Monday, May 11, 2009

பசங்க----விமர்சனம்--கலக்கிட்டீங்கடே

பெரிய ஹீரோ, ஹீரோயின்
ஹீரோவின் பஞ்ச் டயலாக்
குத்துப்பாட்டு, குத்து டான்ஸ்


மேற்சொன்ன எதுவுமே இப்படத்தில் கிடையாது.. ஆனாலும் புதுமுக இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய நேர்த்தியான, இயல்பான திரைக்கதை மூலம் இரண்டரை மணிநேரம் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறார். தமிழில் குழந்தைகளுக்கான படம் என்றால் விரல் விட்டு எண்னிவிடலாம்...அஞ்சலி, மழலைப்பட்டாளம்..... இந்தப்படத்தில் எல்லாம் குழந்தைகளின் செயல் இயல்புக்கு மீறியதாக இருக்கும்.... இந்தப்படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் எதுவும் கிடையாது.
 
  சிறிய டவுனில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு ஆண்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை..அந்த பள்ளியில் 6வது படிகும் ஜீவாவுக்கும், அதே வகுப்புக்கு புது மாணவனாக வரும் அன்புக்கும் இடையே நடக்கும் மோதல்.... இல்லை குறும்புத்தனமான சேட்டைகள் தான் கடைசிவரைக்கும்.. இருவரும் நண்பர்கள்  ஆனார்களா என்பதுதான் கதை...இந்த கதைக்கிடையே அன்புவின் சித்தப்பாவுக்கும், ஜீவாவின் அக்காவுக்கும் இடையே மலரும் காதல்.


''ஜீவாவுக்கு இப்ப கோபம் வரும், இப்ப பாரேன் கைய முறுக்குவான், நெஞ்சு வெடைக்கும் பாருனு'' பக்கடாவும் குள்ள மணியும் ஏத்திவிடும் காட்சிகள் அருமை...படம் முழுக்க காட்சிக்கு காட்சி மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது... சின்ன வயது குறும்புத்தனமான காட்சிகள்  அதிகம்... குறிப்பா சாக்பீஸை ஒளித்துவைப்பது, பென்சிலை கூர்மயாக சீவி குத்துவது, கருநாக்கு வாயன் சொன்னால் நடக்கும் என்று நம்புவது,அதிகாலையில் எழுந்து போட்டி போட்டு படிப்பது.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. அதிலும் புஜ்ஜியாக வரும் சிறுவனின் லூட்டிகள் சிரித்தே வயிறு புண்ணாகிவிட்டது.ஜீவாவின் அத்தை மகளிடம் அன்பு பேசும் போது ஜீவா கோப்படும் இடம் அருமை.


இந்த சின்னப்புள்ளைங்க கதைக்கிடையே வரும் மீனாட்சி ஸோப்பிக்கண்ணுவின் காதல் காட்சிகள் கலகல... அதுவும் செல்போனை வைத்து விளையாடும் காட்சிகள் புதுசு. சோப்பிக்கண்ணுவிடம் பாலிசி போட்டுக்கோ ..''உங்கிட்ட பழகுனதுல அது ஒன்னு மிச்சம் நினைச்சிக்கிறேன்னு'' மீனாட்சி சொல்லுமிடம்... தியேட்டரே சிரித்தது. இவர்களின் காதல் காட்சிகளில் பிண்ணனியில் ஒலிக்கும் பாடல் கலக்கல்.பெற்றோர்களுக்கிடையே நடக்கும் சண்டையால் பிள்ளைகள் பாதிக்கப்படுவது போன்ற காட்சிகள் நல்ல படிப்பினை... பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை... ஆனால் பாடல்களில் வரும் காட்சிகள் அருமை.....குடும்ப வாழ்க்கையில் ஆண்கள்தான் விட்டுக்கொடுக்கனுமாம் அப்படினு படத்துல சொல்றாங்க.... எவ்ளோதான் விட்டுக் கொடுக்க முடியும்,... ஆதி அண்ணே நீங்களே சொல்லுங்க அவ்வ்வ்வ்வ்வ்


படம் ஆரம்பித்து பத்து நிமிசத்துக்கு அப்புறம் நான் தியேட்டரில் இல்லை சிவசைலம் அத்திரி கலா நிலைய பள்ளிக்கூடத்திற்கே சென்றுவிட்டேன்.....


பசங்க-- பள்ளிக்காலநினைவுகள்


மொத்தத்தில் பசங்க கலக்கிட்டாங்க

12 comments:

தங்கமீன் said...

very good movie.

your writing is also good.
"kalakkitta makkaa"

தங்கமீன் said...

Hai.
Naanthaan firstuu.

கார்த்திகைப் பாண்டியன் said...

படம் பார்த்து பீல் ஆகிட்டீங்களா நண்பா? என்சாய்..

Cable சங்கர் said...

nice rewiew

Anonymous said...

good

Anonymous said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

நசரேயன் said...

பாதிப் படம் தான் பார்த்தேன்.. இன்னைக்கு மீதி படமும் பார்கிறேன்

அ.மு.செய்யது said...

ஆஹா..உங்க விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறதே !!!

ஆனால் வாய்ப்பு ??

அத்திரி said...

//நகைக்கடை நைனா said...
very good movie.
your writing is also good.
"kalakkitta makkaa"//


நன்றி நகைக்கடை நைனா

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
படம் பார்த்து பீல் ஆகிட்டீங்களா நண்பா? என்சாய்..//

நன்றி நண்பா

அத்திரி said...

//Cable Sankar said...
nice rewiew//

நன்றி அண்ணே

// Anonymous said...
good//


நன்றி பெயரில்லாதவரே

அத்திரி said...

//நசரேயன் said...
பாதிப் படம் தான் பார்த்தேன்.. இன்னைக்கு மீதி படமும் பார்கிறேன்//

படத்தை மிஸ் பண்ணாதிங்க அண்ணாச்சி

//அ.மு.செய்யது said...
ஆஹா..உங்க விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறதே !!!
ஆனால் வாய்ப்பு ??//

சீக்கிரமா போய் பாருங்க செய்யது அருமையான படம்