடம் சொன்னார்களா.உளறலுக்கு
ஒரு எல்லையே இல்லையா.
உலகமே பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக கருதி கண்டிக்கும் போது இங்கே ஒருத்தர் அத்வானிதான்
பயங்கரவாதின்னு காமெடி பண்ணுகிறார்.

சுல்தான் said...

இப்போதைய நிலைமையில் மிகவும் தேவையான கருத்துகள்.

//அத்வானி அப்பச் சொன்னவுடன்
ஜிகாதிகள் எல்லோரும் தில்லிக்கு
வந்து நாங்கள் இந்தியாவை இனி
தாக்கமாட்டோம் என்று உறுதி
மொழி கொடுத்து சரணடைவதாக
ஞாநியிடம் சொன்னார்களா.உளறலுக்கு
ஒரு எல்லையே இல்லையா.
உலகமே பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக கருதி கண்டிக்கும் போது இங்கே ஒருத்தர் அத்வானிதான்
பயங்கரவாதின்னு காமெடி பண்ணுகிறார்//
//பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.//

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் பெயரில்லாதவறே?

Anonymous said...

//பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான்.
அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும் //

This is the best one. Adhvani has to ask appology ....

Anonymous said...

Advani should ask appology to every indian...

vinoth said...

அவர்கள் செய்த பாபர் மசூதி இடிப்பு தான் இப்பொது நடக்கும் எல்லாம் பயங்கரவாதத்திற்கும் காரணம் என்றால்..இப்பொது நடக்கும் இந்த பயங்கரவாத செயலை காரணம் காட்டி நாளையே சில திவிரவாதிகள் உருவாகலாம்..அதையும் நாளை திரு.ஞானி அவர்கள் அதரவு தெரிவிப்பார்.. அப்படி பார்த்தல் இந்த chain reaction activities முகலாயர்களின் இந்தியா படையெடுப்பின் காலத்தில் இருந்தே இரு தரபினரும் எதோ ஒரு வகையில் ஞாய படுத்த முடியும்.
எந்த மத தீவிரவாதமாக இருந்தாலும் செறி அது களைய பட வேண்டும் அவளவே..

Anonymous said...

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் ஜிகாதிகள் தீவிரவாத செயல்கள்
செய்வது 1980களின் கடைசி ஆண்டுகளில் நடந்த போதும்
அதைக் காரணம் காட்டி இந்துக்கள்
மதக்கலவரத்தில் ஈடுபடவில்லை.
ஞாநி அதைப் பற்றி ஏன் எழுதவில்லை.முஸ்லீம்களின் அடிப்படைவாதத்திற்கு தூபம்
போடுகிறார் ஞாநி.
‘அப்படி பார்த்தல் இந்த chain reaction activities முகலாயர்களின் இந்தியா படையெடுப்பின் காலத்தில் இருந்தே இரு தரபினரும் எதோ ஒரு வகையில் ஞாய படுத்த முடியும்.
எந்த மத தீவிரவாதமாக இருந்தாலும் செறி அது களைய பட வேண்டும் அவளவே..'

இந்தியாவில் உள்ள இந்த ‘அறிவு ஜீவி'களின் வேலையே முஸ்லீம்களுக்கு ஆதரவாக
பேசி,எழுதி, இஸ்லாமிய தீவிரவாதத்தினை நியாயப்படுத்துவதுதான்.
ஞாநி அதைத்தான் செய்கிறார்.

'இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்'.

யாரோ நான் குழம்பியிருக்கும் போது
கொலைச் செய்யத் தூண்டினால்,
அதன்படி நான் செய்தால், நான் செய்வது சரியாகிவிடுமா?.
ஞாநியால் இந்துக்கள் மனநிலையை
புரிந்து கொள்ளவே முடியாது.
முஸ்லீம்கள் கலவரத்தில்
ஈடுபட்டதே இல்லையா.
வெள்ளைக்காரன் காலத்திலும்
மதக்கலவரங்கள் நடந்தனவே.
அப்போது அத்வானி பிறக்கவே
இல்லையே.

அத்திரி said...

//எந்த மத தீவிரவாதமாக இருந்தாலும் செறி அது களைய பட வேண்டும் அவளவே..//


நன்றி வினோத்.. சரியாச் சொன்னீங்க

அத்திரி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுல்தான்

அத்திரி said...

பின்னூட்ட்மிட்ட பெயரில்லாதவர்களுக்கும் நன்றி

Anonymous said...

This man is in some serious trouble. My question to all those who think only after Babar Masjid every problem.

1) In 1977 during asiam Islamic conference in pakistan Indian Islamisic representative told that "Pakistan" should lead all the world muslims.Further he said that " We are depressed after pakistan's loss in 1971".
Which Babri Masjid made them to tell like that

2) In 1920 when Malayalis are butchered in their home land. I request Mr.Nyani to investigate and tell some reasons to justify that too. Similarly he can justify Osama,Dawood etc..

Muthu Raj

எழில் said...

பயங்கர காமெடியன் இந்த ஞாநி..
Historical Survey of some major communal riots. in India from 1953


பாபர் மசூதிக்கு முன்னால் இந்தியாவில் கலவரங்களே நடக்கவில்லையா? அவற்றில் இந்துக்களே இறக்கவில்லையா?

POLITICS OF COMMUNALISM
By Ms Zenab Banu

Appendix IV, Page 175-193 Historical Survey of some major communal riots.

1. 1953 Viramgaom Holi festival (muslims stabbed holi revellers)
2. 1953 Bhopal Stone throwing by some miscreants at a procession taken by the Hindu Mahasabha to protest against cow slaughter (muslims stone hindu procession)
3. 1953 Gauhati Angry crowed tried to prevent a Muslim family from sacrificing cow (illegal muslim cow slaughter)
4. 1953 Ahmedabad, Nasik, Ganapati festival and Moharram Poona, Sangli... coincide 1953 Ahmedabad ---do--- (muslims with Moharam swords attack hindu procession)
5. sept.1953 Poona Arson bid in Poona (Unknown)
6. 1953 Sholapur Ganpati immersion day playing music before a mosque. (muslims attack hindu procession)
7. 1953 Jamnagar A boy stabbing a cow near a hotel (illegal muslim cow slaughter)
8. 1954 Ghaziabad Slaughter of a stolen cow (illegal muslim cow slaughter)
9. 1954 Aligarh Over the price of a melon between a hawker and a customer (unknown)
10. 1954 Nizamabad Some persons hoisted the Pakistani flag on the statue of Mahatma Gandhi. (so even Gandhi's muslim appeasement did not help , muslim initiated)
11. 1954 Mathura Some persons broke the idol of Krishna which was installed for worship in a temple near Idghah mosque (muslim desecrate hindu temple)
12. 1954 Gulbarga, Mannila, Pakistani flag was hoisted over a Fatehpur. temple of Ganesh. (muslim desecrate hindu temple)
13. 1956 Bhopal Holi festival - Muslims threw bones in the Holi fire and an idol in a temple was defiled (muslim desecrate hindu temple)
14. 1956 Sholapur Rival claims to a shrine made by the two communities. (unknown)
15. 1956 Many parts of UP A publication of the Bhartiya Vidya Bhavan alleging insulting reference on prophet Mohammed. (Muslim hyper sensitivity)
16. 1956 Jabalpur Forcibly closing down of shops in protest against damage to an idol of Ganapati (muslim desecrate hindu temple)
17. 1956 Khamgaon Attack on a Ganapati procession before a mosque by a crowd (muslims attack hindu procession)
18. 1957 Hazaribagh A clash between students in Moharram procession (muslims with swords attack hindus)
19. 1958 Belgaun A procession of Hindus with music before a mosque (muslims attack hindu procession)
20. 1958 Dulhia Unauthorised cow slaughter (illegal cow slaughter by muslims)
21. 1958 Yeola Muslims objecting a procession of Ganpati Idol (muslims attack hindu procession)
22. 1958 Bagalkot A procession of RSS was stoned near Panka mosque (muslims attack hindu procession)
23. 1959 Lucknow Sprinkling of clour on Muslim on Holi festival by a Hindu 1959 Bhopal ----do---- (muslims attack holi revellers)
24. 1959 Sitamashi Spreading of a rumour that a cow was slaughtered (illegal cow slaughter by muslims)
25. 1960 Hubli Idol of Maruti disfigured by someone (muslims desecrate hindu temple)
26. 1960 Firozabad Ramlila procession 1960 Saharanpur Ramlila procession (muslims attack hindu procession)
27. 1961 Jabalpur, Sangore Effort to molest a Hindu girl Narsinghpur, Damoh (muslims rape hindu girl)
28. 1961 Many cities in UP Aligarh University hostel boy when misbehaved with hostel girl (muslims rape hindu girl)
29. 1961 Palanpur Discovery of animal bones in the palace of worship (muslims desecrate hindu temple)
30. 1961 Bhopal Meeting of Jana Sangh Dist. Committee (unknown)
31. 1961 Vidisha, Bhopal Hindu procession being disturbed by Muslims (muslims attack hindu procession)
32. 1962 Sikundra Slaughter of a cow (illegal cow slaughter by muslims)
33. 1962 Malda in WB A week's agitation against the publication of a picture of Mohammed (hypersensitivity of muslims)
34. 1962 Agra A quarrel between two persons belonging to opposite communities (unknown)
35. 1962 Mandsaur A dispute over a business transaction (unknown)
36. 1962 Bareilly Throwing of stones on a procession of Hindus passing through Muslim residential area (muslims attack hindu procession)
37. 1962 Ratanagiri Ganpati procession attacked by Muslims (muslims attack hindu procession)
38. 1963 Junagarh Criminal assault by two Muslim youths on a Hindu girl (muslims rape hindu girl)
39. 1963 Islampur Muslim participants of Moharram procession attacked by the police with lathi (Police ??)
40. 1963 Akola Ganpati idol was attacked by stones (muslims attack hindu procession)
41. 1963 Nadia, Calcutta Hair of Mohammed from Hazratbal mosque were stolen 1963 Srinagar ---do--- (muslim hyper sensitivity)
42. 1964 Bihar, Orissa Train carrying refugees of East Pakistan (hindu reprisals)
43. 1965 Udaipur Scuffle between the two neighbors of opposite community 1966 Udaipur Scuffle between the two wrestlers of two communities (unknown)
44. 1967 Ranchi Brick batting on the Urdu agitators' procession (hindus)
45. 1967 Srinagar Religious conversion and marriage of a girl of the Pandi community to a Muslim youth (muslims abduct hindu girl)
46. 1968 Meerut A conference organised by the Jamaat-e- Islami in a college and a procession crossed by Jan Sangh (unknown)
47. 1968 Karimganj Scuffle between two boys of opposite community on a cow of a Muslim (Illegal cow slaughter)
48. 1968 Vizhinjam Clash between Muslims and Christians when Muslims embarked on aggressive violent acts against catholics (Muslims attack catholics)
49. 1968 Allahabad Holy reveller threw water color on a Muslim who pulled out a pistol (muslims attack holi reveller)
50. 1968 Auditanda Ramnavmi procession (muslims attack hindu procession)
51. 1968 Manglore Muslims had assaulted a Hindu fisherman (muslims)
52. 1968 Aurangabad A Muslim backery servant's attack on a cow with a knife (Illegal cow slaughter)
53. 1968 Nagpur Scuffle between a Muslim barber and a Neo Buddha (muslims)
54. 1968 Parbhani A Hindu college student stabbed by one Muslim Rikshaw puller (muslims)
55. 1968 Mabajogi Scuffle among students (unknown)
56. 1968 Pupri Durga procession passed through a Muslim inhabited area 1968 Gumdum A Hindu procession 1968 Cuttack Music in front of mosque (muslims attack hindu procession)
57. 1968 Veeranal News of a death of a Muslim in his house (muslims)
58. 1969 Kendrapa Music near a mosque (muslims attack hindu procession)
59. 1969 Calcutta Muslim demonstration before the office of the 'Statesman' (muslim hypersensitivity)
60. 1969 Anjar A clash between two persons of opposite community (unknown)
61. 1969 Hubli Muslims objected to throwing of colored water on them on Holi (muslims attack holi revellers)
62. 1969 Mau in UP Beating of a Hindu boy by Muslim boys (muslims)
63. 1969 Anjar An armed mob of Muslims attacked Hindus (muslims)
64. 1969 Gujarat Mutual suspician and animosity between two communities (unknown)
65. 1969 Ahmedabad Atack on Jaganath tmple by Muslims 1969 Other cities in Guj. Repurcussions of above (muslims)
66. 1970 Chaibasa Ram Navmi procession (muslims attack hindu procession)
67. 1970 Bhiwandi and other Beginning with a quarrel between two parts of Maharashtra persons of opposite communities (unknown)
68. 1972 Tonk Bakri Id 1972 Banaras Bakri Id (illegal muslim cow slaughter)
69. 1973 Delhi Two groups of miscreants clashed at Bara Hindu Rao area (unknown)
70. 1974 Jugeshwari Anti-Muslim feeling injected by Shiv Sena workers in the minds of general people (Shiv Sena)
71. 1974 Delhi Quarreling of two persons belonging to two opposite communities. (unknown)
72. 1975 Jogeshwari Militant action of Shiv Sena volunteers (Shiv Sena)
73. 1977 Chittorgarh Id Festival (illegal muslim cow slaughter)
74. 1977 Banaras Durga procession (muslims attack hindu procession)

90 சதவீத கலவரங்கள் முஸ்லீம்கள் ஆரம்பித்தவை. அவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? பாபர் மசூதியா?

இந்த லூஸு அறிவுஜீவிகள் உளறுவதற்கு அளவே இல்லை.

இந்த மாதிரி உளறியதும் அதுதாண்டா சாக்கு என்று இணைய இஸ்லாமிய ஜிகாதிகள் வேறு குத்தாட்டம் போடும்.

தூ..

அத்திரி said...

தகவலுக்கு நன்றி எழில்.

வருகைக்கு நன்றி .