Thursday, 22 January, 2009

அபி ஜெயிச்சாச்சு-- கலைஞர் பயந்தாச்சு--- தொங்கபாலு பேரு நியுஸ்ல வந்தாச்சு...

ஏஹே அபி ஜெயிச்சாச்சுப்பா.. எத்தனை வருசமா போரடிக்கிட்டு இருக்கா தெரியுமா?.. எங்க போனாலும், எந்த வேலை ஆரம்பிச்சாலும் அபிக்குத்தான் எத்தனை கஷ்டம்?. அந்த அளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில ஏகப்பட்ட வில்லனுங்க... முதல் முறையா நேத்துதான் அவ வாழ்க்கையில ஒரு விடிவு காலமே பொறந்திருக்கு.... தேர்தல்ல ஜெயிச்சுட்டாப்பா... தேர்தல்ல அவளோட எதிரிய மண்ண கவ்வ வச்சிட்டாள்ல... அது சரி எத்தனை நாளைக்குத்தான் அபி தோக்குற மாதிரியே காட்ட முடியும் டைரக்டருக்கு.... அதனாலதான் நேற்று ஒரு மாற்றத்துக்கு அபிய ரொம்பக்கஷ்டப்பட்டு ஜெயிக்கவச்சிட்டாரு... அபியோட தொல்லை எப்ப முடியும்?????

கலைஞருக்கு ஏன் இந்த திடீர் பயம் வந்துச்சின்னெ தெரியல... இலங்கை பிரச்சினையை திசை திருப்பி திமுக ஆட்சியை கவிழ்க்க சதி அப்படின்னு அறிக்கை மூலமா அழுகிறார்... ஏன அழுகிறது இந்த கிழச்சிங்கம்... ஈழப்பிரச்சினையில் கலைஞர்தான் சரியான் முடிவு எடுப்பார் என்று உலத்தமிழர்களெல்லாம் நம்புனாங்க... ஆனா அவரு இன்னா பண்ணினார்... அறிக்கை வுட்டாரு... கூட்ட்டத்த கூட்டினார், டில்லிக்கு காவடி தூக்கினார்... ஒன்னும் முடியல... ஆட்சியா? ஈழப்பிரச்சினையா?? அப்படினா ஆட்சிதான் அப்படின்னு சொல்லாம சொல்லிட்டார் கலைஞர்... திருமா உண்ணவிரதம்-- ராமதாசு-திருமா சந்திப்பு--- அதிமுக காங்கிரசு இதுல ஏதாவது ஒன்னுதான் அவர் இப்படி அறிக்கை விட வச்சிருச்சி....யப்பா கலைஞருக்கு இன்னும் ஏகப்பட்ட குடும்ப கடமைகள் இருக்கு... அதுவரைக்கும் அவர் ஆட்சியை ஒன்னும் கவுத்திடாதிங்க....ஒரு தொகுதிக்கு 60,70 கோடி செலவு செய்யலாம்.. 234தொகுதிக்கும் செலவு செய்ய முடியுமா?
 
நம்ம தொங்கபாலுவோட நியூஸ் தலைப்புல வரணும்னு ரொம்ப யோசிச்சு நேத்து ஒரு உண்ணவிரத போராட்டம் நடத்துனாரு மது விலக்கை அமல்படுத்தக்கோரி..அவருக்குத் தெரியல இப்போதைக்கு ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுத்தத்தான் தலைப்புல வரும்னு...இந்த போராட்டத்துல எத்தனை காங்கிரசு கோஷ்டிகள் கலந்துகிச்சின்னு யாருக்காவது தெரியுமா?? அய்யா தொங்க பாலு முதல்ல தமிழனுக்காக போராடுறதுக்கு யோசிங்க... பேசாம உங்க போரட்டத்தை பாண்டிச்சேரில வச்சிருக்கலாம்...... அங்கதான் அளவில்லாம கரை புரண்டு ஓடிக்கிட்டு இருக்கு....உங்களுக்கு நீங்களே ஒரு ஆப்பு வச்சிக்கிட்டீங்களே அதப்பத்தி யாராவது சொன்னாங்களா??... தென் மாவட்டத்துல உங்க கட்சிக்கு கொஞ்சம் அதிகமா செல்வாக்கு உண்டு நேற்றைய உங்களோட போராட்டத்தால அதுலயும் மண்ண அள்ளி நீங்களே போட்டுட்டீங்க..உருப்படியா ஏதாவது யோசிங்க..தொங்கபாலுக்கிட்ட ஒரு கேள்வி: நீங்க திமுக காங்கிரசா? இல்ல அதிமுக காங்கிரசா?/நேற்று என்னுடைய ரேஷன் அட்டை முகவரி மற்றத்திற்காக தி.நகர் அரசு அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.. எங்க ஆட்சியில எல்லாத்தையும் கணிணி மயமாக்கிட்டோம் எனகூவும் அரசுக்கு இந்த துறை மட்டும் எப்படி கண்ணுல படாம போச்சின்னு தெரியல... இன்னும் அதே பழைய மெத்தடுதான்.... கொஞ்சம் கவனிங்க கலைஞரே... எப்பதான் மாறுமோ??


வில்லு-- லொள்ளுகண்ணு கேட்ட பிறகு நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்
"குருவி" செத்த பிறகு "வில்லு" விட்டு என்ன பிரயோஜனம்...


படிக்கிற பயபுள்ளைங்க ஓட்டு போடுங்கப்பா

21 comments:

கோவி.கண்ணன் said...

//நம்ம தொங்கபாலுவோட நியூஸ் தலைப்புல வரணும்னு ரொம்ப யோசிச்சு நேத்து ஒரு உண்ணவிரத போராட்டம் நடத்துனாரு மது விலக்கை அமல்படுத்தக்கோரி..அவருக்குத் தெரியல இப்போதைக்கு ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுத்தத்தான் தலைப்புல வரும்னு...இந்த போராட்டத்துல எத்தனை காங்கிரசு கோஷ்டிகள் கலந்துகிச்சின்னு யாருக்காவது தெரியுமா?? அய்யா தொங்க பாலு முதல்ல தமிழனுக்காக போராடுறதுக்கு யோசிங்க... //

:)

பேப்பரில் பெயர் வருவதற்காக அல்ல. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிலும் இருக்குன்னு காட்ட வேண்டுமே, அதுவும் தலைவராக இருக்கிறார். அவருக்கு அந்த கடமை இருக்கு :)

rajan said...

நல்ல சொன்னிங்க. தொங்க பாலு ஈழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தார்னா மத்தியில் இருந்து இல்ல ஆப்பு வாங்கி இருப்பாரு. மொதல்ல இந்த காங்கிரச தமிழ் நட்டுல இருந்து சுத்தம விரட்டி அடிக்கனும்ப்பா.

அ.மு.செய்யது said...

//எங்க ஆட்சியில எல்லாத்தையும் கணிணி மயமாக்கிட்டோம் எனகூவும் அரசுக்கு இந்த துறை மட்டும் எப்படி கண்ணுல படாம போச்சின்னு தெரியல...//

இப்படி நிறைய துறைகள் கண்ணுல படாம போயிட்டிருக்கு...இதெல்லாம் எம்மாத்திரம் ??

கார்க்கி said...

மறுபடியும் எங்கள சீண்டறீங்க.. ஒரு நாள் இருக்கு உங்களுக்கு

அத்திரி said...

//பேப்பரில் பெயர் வருவதற்காக அல்ல. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிலும் இருக்குன்னு காட்ட வேண்டுமே, அதுவும் தலைவராக இருக்கிறார். அவருக்கு அந்த கடமை இருக்கு :)//


இந்தக்கோணத்துல நான் யோசிக்கலை...சீனியர் சீனியர்தான். நன்றி கோவியாரே

//நல்ல சொன்னிங்க. தொங்க பாலு ஈழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தார்னா மத்தியில் இருந்து இல்ல ஆப்பு வாங்கி இருப்பாரு. மொதல்ல இந்த காங்கிரச தமிழ் நட்டுல இருந்து சுத்தம விரட்டி அடிக்கனும்ப்பா.//


நன்றி ராஜன்...

அத்திரி said...

//இப்படி நிறைய துறைகள் கண்ணுல படாம போயிட்டிருக்கு...இதெல்லாம் எம்மாத்திரம் ??//


போய் கியூவுல நின்னா இன்னும் அதே தடிமனான நோட்டு டென்சனா எழுதுறதுன்னு கடுப்பா இருக்கு செய்யது.நன்றி

//மறுபடியும் எங்கள சீண்டறீங்க.. ஒரு நாள் இருக்கு உங்களுக்கு//

டாக்டர் படத்துக்கு ஒரு விளம்பரம்ம்ம்ம்......... அதான்

வில்லுவ பத்தி நக்கலடிக்கிறது இப்பதா பேசன்.......... அதான்

நன்றி சகா

நசரேயன் said...

வெளு வெளு ன்னு வெளுத்து கட்டிடீங்க, அப்படியே தமிலிஷ் லேயும் இணைத்து கொள்ளுங்க
நான் இன்னும் ஊருக்கு வர டிக்கெட் எடுக்கலை, ஏப்ரல் மாசம் வாரேன் ஊருக்கு

Cable Sankar said...

//நேற்று என்னுடைய ரேஷன் அட்டை முகவரி மற்றத்திற்காக தி.நகர் அரசு அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.. எங்க ஆட்சியில எல்லாத்தையும் கணிணி மயமாக்கிட்டோம் எனகூவும் அரசுக்கு இந்த துறை மட்டும் எப்படி கண்ணுல படாம போச்சின்னு தெரியல... இன்னும் அதே பழைய மெத்தடுதான்.... கொஞ்சம் கவனிங்க கலைஞரே... எப்பதான் மாறுமோ??//

நம்ம தலையோட ஆட்சியில இந்தமுறை எல்லாமே பேப்பர்ல மட்டும்தான்.

குடுகுடுப்பை said...

தங்கமணின்னு பேர போட்டா பதிவு சூடாகும் அது மாதிரி இப்ப தொங்கபாலுவும் ஆயிட்டாரு போல.

செந்தழல் ரவி said...

தொங்கபாலு (c) செந்தழல் ரவி

அத்திரி said...

//வெளு வெளு ன்னு வெளுத்து கட்டிடீங்க, அப்படியே தமிலிஷ் லேயும் இணைத்து கொள்ளுங்க
நான் இன்னும் ஊருக்கு வர டிக்கெட் எடுக்கலை, ஏப்ரல் மாசம் வாரேன் ஊருக்கு//

தமிலிஷ்லயும் இருக்கு.... எத்தனை நாள் விடுமுறை?.... நன்றி புளியங்குடியாரே

//நம்ம தலையோட ஆட்சியில இந்தமுறை எல்லாமே பேப்பர்ல மட்டும்தான்//.

எல்லாமே பேப்பர்லனா... புரியல கேபிள் சார்

அத்திரி said...

//தங்கமணின்னு பேர போட்டா பதிவு சூடாகும் அது மாதிரி இப்ப தொங்கபாலுவும் ஆயிட்டாரு போல//

தொங்கபாலு நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கு. நன்றி குடுகுடுப்பையாரே

//தொங்கபாலு (c) செந்தழல் ரவி//

நன்றி ரவி. என்ன சொல்லியிருக்கீங்க!!!!!!!

நட்புடன் ஜமால் said...

ரொம்ப அரசியலா இருக்கேன்னு தான் வரலை அண்ணேன்

வேறு ஒரு காரணமும் இல்லை.

அரசியல்ல கொஞ்சம் வீக்கு ...

அத்திரி said...

தமிழன் அரசியல்ல வீக்கா நம்பவே முடியல....... நன்றி ஜமால்

பிரேம் said...

நல்லாருக்கு பதிவு...ஆனா எழுத்துரு கலர் தான் கண்ண கட்டிருச்சி!!

Anonymous said...

குருவி செத்த பிறகு வில்லு விட்டு என்ன பிரயோஜனம்...
//

சரியா சொன்னீங்க போங்க...
கோலங்கள் நாடகத்தை நேத்து தான் பார்த்தேன். அபி ஜெயிச்சிட்டாங்க...
ஆமா நாடகம் எப்போம் முடியும் அத்திரி?

Anonymous said...

அத்திரி , புது தளத்திற்கு (http://mpmohankumar.wordpress.com/) எனது பதிவை மாற்றி உள்ளேன். உங்கள் புக் மார்க் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்.

viji said...

அருமையான பதிவு. www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்த்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் புக் மார்கிங் சைட் நன்றி

அத்திரி said...

//நல்லாருக்கு பதிவு...ஆனா எழுத்துரு கலர் தான் கண்ண கட்டிருச்சி!!//

இதுக்கே கண்ணை கட்டினா எப்படி? நன்றி பிரேம்//சரியா சொன்னீங்க போங்க...
கோலங்கள் நாடகத்தை நேத்து தான் பார்த்தேன். அபி ஜெயிச்சிட்டாங்க...
ஆமா நாடகம் எப்போம் முடியும் அத்திரி?//


ஆங்.... என் பையன் காலேஜ்க்கு போகும் வயதில் முடியலாம். நன்றி ஆனந்த்

அத்திரி said...

//அத்திரி , புது தளத்திற்கு (http://mpmohankumar.wordpress.com/) எனது பதிவை மாற்றி உள்ளேன். உங்கள் புக் மார்க் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்.//

நன்றி மோகன்

//அருமையான பதிவு. www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்த்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் புக் மார்கிங் சைட் நன்றி//

நன்றி விஜி

anna said...

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers