Monday, 11 May, 2009

பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமி

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் முடிந்துவிட்டது.. கலைஞர் டிவியும் ஜெயாடிவியும் போட்டிப்போட்டு முட்டிக்கொண்டன..... இன்று பிற்பக பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமியாய் இருந்தது இயக்குனர் சீமானின் பேச்சு.அலுவலகத்தில் இருந்ததால் குறிப்பு எடுக்கமுடியவில்லை அவரின் பேச்சை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் தன்னுடைய கனல் தெரித்த பேச்சால் காங்கிரசை பின்னி பெடல் எடுத்துவிட்டார்.... அவர் பேச்சின் சில பகுதிகளை தருகிறேன்....

 விடுதலைப்புலிகளிடம் இருந்து கிளிநொச்சி வீழ்ந்து இவ்வளவு நாளாகியும் ஏன் மக்களை அங்கு வாழ விடவில்லை?


தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தி ஈழதமிழ் மக்கள் தன்னுடைய உள்ளத்தில் இருப்பதாக சொல்லியுள்ளார்..உங்கள் இதயத்தில் இருந்து தூக்கி எறியுங்கள்....அந்த பாவப்பட்ட இடம் வேண்டாம்...


எம் தமிழ் இனம் இலங்கையில் தினம் படும் துயரம் கண்டு இழவு வீட்டில் இருப்பது போல் இருக்கிறோம் எப்படி ஐயா உங்களால் இப்படி சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்க வருகிறீர்கள்?


இப்போது எதற்கெடுத்தாலும் இறையாண்மை என்று பேசுகிறீர்களே..ராஜீவ் காந்தி அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பும் போது அவரிடம் சொல்லியிருக்கலாமே அது அடுத்த நாடு.. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தமிழ் தேசிய ராணுவத்துக்கு கட்டமைப்புக்கு உதவி செய்தாரே?.. அப்போது யாராவது இந்திரா காந்தியிடம் அடுத்த நாட்டின் போராளி குழுக்களுக்கு எப்படி அனுமதியளிக்கலாம் என்று சொல்லியிருக்கலாமே? இல்லையே..ஏன்...


இந்திய ராணுவத்தில் தமிழன்,மலையாளி,கன்னடன் பஞ்சாபி என அனைத்து இன மக்களும் இருக்கிறார்கள்.. ஆனால் இலங்கை ராணுவத்தில் எம் இன மக்கள் இருந்திருந்தால் இந்த கஷ்டங்கள் எம் மக்களுக்கு ஏற்பட்டிருக்குமா?..... மத பயங்கரவாத நாடு இலங்கை அரசு...


இலங்கை பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழ் மக்கள் தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் மகன்,மகள் ஒரு பக்கம் என சிங்களத்தினர் பிரித்துவைக்கின்றனரே?? ஏன்...


எதற்கெடுத்தாலும் இந்தியா சனநாயகநாடு சனநாயகநாடுன்னு சொல்றாங்க.... எது சனநாயகம்... ஈழத்தமிழனுக்காக மாணவர் போராட்டம் என்ற உடனே கல்லூரிகள், கல்லூரி விடுதிகள் கால வரையின்றி மூடப்படுகிறது ... இதுவா சனநாயகம்..வக்கீல்கள் போராட்டம் என்ற உடனே.... போலிஸ் மூலம் கலவரம் மூட்டப்படுகிறது...இதுவா சனநாயகம்


இப்போது நடக்க இருக்கும் தேர்தல் பணத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்... இதில் தமிழ் இனம்தான் வெற்றி பெறவேண்டும்....

காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு ஒகேனெக்கல் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி எப்படி இலங்கையில் அதிகாரப்பகிர்வையும், போர் நிறுத்தத்தையும் ஏற்படுத்துவார்கள்?


இதுவரைக்கும் காவிரி பிரச்சினை, பெரியாறு பிரச்சினை, தன் சாதி, தன் மதம் என் பார்த்து ஓட்டுப் போட்ட தமிழன் இந்த ஒருமுறை மட்டும் தன் இனத்திற்காக, தன் மானத்திற்காக, தன் சொந்தங்களுக்காக ஓட்டுப்போடுங்கள்.. காங்கிரசை விரட்டி அடியுங்கள்....

39 comments:

லக்கிலுக் said...

அம்மா வைகோவை போட்டமாதிரி சீமானை ஒரு ஒன்றரை வருஷம் கலைஞர் உள்ளே உட்கார்ந்திருக்க வைத்திருக்க வேண்டுமோ? :-)

T.V.Radhakrishnan said...

//காங்கிரசை விரட்டி அடியுங்கள்....//

repeateyyy

"அகநாழிகை" said...

அத்திரி சார்,
பதிவு அருமை.
ஐ-கூகுளில் உங்களது பதிவை படிக்க முடியவில்லை.
டெம்ப்ளேட் வண்ணத்தை மாற்ற முடியுமா ?

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆகா.... ஒண்ணுமே மிச்சம் இல்லாம திட்டி முடிச்சுட்டாரு போல.. இந்த தடவை ஐயா பாடு கொஞ்சம் கஷ்டம்தான்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

அதெல்லாம் சரி.. நீங்க சட்டையை பிச்சுக்கிட்டு எங்கேயும் போயிடாதீங்க..

நசரேயன் said...

சர வெடியா இருக்கு

பாலா... said...

ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல முடியாது.

Anonymous said...

ஓட்டுப்போட ஊருக்கு போகலீயா தல?

சுபா said...

பதிவு அருமை சார்!

Cable Sankar said...

எனக்கென்னவோ.. இலங்கை பிரச்சனை தேர்தலின் போது போடப்படும் ஓட்டுகளில் எதிரொலிக்கும் என்று தோன்றவில்லை.. நம்மை போன்ற பதிவர்களும், மிக குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே இந்த பிரச்சனையை முன்னிருத்தி பேசுகிறார்கள். மதுரையில் என் நண்பனிடம் கேட்டேன் இந்த முறை இலங்கை தமிழர் ப்ரச்சனையினால் தமிழ் வளர்த்த உங்க ஊர்ல திமுக தோக்குமா? என்று அதுக்கு அவன் ‘ இங்க இருக்குற லோக்கல் தமிழன் ப்ரச்சனையே பெரிசா இருக்கு இதுல எங்கிட்டு இலங்கை தமிழன் ப்ரச்சனையை பாக்குறது?”

Anonymous said...

//லக்கிலுக் said...
அம்மா வைகோவை போட்டமாதிரி சீமானை ஒரு ஒன்றரை வருஷம் கலைஞர் உள்ளே உட்கார்ந்திருக்க வைத்திருக்க வேண்டுமோ? :-)//

சீமானின் கேள்விகளுக்கு ஏதும் பதில் இருக்கா? கலைஞர் மாதிரியே எதிர் கேள்வி கேக்கபுடாது...

Kajan said...

Pls place your valuable vote at
http://internationaldesk.blogs.cnn.com/

(Should The International Community Intervene In Sri Lanka?)

Anonymous said...

பாகிஸ்தானில் தேர்தல் நடந்தால், இவருக்கு வோட்டு போடு (or) அவருக்கு வோட்டு போடு என்று பாகிஸ்தானியரிடம் சொல்லிப்பாருங்கள்... மேல்மாடி காலியாக இருந்தாலும் அவர்கள் கேட்கவே மாட்டர்கள்... அவர்களே அவர்களின் வோட்டுக்களை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதுதான் சுயமரியாதை...

ஆனால் இந்திய தேர்தல் களத்தில் யாருக்கு வோட்டுப்போட வேண்டும் என்பதை, இலங்கை அகதிகள் தான் கற்றுதர வேண்டி உள்ளது.. இதை அவமானம் என்று கருதாமல் தமிழர்களும் முட்டாள்தனமாக பின்பற்றி அடிவருடிகளாக மாறி தங்களின் சுயமரியாதையை இழக்கிறார்கள்...

எந்த கட்சியயயும் தோற்கடிக்க போதுமான காரணங்கள் நம்மிடமே உள்ளது... வேலைவாப்பின்மை, நதி நீர், சுகாதாரம் என்று ஆயிரம் சொல்லலாம்...

ஆனால் இதை விட்டு, இலங்கையில் இருந்து வெளியேறி வசதியான சூழலில் வாழ்ந்து கொண்டு அவருக்கு வோட்ட்டு போடு அல்லது போடாதே என்று கூறும் மக்களை பின்பற்றுவதால் தமிழ் நாடு தமிழனின் தாகம் தீர்ந்துவிட போவதில்லை...

Anonymous said...

//சீமானின் கேள்விகளுக்கு ஏதும் பதில் இருக்கா? கலைஞர் மாதிரியே எதிர் கேள்வி கேக்கபுடாது...//
நீங்கள் சொல்வது சரிதான். வடிவேல் ஒரு படத்தில் சொன்னதையே திருப்பிச் சொல்வது போல, கலைஞர் நம்மை மெண்டலாக்கி விடுவார்.

லக்கிலுக் said...

அறிவுக்கொழுந்துகளே! :-)

சீமான் கேட்ட ஐந்து கேள்விகளில் எந்த கேள்வி கலைஞரை நோக்கியது என்று சொல்லுங்கள். விடை சொல்ல முயற்சிக்கலாம்!

ஒரிஜினல் "மனிதன்" said...

"அம்மா வைகோவை போட்டமாதிரி"

லக்கி ஏய்யா இப்பிடி பச்ச பச்சையா பேசுர.

Anonymous said...

ம்ம்

Anonymous said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

அத்திரி said...

//லக்கிலுக் said...
அம்மா வைகோவை போட்டமாதிரி சீமானை ஒரு ஒன்றரை வருஷம் கலைஞர் உள்ளே உட்கார்ந்திருக்க வைத்திருக்க வேண்டுமோ? :-)//

வாங்க லக்கி ... தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் கலைஞருக்கு நீங்க சொன்னதுதான் முதல் வேலையா இருக்கும்( தேர்தல் முடிவை பொறுத்தது)........ நன்றி

அத்திரி said...

// T.V.Radhakrishnan said...
//காங்கிரசை விரட்டி அடியுங்கள்....//
repeateyyy//

நன்றி ஐயா......

// "அகநாழிகை" said...
அத்திரி சார்,
பதிவு அருமை.
ஐ-கூகுளில் உங்களது பதிவை படிக்க முடியவில்லை.
டெம்ப்ளேட் வண்ணத்தை மாற்ற முடியுமா ?
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

முடிஞ்ச வரைக்கும் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன்... நன்றி வாசுதேவன்

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
ஆகா.... ஒண்ணுமே மிச்சம் இல்லாம திட்டி முடிச்சுட்டாரு போல.. இந்த தடவை ஐயா பாடு கொஞ்சம் கஷ்டம்தான்..//


இன்னும் ஏகப்பட்டது சொன்னார்.. மறந்து போச்சு...நன்றி நண்பா

// ஆதிமூலகிருஷ்ணன் said...
அதெல்லாம் சரி.. நீங்க சட்டையை பிச்சுக்கிட்டு எங்கேயும் போயிடாதீங்க..//

வாங்க அண்ணே... நான் அப்படியெல்லாம் ஆகமாட்டேன்..கவலப்படாதிங்க

அத்திரி said...

//நசரேயன் said...
சர வெடியா இருக்கு//

வாங்க அண்ணாச்சி


//பாலா... said...
ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல முடியாது.//

காங்கிரசு நிலைமை திண்டாட்டம் தான்.நன்றி பாலா

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
ஓட்டுப்போட ஊருக்கு போகலீயா தல?//

இல்ல மாப்ளே லீவு கொடுக்க மாட்டுக்காங்க

// சுபா said...
பதிவு அருமை சார்!//

நன்றி சுபா..

அத்திரி said...

// Cable Sankar said...
எனக்கென்னவோ.. இலங்கை பிரச்சனை தேர்தலின் போது போடப்படும் ஓட்டுகளில் எதிரொலிக்கும் என்று தோன்றவில்லை.. நம்மை போன்ற பதிவர்களும், மிக குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே இந்த பிரச்சனையை முன்னிருத்தி பேசுகிறார்கள். மதுரையில் என் நண்பனிடம் கேட்டேன் இந்த முறை இலங்கை தமிழர் ப்ரச்சனையினால் தமிழ் வளர்த்த உங்க ஊர்ல திமுக தோக்குமா? என்று அதுக்கு அவன் ‘ இங்க இருக்குற லோக்கல் தமிழன் ப்ரச்சனையே பெரிசா இருக்கு இதுல எங்கிட்டு இலங்கை தமிழன் ப்ரச்சனையை பாக்குறது?”//

சரிதான் அண்ணே... ஆனா நீங்க சொல்றது அம்மா தேர்தல் பிரச்சாரத்தில் பேச ஆரம்பிக்கும் முன்... முன்ன விட இந்த பிரச்சினை இப்போது கொஞ்சம் பேசப்படுகிறது...

அத்திரி said...

//Anonymous said...
//லக்கிலுக் said...
அம்மா வைகோவை போட்டமாதிரி சீமானை ஒரு ஒன்றரை வருஷம் கலைஞர் உள்ளே உட்கார்ந்திருக்க வைத்திருக்க வேண்டுமோ? :-)//
சீமானின் கேள்விகளுக்கு ஏதும் பதில் இருக்கா? கலைஞர் மாதிரியே எதிர் கேள்வி கேக்கபுடாது...//

பெயரில்லாதவரே சீமானின் கேள்விகள் அனைத்தும் மத்தியில் இருக்கும் காங்கிரசு அரசை நோக்கித்தான்....

அத்திரி said...

//Anonymous said...
எந்த கட்சியயயும் தோற்கடிக்க போதுமான காரணங்கள் நம்மிடமே உள்ளது... வேலைவாப்பின்மை, நதி நீர், சுகாதாரம் என்று ஆயிரம் சொல்லலாம்... //


சரியாச் சொன்னீங்க பெயரில்லாதவரே.. ஆனால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இதை பிரதான படுத்தி பேசும் போது என்ன செய்றது???

அத்திரி said...

// Anonymous said...
//சீமானின் கேள்விகளுக்கு ஏதும் பதில் இருக்கா? கலைஞர் மாதிரியே எதிர் கேள்வி கேக்கபுடாது...//
நீங்கள் சொல்வது சரிதான். வடிவேல் ஒரு படத்தில் சொன்னதையே திருப்பிச் சொல்வது போல, கலைஞர் நம்மை மெண்டலாக்கி விடுவார்.//

ஏன் இப்படி ஒரு வயதானவர் மேல் இந்த கொலைவெறி

//லக்கிலுக் said...
அறிவுக்கொழுந்துகளே! :-)
சீமான் கேட்ட ஐந்து கேள்விகளில் எந்த கேள்வி கலைஞரை நோக்கியது என்று சொல்லுங்கள். விடை சொல்ல முயற்சிக்கலாம்!//

மாணவர்கள் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க கல்லூரியை மூடச்சொன்னது மாநில அரசு தானே லக்கி

அத்திரி said...

//ஒரிஜினல் "மனிதன்" said...
"அம்மா வைகோவை போட்டமாதிரி"
லக்கி ஏய்யா இப்பிடி பச்ச பச்சையா பேசுர.//

அய்யய்யோ இந்த பதிவிலுமா?

அத்திரி said...

.// Anonymous said...
ம்ம்//

நன்றி பெயரில்லாதவரே

// Anonymous said...
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி//

நன்றி பெயரில்லாதவரே

ஆதவா said...

அருமையான பேச்சு, அருமையான பதிவு.

நாம் சிந்திக்கத் தகுந்த சீமானின் கருத்துக்கள்... தலைப்பைப் பார்த்ததும் நான் என்னவோ ஏதோ என்று வந்தேன்!!~!!

Marathamizhan said...

சீமானின் முழக்கம் நடுநிலை வாக்காள‌ர்களை சிந்திக்க வைத்துள்ளது.
தி.மு.க. மற்றும் காங்கிரசு கட்சியினர் ஈழப்பிரச்சினையில் நல்ல பெயர் வாங்க அவர்களும் பல நாடகங்களை நடத்திபார்த்தனர்.பருப்பு வேகவில்லை.மறுபடியும் பழைய பல்லவி. அதாவது ஈழம் இத்தேர்தலில் ஒரு பிரச்சினையே இல்லை என்பதுதான்.உண்மையில் ஈழம்,மின்வெட்டு,வேலையிழப்பு போன்றவை காங்கிரசு கூட்டணியை இத்தேர்தலில் ஒழிக்கப்போவது உள்ளங்கை நெல்லிக்கனி.
தோழமையுடன் மறத்தமிழன்.

Anonymous said...

//அம்மா வைகோவை போட்டமாதிரி சீமானை ஒரு ஒன்றரை வருஷம் கலைஞர் உள்ளே உட்கார்ந்திருக்க வைத்திருக்க வேண்டுமோ? :-)//

நல்ல ஜனநாயக சிந்தனை. எதிர்த்து பேசினால் உள்ளே தள்ளு. உடன்பிறப்புகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சரிதானே லக்கி? :-)

லக்கிலுக் said...

அண்ணாச்சி! நாங்க உள்ளே தள்ளுறதுக்கும் அம்மா உள்ளே தள்ளுறதுக்கும் வித்தியாசம் இருக்கு.

நாங்க சும்மா ஒப்புக்குச் சப்பாணியாய் உள்ளே தள்ளுவோம்.

மதுரை ஜெயிலில் தள்ளப்பட்ட கொளத்தூர் மணி அண்ணனை கேட்டுப் பாருங்கள் :-)

அத்திரி said...

//ஆதவா said...
அருமையான பேச்சு, அருமையான பதிவு.நாம் சிந்திக்கத் தகுந்த சீமானின் கருத்துக்கள்... தலைப்பைப் பார்த்ததும் நான் என்னவோ ஏதோ என்று வந்தேன்!!~!!//

நன்றி ஆதவா

அத்திரி said...

// Marathamizhan said...
சீமானின் முழக்கம் நடுநிலை வாக்காள‌ர்களை சிந்திக்க வைத்துள்ளது//

ஆனால் இது எந்த அளவுக்கு வேலை செய்யும் என்று தெரியவில்லை...... ஓட்டுக்கு பணம் என்பதையும் தாண்டி வரவேண்டும்...நன்றி மறத்தமிழன்.

அத்திரி said...

//ஆசிப் மீரான் said...
//அம்மா வைகோவை போட்டமாதிரி சீமானை ஒரு ஒன்றரை வருஷம் கலைஞர் உள்ளே உட்கார்ந்திருக்க வைத்திருக்க வேண்டுமோ? :-)//
நல்ல ஜனநாயக சிந்தனை. எதிர்த்து பேசினால் உள்ளே தள்ளு. உடன்பிறப்புகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சரிதானே லக்கி? :-)//

ஆளும் கட்சி என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் இதுதான் இந்திய சனநாயகம்..நன்றி ஆசிப் மீரான்

அத்திரி said...

//லக்கிலுக் said...
அண்ணாச்சி! நாங்க உள்ளே தள்ளுறதுக்கும் அம்மா உள்ளே தள்ளுறதுக்கும் வித்தியாசம் இருக்கு.//


அம்மா ஹார்டு, ஐயா சாஃப்ட்..... ....எப்படினாலும் அதிகாரம் இருந்தால் என்ன வேணும்னாலும் செய்யலாம்....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அத்திரி தம்பிக்கு ஒரு 'ஜே' போட்டுக்குறேன்..

அத்திரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அத்திரி தம்பிக்கு ஒரு 'ஜே' போட்டுக்குறேன்..//வாங்க அண்ணே ரொம்ப நன்றி