Saturday 17 January 2009

கில்லி- சிவசங்கர் மேனன் - கலைஞர்-திருமா--இலங்கை --அரசியலோ அரசியல்..

மாட்டு பொங்கல் அன்று உங்கள் சன் டிவியில் கில்லி படம் போட்டிருந்தாங்க... ம்ம்ம் நம்ம டாக்டர் விசய் இயல்பான நடிப்பு,அளவான வசனம்,நல்ல காமெடின்னு சும்மா கில்லி மாதிரி விர்ருன்னு நடிச்சிருந்தார்.... இந்த மாதிரி படம் இனிமே அவருக்கு கிடைக்குமா?. ஷாஜகான் படம் கொடுத்த படிப்பினைக்கு அப்புறம் விசய் படத்த முதல் நாள் பார்க்கும் பழக்கத்தை மறந்தேன்.. வில்லு படத்துல பல இடத்துல போக்கிரி படத்துல வசனம் பேசுர மாதிரியே இதுலயும் தாங்க முடியல சாமீஈஈஈஇ.........இலங்கை பிரச்சினை பற்றி பேச பிரணாப் முகர்ஜி இந்தியா சார்பில் இலங்கை செல்வதாக இருந்தது. இடையில என்ன உள்குத்து நடந்துதோ என்னவோ சிவசங்கர் மேனன் இலங்கை சென்றிருக்கிறார்.சிவசங்கர் மேனனின் திறமைய பற்றி நான் ஒன்றும் சொலவதற்கில்லை....அவர் இலங்கைக்கு சென்றிருப்பது போரில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குவது, சார்க் மாநாடு குறித்து பேசுவதற்காகவேன்னு ஒரு பேச்சு அடிபடுகிறது.போர்நிறுத்தம் பற்றி பேசுவது என்பது சந்தேகமே.. ஒருவேளை நம்ம கலைஞரின் தொல்லை தாங்காமல் வேற வழியில்லாம இவர அனுப்பியிருப்பாங்களோ என்னவோ. அப்ப பிரணாப்புக்கு விசா கிடைக்கலையா இல்ல விமான டிக்கெட் கிடைக்கலையா? பாவம் அவர் என்ன செய்வார் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓப்ப்டைக்கவேண்டும் என்ற ஒரு விசயத்துல எப்படி பேசனுமுனு அவருக்கு தெரியல....


நேற்று நம்ம கலைஞர் 1956ல் இருந்தே உன்னிப்பா கவனிச்சு தீர்மானம் போட்டதாக கூறியுள்ளார். மேலும் இலங்கைப்பிரச்சினைக்காக இன்னும் சில நாட்களாவது ( இல்ல இன்னும் சில காலமா)பொறுத்திருக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்..திருமா தன்னிச்சையாக உண்ணாவிரதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.இதுல இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது.ஈழப்பிரச்சினையில் யார் யாரையும் முந்திவிடக்கூடாது என்ற ராசதந்திரம் நல்லாவே தெரியுது. கலைஞருக்கு ஊதுகுழலாக ராமதாசு "கலைஞரின் சொல்படி திருமா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறார்....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

17 comments:

குடுகுடுப்பை said...

இலங்கை தமிழர்களை அகதியாவது தப்பிக்க ஏதாவது வழி பண்ணுவாங்களா?

We The People said...

//அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ//

லேட்டா புரியுது போல உங்களுக்கு :)

//மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.//

இன்று இரவே எதிர்ப்பார்க்கலாம் இந்த நாடகத்தின் கிளைமாக்ஸை!

ஈழம் பிரச்சனை பாராளமன்ற தேர்தல் கூட்டணிக்காக காத்திருக்கிறது என்று தோன்றுகிறது அது சம்பந்தமான என் பதிவை பார்க்கவும் அப்பொழுது விவரம் புரியலாம்..

கார்க்கி said...

/மாட்டு பொங்கல் அன்று உங்கள் சன் டிவியில் கில்லி படம் போட்டிருந்தாங்க... ம்ம்ம் நம்ம டாக்டர் விசய் இயல்பான நடிப்பு,அளவான வசனம்,நல்ல காமெடின்னு சும்மா கில்லி மாதிரி விர்ருன்னு நடிச்சிருந்தார்.... இந்த மாதிரி படம் இனிமே அவருக்கு கிடைக்குமா//

அந்த மாதிரி படங்கள் எல்லோருக்கு அடிக்கடி அமையாது.. பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை, து.மனமும் துள்ளும், குஷி, கில்லி,போக்கிரி என விஜய்க்கு பல படங்கள் அமைந்ததே பெரிய விஷயம்..

kajan's said...

விஜையேட படத்தில் அதுதான்க எனக்கு பிடித்த படம்

நசரேயன் said...

கில்லி, மேனன், முகர்ஜி மூனுமே அருமை

அத்திரி said...

//இலங்கை தமிழர்களை அகதியாவது தப்பிக்க ஏதாவது வழி பண்ணுவாங்களா//

அகதியா தப்பிக்க கூட வழி பண்ணமாட்டானுக... நன்றி குடுகுடுப்பையாரே


//இன்று இரவே எதிர்ப்பார்க்கலாம் இந்த நாடகத்தின் கிளைமாக்ஸை!//

கிளைமாகஸை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் நன்றி வீ தி பீப்பிள்


//அந்த மாதிரி படங்கள் எல்லோருக்கு அடிக்கடி அமையாது.. பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை, து.மனமும் துள்ளும், குஷி, கில்லி,போக்கிரி என விஜய்க்கு பல படங்கள் அமைந்ததே பெரிய விஷயம்..//

அடிக்கடி அமையாதுதான்... ஆனா வருசத்துக்கு ஒரு படமாவது கொடுக்கலாமே..அதுக்கு கூடவா வழியில்லாம இருக்காரு விசய்... நன்றி சகா

அத்திரி said...

//விஜையேட படத்தில் அதுதான்க எனக்கு பிடித்த படம்//

நன்றி கஜன்ஸ்


//கில்லி, மேனன், முகர்ஜி மூனுமே அருமை//

நன்றி புளியங்குடியாரே

jackiesekar said...

//அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ//


நான் ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை தலைவா

அத்திரி said...

//நான் ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை தலைவா//

நன்றி ஜாக்கி

கார்க்கி said...

/அடிக்கடி அமையாதுதான்... ஆனா வருசத்துக்கு ஒரு படமாவது கொடுக்கலாமே..அதுக்கு கூடவா வழியில்லாம இருக்காரு விசய்... நன்றி //

இரண்டு வருடத்துக்கு 3 படங்கள் மட்டுமே தருவதால் இது எல்லா ஆண்டும் அமையாது.. சமீபத்தில் விக்ரமுக்கும், சுர்ர்யாவிற்கும் க்ளீன் ஹிட் எப்போது கிடைத்தது? விக்ரமுக்கு அன்னியனும், சூர்யாவிற்கு பிதாமகனும்தான்.. இன்றைய இளைய தலைமுறையில் வினியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை விஜய் தான் என்று அவர்கள் சொல்கிறார்கள்.. அதிக சில்வர் ஜூப்ளி படங்கள் தந்ததும் விஜய்தான்

அத்திரி said...

சூர்யாவையும்,விக்ரமையும் விசயோடு ஒப்பிடாதீங்க சகா, அவங்க வேற ரூட்டு, இவரு வேற ரூட்டு. நான் கேட்டது கில்லி மாதிரி வருசத்துக்கு ஒரு படம் விசயால பண்ணமுடியாதா?.. வருசத்துல ரெண்டு.மூனு படம் அவரோடது வருது.. அத்தனையும் மொக்கைனா எப்படி முடியல சகா

மெல்போர்ன் கமல் said...

....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால்...//


நண்பா நலமா??
நண்பா கால்கள் போகும் பாதை தன்னில் வாழ்க்கை போகுமாம்!கடைசித் தமிழன் உள்ள வரை பயணம் தொடருமாம்!

அத்திரி said...

//நண்பா நலமா??
நண்பா கால்கள் போகும் பாதை தன்னில் வாழ்க்கை போகுமாம்!கடைசித் தமிழன் உள்ள வரை பயணம் தொடருமாம்!//


நம்பிக்கையுடன் இருப்போம் கமல்... நன்றி

RAMYA said...

இலங்கை தமிழர்களை தப்பிக்க வைக்க நான் இறைவனை மன்றாடி
கேடடு கொள்கிறேன்.
அவர்களை நினைத்தாலே
மனம் மிகவும் கனக்கிறது

அத்திரி said...

//இலங்கை தமிழர்களை தப்பிக்க வைக்க நான் இறைவனை மன்றாடி
கேடடு கொள்கிறேன்.
அவர்களை நினைத்தாலே
மனம் மிகவும் கனக்கிறது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரம்யா

thevanmayam said...

அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.///

உண்மைதான்
ஈழப்பிரச்சினையை
வைத்து எப்படி
அரசியல்
ஆதாயம்
தேடுவது
என்றுதான்
எல்லோரும்
அலைகிறார்கள்!!

தேவா...

அத்திரி said...

//உண்மைதான்
ஈழப்பிரச்சினையை
வைத்து எப்படி
அரசியல்
ஆதாயம்
தேடுவது
என்றுதான்
எல்லோரும்
அலைகிறார்கள்!!//

நன்றி தேவா