Monday, April 27, 2009

கலைஞரை காப்பாற்றிய இலங்கை அரசுக்கு நன்றி

ஒரு வழியாக உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தமிழின தலைவர் கலைஞரின் உண்ணாவிரதம் முடிந்துவிட்டது... போன ஜூனியர் விகடன் இதழில் கலைஞர் தனது கடேசி ஆயுதமாக இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லியிருந்தார்கள்... அதே போல் நடந்துமுடிந்துவிட்டது. எல்லாத்துக்கும் அந்த அம்மாவும் கலைஞரும் தான் காரணம்.. இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை எடுபடாது என்ற கருத்தை தன் முதல் நாள் பிரச்சாரத்திலேயே முறியடித்து கலைஞருக்கு செக் வைக்க ஆரம்பித்தார்....இது கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் எல்லா பிரச்சாரக்கூட்டத்திலும் கலைஞரை காய்ச்சி எடுக்க ஆரம்பித்தார் அம்மா.... மத்திய அரசு சிங்கள ராணுவத்துக்கு அளித்து வரும் ராணுவ உதவிகள் குறித்து கலைஞர் முதல் காங்கிரசு பெருந்தலைகள் மவுனம் சாதித்தது எல்லாமே தமிழகத்தில் திமுக கூட்டணியை கொஞ்சம் அசைச்சு பார்க்க ஆரம்பித்தது.முதல் ஆயுதத்தை கையில் எடுத்தார் கலைஞர்.. வேலை நிறுத்தம்..ஆனால் கலைஞர் எதிர்பார்த்த அளவுக்கு வேலை நிறுத்தம் வேலை செய்யவில்லை மாறாக எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது...முக்கியமா அன்னைக்கு எல்லா அத்தியாவசியக்கடைகளும் மூடியிருக்க டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்து வியாபாரத்தில் சக்கை போடு போட்டது தமிழக வேலை நிறுத்த வரலாற்றில் ஒரு மைல் கல்.

பந்திற்கு பிறகு மத்திய அரசின் சார்பாக சிறப்பு தூதுவர்களாக அனுப்பப்பட்ட மேனனும்,நாராயணனும் இலங்கை போய் என்னத்த பேசினாங்க என்ற விவரம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை... மத்திய அமைச்சர் சிதம்பரமும் கலைஞரை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து பேசும்போது இன்னும் சில நாட்களில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று கூறினார்.அந்த நாள் வரைக்கும் காத்திருந்த கலைஞர் இன்று காலை யாரு எதிர்பாராத வகையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.... அனைத்து தமிழ் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தது.. யாரும் உண்ணவிரதம் இருக்கவேண்டாம் என்ற கலைஞரின் அன்பான வேண்டுகோளை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும் கழக முண்ணனியினர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தனர்... ஒரு வழியாக இலைங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்து விட்டதாக கூறி உண்ணாவிரதமும் முடித்து வைக்கப்பட்டது....போர் பகுதிகளில் குண்டு போட்டால் புல் பூண்டுகளுக்கு இனிமேல் சேதாரம் வந்துவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இலங்கை அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்குமோ???

யாருக்காக இந்த உண்ணாவிரதம்....எல்லாத்துக்கும் மத்தியில் ஆளும் காங்கிரசு அரசுதான் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும் ஒரு பக்கம் இலங்கைக்கு ராணுவ உதவி அளித்துவிட்டு மறுபுறம் இலங்கை தமிழருக்கு ஆதரவாக என்ற காங்கிரசின் நிலைமையால்தான் இன்று தமிழினத்தலைவர் இந்த முடிவுக்கு வந்தார்...காங்கிரசு அரசு நினைத்திருந்தால் போரை எப்போதோ முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்... அதையும் செய்யலை.... மதியம் போர் நிறுத்தம் என்ற செய்தி வந்த பிறகு மாலை இலங்கை அரசின் ராணுவத்தளபதி போர் நிறுத்தம் குறித்து எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று சொல்கிறார் ........... எது உண்மை....

"கனரக ஆயுதங்களையும், பேரழிவு தரும் ஆயுதங்களையும், விமானப்படையையும் பயன்படுத்தமாட்டோம்....தற்காப்புக்காக சிறு தாக்குதல் தொடுப்போம்". இதுதான் இலங்கை அரசின் போர் குறித்த உறுதி மொழி..... இதுக்கு பெயர்தான் போர் நிறுத்தமா???........... இன்று நடந்த எல்லா நிகழ்வுகளும் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் தானோ? என்ற சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.....எது எப்படியோ கலைஞரை உண்ணாவிரதத்திலிருந்து காப்பாற்றிய இலங்கை அரசு வாழ்க.....

ஹிஹிஹி தேர்தல் வந்திருச்சி வேற ஒன்னும் இல்லை.......



குழப்பத்தில் அப்பாவித்தமிழன்.........

33 comments:

ஆதவா said...

தலைப்பே போதுங்க.... கலைஞர் திரும்பவும் 40 ஐப் பெறுவார் என்று எனக்கு நம்பிக்ககயில்லை... அதில் பாதியாவது???? ம்ஹூம்...

சத்தியன் said...

அன்பின் "கருணா"நிதி அவர்களுக்கு, எவ்வாறு கூசாமல் பொய் கூறுகிறீகள். கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்காமல் கண்ணை திறந்து பாருங்கள் நீங்கள் அம்மணமாய் நிப்பதை உலகமே வேடிக்கை பார்க்கிறது.

Suresh Kumar said...

தமிழினத்தை ஏமாற்ற கருணாநிதியும் சோனியாவும் ராஜ பக்ஷேயும் நடத்திய நாடகம் முடிவுக்கு வந்தது . தினமும் நடைபெறுவது போல் இனபடுகொளையும் நடந்து வருகிறது

Anonymous said...

நண்பா வணக்கம். கொஞ்சம் வேலை. வலை பக்கம் வர முடியவில்லை.


தமிழகத்தில் தற்போது நடக்கும் பல விஷயங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான். மே 13 வரை இப்படி ஏதாவது நடக்கும். தேர்தல் நேரம் அப்படி தான் இருக்கும். அரசியல்வாதிகளை பற்றி நம்ம என்ன சொல்ல....

Cable சங்கர் said...

அருமையான தலைப்பு.. நான் தான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே.. போர் நிறுத்தம் பற்றி../.

Anonymous said...

இன்னக்கி காலயில திடீர்னு அதிரடி நகைச்சுவை ட்ராமா ஒன்ன மொதல்வர் அண்ணா சமாதியில ஆரம்பிச்சிருக்காரு.. அப்படியே உளியின் ஓசை 2 எடுத்டுரலாம் அம்புட்டு அழுகாச்சி.. ஒரு பக்கம் கனிமொழி மினரல் வாட்டர் பாட்டில் மூடியில தண்ணி கொடுக்குராரு அதயும் அவரு வேணாம்ங்ராரு.. அப்புறம் கையில தொட்டு ஒதட்டுல தடவிக்குராரு.. இது கொஞ்சம் இல்ல நெறயவே ஓவர்னு தெரியலயா? காலவறையற்ற 3 மணி நேர உண்ணாவிரதம்? என்ன கர்மமோ.. ஓட்டுக்காக இப்படியா?? நாறுது தாங்க முடியல

கழக கண்மனிகள் தலைவரோட நோக்கம் புரியாம அங்கங்க உண்ணாவிரதம் இருந்து மொதல்வர வெறுப்பேத்தீட்டானுவ..அவ்ரு நோகம் என்னன்னா எல்லாபயலும் இருந்தா தனக்கு கெடைக்கிற பப்ளிசிட்டி போயிரும்னு நான் மட்டும் இருக்கிரேன் (அதுவும் 3 மணி நேரம் அது வேற விஷயம்).. ஸ்பெக்ட்ரம் 60000 கோடி ஊழல 1 நொடியில தீத்து வச்ச சாணக்கியர் அல்லவா? அதன் 8 மணிக்கு உண்ணாவிரதம் 10 மணிக்கு ராஜபக்சே அறிவிப்பு.. ராஜப்க்சேக்கு தெரியும் மீண்டும் காங்கிரஸ் வந்தா அவருக்கு உதவின்னு.. அதுக்காக திட்டமிட்ட நாடகம்... தாத்தாவின் நகைச்சுவை நடிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இவரு இருந்ததாலதான் போர் நிறுத்தம்னா இத்தினி நாள் இன்னா செஞ்சின்டு இருந்தாரு?? மந்திரி பதவி பேரனுக்கு வேணும்ன் ஒடனே ப்ளேன்ல போய் கடுங்குளிர்ல டெல்லியில ரூம் போட்டு அழுது அடம்பிடிச்சி வாங்குனார் இல்ல..இப்ப எதுக்கு எலெக்சன் வர்ர வரைக்கும் வெயிட்டிங்?? மேச் ஃபிக்சிங் அப்படின்னு கேள்வி பட்டிருக்கோம்..து உண்ணாவிரத ஃபிக்சிங்... அப்பட்டமான அரசியல் நகைச்சுவை நாடகம்

அ.மு.செய்யது said...

வெளிச்ச‌ப் ப‌திவ‌ர் ஜோதிபார‌தி எழுதிய‌து போல இதை ஒரு சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே செய்திருந்தால் ப‌ல்லாயிர‌ம் உயிர்க‌ளை காப்பாற்றியிருக்க‌லாமே !!!

Joe said...

தேர்தல் நேர நாடகங்கள்!!!

சரவணன் said...

// சத்தியன் said...
கருணாநிதி
அம்மணமாய் நிப்பதை உலகமே வேடிக்கை பார்க்கிறது.

மிகச்சரியாக சொல்லியிருக்கி்ன்றீர்கள்.

Senthilkumar said...

உதவித்தொகை வேண்டாம்... ஈழம் வேண்டாம்.. உயிர் வேண்டும்.

ஆம்..ஈழ தமிழர்க்கு இப்போது ஈழம் வேண்டாம்..உங்களின் (காங்கிரஸ்) பிச்சை காசு வேண்டாம். போரை நிறுத்த சொல்லுங்கட அரசியல் பன்னிகளே..
இருக்கும் மிச்ச மீதி உயிர்களை நாம் மே 13 முன் காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் இத முதுகு எலும்பில்லாத தலைவர்களே மீதி இருக்கும் எல்லா உயிர் களையும் எடுத்து விடுவார்கள்.

முதுகு எலும்பில்லாத முதல்வரின் நாடகம் நல்லா இருந்துச்சு. வடிவேலு காமெடி விட நல்லா காமெடி யா இருந்துச்சு.

Senthilkumar said...

உதவித்தொகை வேண்டாம்... ஈழம் வேண்டாம்.. உயிர் வேண்டும்.

ஆம்..ஈழ தமிழர்க்கு இப்போது ஈழம் வேண்டாம்..உங்களின் (காங்கிரஸ்) பிச்சை காசு வேண்டாம். போரை நிறுத்த சொல்லுங்கட அரசியல் பன்னிகளே..
இருக்கும் மிச்ச மீதி உயிர்களை நாம் மே 13 முன் காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் இத முதுகு எலும்பில்லாத தலைவர்களே மீதி இருக்கும் எல்லா உயிர் களையும் எடுத்து விடுவார்கள்.

முதுகு எலும்பில்லாத முதல்வரின் நாடகம் நல்லா இருந்துச்சு. வடிவேலு காமெடி விட நல்லா காமெடி யா இருந்துச்சு.

Saravanan said...

நியூட்டனின் மூன்றாம் விதி தான் நினைவில் வருகிறது. இந்த "வினைக்கும்" சரி சமமான ஆனால், எதிர் மறையான வினை கூடிய சீக்கிரத்தில் தெரியும்....கண்டிப்பா 40-க்கு பூஜ்யம் தான்

எல்லாம் நம்ம தலைவிதி.....

romba super said...

thool vikram padam athil villan character unnaviratham irrunthathuthan nabagam varuthu

அன்பரசு said...

கலைஞரின் ஈழத்தமிழர் காவியம் (பகுதி 1) நாடக விமர்சனம் பார்க்க
http://ponmaalai.blogspot.com/2009/04/1.html

கார்த்திகைப் பாண்டியன் said...

நாடகம் நடக்குது.. ஒன்னும் செய்ய முடியாம நாம பதிவு போட்டு போலம்புறோம்.. ஆனா இதோட முடிவு? மனசு கஷ்டமா இருக்க நண்பா.. ஒரு இனத்தோட அழிவு இங்க தமிழ்நாட்டுல அரசியல் செய்ய பயன்படுது.. என்ன சொல்ல..

Anonymous said...

//Senthilkumar - உதவித்தொகை வேண்டாம்... ஈழம் வேண்டாம்.. உயிர் வேண்டும்.
ஆம்..ஈழ தமிழர்க்கு இப்போது ஈழம் வேண்டாம்../

அது தான் உண்மை.

என்ன Senthilkumar, பொங்கு தமிழ் பொங்கி தலைவா தமிழீழத்துக்கு போர் தொடங்க ஆணையிடு என்று கேட்டது எல்லாம் மறந்து விட்டீர்களா?
போரை நிறுத்த சொல்லுங்கட அரசியல் பன்னிகளே.. என்றால்
போரை நிறுத்த சொல்லி முதுகு எலும்பில்லாத கோழை பிரபாகரனிடம் முதல் கேளுங்கள்.

சொல்லரசன் said...

//எல்லா நிகழ்வுகளும் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் தானோ//
உண்மைதான்

akilan said...

நயவஞ்சக பீலா விட்டு பிலிம் காட்டி சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்று இனவாத வீரவசனம் பேசி இருபத்தையாயிரம் பிள்ளைகளை மாவீரர் என்று புதைத்தும் இருபதினாயிரம் தமிழரை துரோகிகள் என்று மண்டையில் போட்டும் நாலாயிரம் மாற்று இயக்க விடுதலை போராளிகளை கொன்று குவித்தும் லட்சக்கணக்கான முஸ்லீம்களை அவர்களின் சொத்துக்களை பறித்து அவர்களின் பூர்வீக பூமியிலிருந்து அகதிகளாக கலைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தவர் ஆமாபோட மறுத்து வித்தியாசமாக கதைத்தால் மண்டையில் போட்டும் எங்கேயாவது போவது என்றால் பிணைக்கு ஒரு ஆளை வைத்து பாஸ் எடுத்து போகவேண்டிய சுதந்திரம் அத்தனையும் பறிபோன நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தமிழருக்கு வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை கொண்டு வந்து உதவ வந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படைகளை கொன்றும், உதவ வந்த ராஜீவ் காந்தியையும் ஆயுதமாகவும் பணமாகவும் அள்ளிக்கொடுத்து உதவிய பிறேமதாசாவையும் கொன்றும் இன்று தமிழ் மக்களை பிள்ளைகளையும் சொத்து சுகங்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி விட்டு முப்பது வருசமாக இவர்கள் நடாத்திய பொய் பீலாக்கள் பிசுபிசுத்து புஸ் வானமாகி முழு புலுடாவாக ஆகி விட்டது.

தமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டார்-கேம் ஓவர்

Anonymous said...

http://tamilnational.com/news-flash/821-situation-report-apr28.html

அத்திரி said...

//ஆதவா said...
தலைப்பே போதுங்க.... கலைஞர் திரும்பவும் 40 ஐப் பெறுவார் என்று எனக்கு நம்பிக்ககயில்லை... அதில் பாதியாவது???? ம்ஹூம்...//

பாதி தேறிடும்னு நினைக்கிறேன் ஆதவா... நன்றி

// சத்தியன் said...
அன்பின் "கருணா"நிதி அவர்களுக்கு, எவ்வாறு கூசாமல் பொய் கூறுகிறீகள். கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்காமல் கண்ணை திறந்து பாருங்கள் நீங்கள் அம்மணமாய் நிப்பதை உலகமே வேடிக்கை பார்க்கிறது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்தியன்

அத்திரி said...

//Suresh Kumar said...
தமிழினத்தை ஏமாற்ற கருணாநிதியும் சோனியாவும் ராஜ பக்ஷேயும் நடத்திய நாடகம் முடிவுக்கு வந்தது . தினமும் நடைபெறுவது போல் இனபடுகொளையும் நடந்து வருகிறது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்

அத்திரி said...

//சங்கொலி said...
* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கொலி

//கடையம் ஆனந்த் said...
தமிழகத்தில் தற்போது நடக்கும் பல விஷயங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான். மே 13 வரை இப்படி ஏதாவது நடக்கும். தேர்தல் நேரம் அப்படி தான் இருக்கும். அரசியல்வாதிகளை பற்றி நம்ம என்ன சொல்ல....//

ஒன்னும் சொல்லமுடியாது மாப்ளே

அத்திரி said...

//Cable Sankar said...
அருமையான தலைப்பு.. நான் தான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே.. போர் நிறுத்தம் பற்றி..//

அண்ணே வணக்கம்

//Anonymous said...
..இப்ப எதுக்கு எலெக்சன் வர்ர வரைக்கும் வெயிட்டிங்?? மேச் ஃபிக்சிங் அப்படின்னு கேள்வி பட்டிருக்கோம்..து உண்ணாவிரத ஃபிக்சிங்... அப்பட்டமான அரசியல் நகைச்சுவை நாடகம்//

நன்றி பெயரில்லாதவரே..........

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
வெளிச்ச‌ப் ப‌திவ‌ர் ஜோதிபார‌தி எழுதிய‌து போல இதை ஒரு சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே செய்திருந்தால் ப‌ல்லாயிர‌ம் உயிர்க‌ளை காப்பாற்றியிருக்க‌லாமே !!!//

கருத்துக்கு மிக்க நன்றி.... செய்யது

அத்திரி said...

//Joe said...
தேர்தல் நேர நாடகங்கள்!!!//

சரியாச்சொன்னீங்க.........ஜோ

// சரவணன் said...
// சத்தியன் said...
கருணாநிதி
அம்மணமாய் நிப்பதை உலகமே வேடிக்கை பார்க்கிறது.மிகச்சரியாக சொல்லியிருக்கி்ன்றீர்கள்//

நன்றி சரவணன்

அத்திரி said...

Senthilkumar said
//முதுகு எலும்பில்லாத முதல்வரின் நாடகம் நல்லா இருந்துச்சு. வடிவேலு காமெடி விட நல்லா காமெடி யா இருந்துச்சு.//

எல்லா காமெடி நடிகர்களையும் மிஞ்சிட்டார் கலைஞர்.. நன்றி செந்தில்

அத்திரி said...

// Saravanan said...
நியூட்டனின் மூன்றாம் விதி தான் நினைவில் வருகிறது. இந்த "வினைக்கும்" சரி சமமான ஆனால், எதிர் மறையான வினை கூடிய சீக்கிரத்தில் தெரியும்....கண்டிப்பா 40-க்கு பூஜ்யம் தான்

எல்லாம் நம்ம தலைவிதி....//

நன்றி Saravanan


// romba super said...
thool vikram padam athil villan character unnaviratham irrunthathuthan nabagam varuthu//

எனக்கும் அதுதான் ஞாபகம் வந்திச்சி...நன்றி சூப்பர்

அத்திரி said...

//பனங்காட்டான் said...
கலைஞரின் ஈழத்தமிழர் காவியம் (பகுதி 1) நாடக விமர்சனம் பார்க்க//

படிச்சிட்டு சொல்றேன்..நன்றி பனங்காட்டான்

//கார்த்திகைப் பாண்டியன் said...
நாடகம் நடக்குது.. ஒன்னும் செய்ய முடியாம நாம பதிவு போட்டு போலம்புறோம்.. ஆனா இதோட முடிவு? மனசு கஷ்டமா இருக்க நண்பா.. ஒரு இனத்தோட அழிவு இங்க தமிழ்நாட்டுல அரசியல் செய்ய பயன்படுது.. என்ன சொல்ல..//

ஒன்னும் சொல்ல முடியாது.. .வேடிக்கைதான் பாக்கனும் நன்றி நண்பா

அத்திரி said...

//Anonymous said...
//Senthilkumar - உதவித்தொகை வேண்டாம்... ஈழம் வேண்டாம்.. உயிர் வேண்டும்.
ஆம்..ஈழ தமிழர்க்கு இப்போது ஈழம் வேண்டாம்../
அது தான் உண்மை.//


நன்றி பெயரில்லாதவரே..........

அத்திரி said...

//சொல்லரசன் said...
//எல்லா நிகழ்வுகளும் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் தானோ//
உண்மைதான்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லரசன்

// akilan said...
தமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டார்-கேம் ஓவர்//

சரியாச்சொன்னீங்க அகிலன் நன்றி

அத்திரி said...

// Anonymous said...
http://tamilnational.com/news-flash/821-situation-report-apr28.html//

thanks Anonymous

தராசு said...

//குழப்பத்தில் அப்பாவித்தமிழன்.........//

ஆனால் தெளிவான அரசியல் தலைவர்கள்,

அய்யோ, அய்யோ

Suresh said...

மிக அருமையான தலப்பு எப்பவோ படித்து விட்டேன் தமிழ்ஷல வோட்டும் போட்டுடேன் ஆனா இப்போ தாம் பின்னூட்டம் மிக அருமையான பதிவு

ஆளும் கட்சிக்கு வோட்டு என்ற என் பதிவை பாருங்க புடிச்சா வோட்டா போடுங்க