Tuesday, 13 January, 2009

தைப்பொங்கல் --சில நினைவுகள் --- வில்லு???(((((((

நாளைக்கு பொங்கல் பண்டிகை. சென்னை போன்ற பெரிய நகரங்களில் பொங்கல் பண்டிகை ஒரு குக்கர் விசில் சத்தத்தில் ஆரம்பித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முடிந்துவிடும். எனக்கும் அப்படித்தான் சென்னை வந்த பிறகு.

" ஏங்க பொங்கல் வரப்போவுது ஒரு கரும்பு கூட இன்னும் வாங்கலையே". எங்க வீட்ல இருக்கும்போது என் அண்ணன் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வாங்கி கொடுத்திடுவார்"
"எனக்கு கூடத்தான் சின்ன வயசுல எங்க வீட்டில எல்லாம் வாங்கி கொடுப்பாங்க"..
"நேத்து வரைக்கும் பள்ளிக்கரணையில ஒரு கடையில கூட கரும்பு இல்லப்பா..லாரி ஸ்ட்ரைக் முடிஞ்சிருச்சி.. இன்னைக்கு வாங்கிட்டு வாரேன்"..இப்படியேத்தான் போவுது.


பொதுவாக கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் அதாவது சுண்ணாம்பு அடித்தல், வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துதல் என பல வேலைகளில் மக்கள் அனைவரும் 15நாட்களுக்கு முன்னரே ரொம்ப பிசி ஆகிடுவாங்க. சென்னையில் இந்த மாதிரி வேலைகளை பொங்கலுக்கு பார்ப்பது மிகவும் அரிது.பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு வீடு முழுவதும் அம்மா சுண்ணாம்பினால் கோலமிடுவதை அருகில் உட்கார்ந்து பார்க்கும் அழகே தனி...பொங்கல் அன்றைக்கு அதிகாலை 5 மணிக்கு எழுந்து ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பாவிடம் திட்டு வாங்கிகொண்டே ஆற்றில் குளிப்பது தனி சுகம்.

பொங்கல் வைப்பதற்கு வயலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்மணிகளை கொஞ்சம் எடுத்து வருவோம்.. புது அரிசிதான் பொங்கலுக்கு.. ஆனா இப்போது அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு காத்திருக்கிறோம்.. பொங்கல் வைப்பதற்கு பனைமர ஓலை அல்லது தென்னை மர ஓலை தான் எரிக்க பயன் படுத்துவோம்.. அந்த காலை குளிருக்கு இந்த சூடு நல்ல இருக்கும்.
 
காலையில் வெறும் சக்கரைப்பொங்கலையும், கரும்பையும் முடித்து விட்டு எப்படா சாப்பாடு ரெடியாகும் என்று ஆகிவிடும்.. எல்லா வகை காய்கறியையும் போட்டு வைக்கும் சாம்பார் வாசம் தெரு முனை வரைக்கும் மூக்கை துளைக்கும். மாட்டுப்பொங்கல் அன்றைக்கு விளையாட்டுப்போட்டிகள்தான் ஹைலைட் கபடி போட்டியில் ஜெயித்தது... ஒட்டப்பந்தயத்தில் இரண்டாவதா வந்தது.( மொத்தம் 5 பேர் ஓட ஆரம்பித்தோம் நான் கடைசிக்கு முன்னதாக இருந்தேன். ஆனால் 3பேர் எல்லைக்கோட்டை தொடாமல் திரும்ப வந்ததால் அப்பீட்டு)...ஆங்.... நேத்து நம்ம குடுகுடுப்பையார் வில்லு விமரசனம் நல்ல எழுதியிருந்தார்...என்னுடைய நண்பன் அஜித்,விசய் படம் ரெண்டையும் முதல் நாள்லயே பாத்திடுவான்.. கடைசியா ஏகன் பாத்திட்டு மறுநாள் பேயறைஞ்ச மாதிரி வந்தான். அந்த அளவுக்கு படம் தாக்கிரிச்சி போல. குடுகுடுப்பையார் விமசர்சனத்தை படிச்சும் சொல் பேச்சுக் கேக்காம நேத்து போய் பாத்துட்டான்.


" என்ன மாமா படம் எப்படிடா இருக்கு"
" டேய் தியேட்டர் பக்கமே போயிடாத... குருவி படமே பரவாயில்லடா...நயந்தாரா மட்டும் ஓகே... தாங்கலடா சாமீ" வில்லு தாக்குதல் ஒரு வாரம் இருக்கும் போல... அதனால மக்களே......பத்து சூதானமா நடந்துக்குங்க..


SMS ல் வந்த கவிதை

அழகு சிலைகள் அனைத்தும்
அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்
"அவள்" கோவிலை சுற்றி வரும் போது

டிஸ்கி: என்னோட சிறந்த மொக்கை படங்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்த நாயகன் படம் கலைஞர் தொலைக்காட்சியிலும், இரண்டாம் இடத்தை பிடித்த பழனி சன் தொலைக்காட்சியிலும் பார்த்து மகிழ்ந்து பொங்கலை கொண்டாடுங்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்

17 comments:

நட்புடன் ஜமால் said...

\\அழகு சிலைகள் அனைத்தும்
அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்
"அவள்" கோவிலை சுற்றி வரும் போது\\

அழகு கவிதை.

வில்லு பற்றி லொள்ளு - வுடன் இந்த கவிதையா ...

KaveriGanesh said...

பொங்கல் நாளில் இன்னொறு அற்புதம் நடக்க இருக்கிரது, அது நம்ம JKR படம் கலைஞர் தொலைகாட்சியில்
அது பற்றிய பதிவு.


http://kaveriganesh.blogspot.com/

அ.மு.செய்யது said...

உங்கள் பதிவில் இருந்த மண்வாசனை அழகு...படிக்க படிக்க ரம்மியமாக இருந்தது...

// பொங்கல் வைப்பதற்கு வயலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்மணிகளை கொஞ்சம் எடுத்து வருவோம்.. புது அரிசிதான் பொங்கலுக்கு.. ஆனா இப்போது அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு காத்திருக்கிறோம்.. //

இந்த‌ ப‌திவில் கூட‌ விட‌மாட்டீர்க‌ள் போல‌.....கலக்குறீங்க.....

பாபு said...

கரும்புடன் பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்

நிலா பிரியன் said...

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com

திகழ்மிளிர் said...

இனிய தமிழ்த் திருநாள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

கார்க்கி said...

நடத்துங்க.. நான் கம்முனு இருக்கிறேன்

நசரேயன் said...

நல்ல விளக்கம் பொங்கலுக்கு,பொங்கல் வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

ஆங்.... நேத்து நம்ம குடுகுடுப்பையார் வில்லு விமரசனம் நல்ல எழுதியிருந்தார்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

பொங்கல் வாழ்த்துகள்.

T.V.Radhakrishnan said...

பொங்கல் வாழ்த்துக்கள்

ச்சின்னப் பையன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்

Cable Sankar said...

பொங்கல் வாழ்த்துக்கள். அத்திரி..

தராசு said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஊர் சுற்றி said...

அத்தி்ரிக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

அத்திரி said...

//வில்லு பற்றி லொள்ளு - வுடன் இந்த கவிதையா ...//

டாக்டர் படம் ஊத்தினதுல இந்த லொள்ளு நன்றி ஜமால்

//இந்த‌ ப‌திவில் கூட‌ விட‌மாட்டீர்க‌ள் போல‌.....கலக்குறீங்க.....//

நன்றி செய்யது

//கரும்புடன் பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்//

நன்றி பாபு


நன்றி காவேரி கனேஷ்

அத்திரி said...

//நடத்துங்க.. நான் கம்முனு இருக்கிறேன்//

என்ன பண்றது சகா படம் ஊத்திக்கிச்சே/// நன்றி


//நல்ல விளக்கம் பொங்கலுக்கு,பொங்கல் வாழ்த்துக்கள்//

நன்றி புளியங்குடி அண்ணாச்சி

//ஆங்.... நேத்து நம்ம குடுகுடுப்பையார் வில்லு விமரசனம் நல்ல எழுதியிருந்தார்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

இதுக்கெல்லாம் அழப்பிடாது ஆங்............ நன்றி குடுகுடுப்பை

//இனிய தமிழ்த் திருநாள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்//

நன்றி திகழ் மிளிர்

அத்திரி said...

//பொங்கல் வாழ்த்துக்கள்///

நன்றி டி.வி.ஆர் ஐயா

//பொங்கல் வாழ்த்துக்கள்//

நன்றி ச்சின்னப்பையன்

//பொங்கல் வாழ்த்துக்கள். அத்திரி.//

நன்றி கேபிள் சார்

//இனிய பொங்கல் வாழ்த்துக்கள்//

நன்றி தராசு ஐயா

//அத்தி்ரிக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.//


நன்றி ஊர்சுற்றி