Wednesday, 13 May, 2009

கடைசி கட்டத்தில் அதிரடியான ஓட்டு வியாபாரங்கள்

வடிவேலு ஒரு படத்துல சொல்லுவார்'நல்லாத்தான போய்க்கிட்டு இருந்தது'.. அது மாதிரிதான் பிரச்சாரம் முடிந்தும் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது.நேற்று மாலைஇலங்கை சிடி விவகாரத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை, அதை வெளியிடலாம்,பொது மக்களுக்கு போட்டுக்காட்டலாம் என்ற தீர்ப்பு வந்தவுடன் சூட்டோடு சூடாக மக்கள் டிவி செய்திகள் என்ற பெயரில் மாலை ஆறு மணியில் இருந்து ஒளிபரப்ப ஆரம்பித்தது...

கிரிகெட்டில் கடைசிக்கட்ட ஓவரில் அடித்து ஆடுவது போல் மக்கள் டிவி சரியான நேரத்தில் ஒளிபரப்பிக்கொன்டிருந்தது... சரியா நேற்று 7 மணியிலிருந்து சென்னை முக்கிய ஏரியாக்களில் மின்சாரம் தடைப்பட்டது.. 8 மணியளவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டது.... என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல,.. அப்புறமா ஆரம்பிச்சது நம்ம தமிழ் தொலைக்காட்சிகளின் ப்ளாஸ் நியூஸ் திருவிளையாடல். முதலில் கலைஞர் டிவியில்" ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த மின்சாரத்தை துண்டித்து சதி வேலைகள் நடப்பதாக" ப்ளாஸ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது....


அப்ப்டியே அம்மா டிவிய பாத்தா " மின்தடையை ஏற்படுத்தி திமுகவினர் வாகாளர்களுக்கு பணம் பட்டுவாடா பண்ணுவதாக ப்ளாஸ் நியூஸ் ஓடுது.... மக்கள் டிவில பாத்தா " மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல், போலிஸ் கமிஷன்ர், தலைமைத்தேர்தல் ஆணையருக்கு மக்கள் டிவி சார்பா பாதுகாப்பு கேட்டு மனு. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கேபிள் டிவியில் மக்கள் டிவி தெரியக்கூடாது என ஆளும் கட்சி மிரட்டுவதாக ப்ளாஸ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. அதே வேளையில் அந்த இலங்கை சிடி காட்சிகள் திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து நள்ளிரவு ஒரு மணிவரைக்கும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.....

கடைசி நேரத்தில் மின் வெட்டும்,ஈழ விசயமும் ஓட்டு வியாபாரமாகி போனதுதான் வேதனை.... ஏதாவது ஒரு விசயம் பிடிபடாதா..அதை வச்சி என்னென்ன பண்ணலாம் எனக்காத்து கிடக்கும் அரசியல் கட்சிகளை என்ன சொலவது.?.... தனி ஈழம் என்ற மகத்தான ஒன்றை கூவி விக்கும் அரசியல்வாதிகளே..... உங்க வியாபாரம் எப்படினு 16ஆம் தேதி தெரியும்....

மின் தடையை ஏற்படுத்திய புண்ணியவான்களே..நீங்க செத்தா கண்டிப்பா உங்களுக்கு நரகம்தான்........உங்களையெல்லாம்.................


முக்கிய செய்தி


தமிழகத்தில் சுமார் 60 முதல் 65 சதவீத வாகுகள் பதிவாகியிருக்கிறதாம்.... பாண்டிச்சேரியில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்குதாம்.....

15 comments:

T.V.Radhakrishnan said...

//மின் தடையை ஏற்படுத்திய புண்ணியவான்களே..நீங்க செத்தா கண்டிப்பா உங்களுக்கு நரகம்தான்........//

அவர்களுக்கு மட்டும்தான் நரகமா.,நாங்களும் அங்கு கணிசமாக இடம் பெறுவோம் என்கிறார் தலைவர்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

நசரேயன் said...

//கடைசி நேரத்தில் மின் வெட்டும்,ஈழ விசயமும் ஓட்டு வியாபாரமாகி போனதுதான் வேதனை//

வேற யாரு நம்ம அரசியல்வாதிகள் அப்படி செய்தது

Suresh said...

நானும் கேள்வி பட்டேன்... அட பாவிகளா எதை எல்லாம் வோட்டு ஆகுறாங்க ..

asfar said...

மின் தடையை ஏற்படுத்திய புண்ணியவான்களே..நீங்க செத்தா கண்டிப்பா உங்களுக்கு நரகம்தான்........உங்களையெல்லாம்.................

good view...... all the best

ஆதவா said...

கிடைச்ச கேப்ல எல்லாம் கோல் போடறாய்ங்கப்பா...

கலையரசன் said...

//கடைசி நேரத்தில் மின் வெட்டும்,ஈழ விசயமும் ஓட்டு வியாபாரமாகி போனதுதான் வேதனை//

பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com

சோழன் said...

With out Political lobby as a genius Tamil media service is Makkal Tholaikkatchi.If they like commercial or money minded they will get easily from MNC'S dollors very easily .Who are all sold Tamils blood in eelam .Times will come to say the truth .

அத்திரி said...

//T.V.Radhakrishnan said...
அவர்களுக்கு மட்டும்தான் நரகமா.,நாங்களும் அங்கு கணிசமாக இடம் பெறுவோம் என்கிறார் தலைவர்//

ஐயா தலைவரை விடமாட்டிங்களா??? நன்றி

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
:-))//

வாங்க அண்ணே

//நசரேயன் said...
//கடைசி நேரத்தில் மின் வெட்டும்,ஈழ விசயமும் ஓட்டு வியாபாரமாகி போனதுதான் வேதனை//வேற யாரு நம்ம அரசியல்வாதிகள் அப்படி செய்தது//

வாங்க அண்ணாச்சி

நெல்லைத்தமிழ் said...

ஈழ விசயமும் ஓட்டு வியாபாரமாகி போனதுதான் வேதனை....

அண்ணாச்சி என்னை பொறுத்தவரையில் ஈழத்துக்காக போராடுவதாக கூறி வாக்கு கேட்ட கட்சிகள் ரத்தங்களை காட்டி பிச்சை எடுக்கும் தெருக்கூத்தாடிகளுக்கு சமம்

அத்திரி said...

//Suresh said...
நானும் கேள்வி பட்டேன்... அட பாவிகளா எதை எல்லாம் வோட்டு ஆகுறாங்க ..//

எது எப்படி இருந்தா என்ன... ஓட்டு கெடைச்சா சரி
நன்றி சுரேஷ்


//asfar said...
good view...... all the best//

நன்றி asfar

அத்திரி said...

//ஆதவா said...
கிடைச்ச கேப்ல எல்லாம் கோல் போடறாய்ங்கப்பா...//

நன்றி ஆதவா

//கலையரசன் said..
பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!//

நன்றி கலையரசன்

அத்திரி said...

//சோழன் said...
With out Political lobby as a genius Tamil media service is Makkal Tholaikkatchi.If they like commercial or money minded they will get easily from MNC'S dollors very easily .Who are all sold Tamils blood in eelam .Times will come to say the truth .//

ஈழ விசயத்துல தமிழ்நாட்டுல உள்ள எல்லா கட்சியுமே...... நீலிக்கண்ணீர்தான் வடிக்கிறது... தங்கள் சுயநலத்துக்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற யோசனைதான்
நன்றி சோழன்

அத்திரி said...

//நெல்லைத்தமிழ் said...
அண்ணாச்சி என்னை பொறுத்தவரையில் ஈழத்துக்காக போராடுவதாக கூறி வாக்கு கேட்ட கட்சிகள் ரத்தங்களை காட்டி பிச்சை எடுக்கும் தெருக்கூத்தாடிகளுக்கு சமம்//

நச்னு சொல்லிட்டீங்க..நன்றி