Saturday, June 6, 2009

பிரபல பதிவர் கேபிளாரே... நாங்க என்ன மட்டமா??????

ரெண்டு மூனு நாளா 32 கேள்விகள் தொடர் பதிவை எல்லா "பிரபல" பதிவர்களும் எழுதியிருக்காங்க. இந்த தொடர் பதிவை நான் ஒரு மாதத்திற்கு முன்பே எழுதிவிட்டேன்...இந்த தொடர் பதிவை எழுதச்சொல்லி ரெண்டு "பிரபல"  பதிவர்களை அழைத்தேன்..அதில் ஒரு "பிரபல" பதிவர் என் அறிவுக்கும் ,திறமைக்கும் ஏத்த மாதிரி ஒரு கேள்வி கூட இதில் இல்லையே....இதப்போய் எழுதச்சொன்னா எப்படி? என்றார்....... இன்னொரு "பிரபல"  பதிவர் 32 கேள்வியா அதிகமா இருக்கேன்னார்... ஆனால் அவர் எழுதிய பதிவு இந்த தொடர் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் எழுதினார்.....


நான் சொன்ன முதல் "பிரபல"  பதிவர் நம்ம கேபிள் சங்கர்.இந்த கேள்வி பதில் தொடர் பதிவு அவருடைய ரேஞ்சுக்கு இல்லைன்னு சொன்னவர் ரெண்டு நாள் முன்னாடி ஜப்பான்ல ஜாகிசான் கூப்பிட்டாக,அமெரிக்காவுல ஜாக்சன் கூப்பிட்டாக அப்படின்ற கத மாதிரி எழுதி முடித்துவிட்டார்...... நான் கேட்கும்போதெல்லாம் எனக்கும் டைமே இல்லை அப்படி இப்படினு சொன்னவர்... ஒரு மாசமா டைமே கிடைக்காதவர்க்கு இப்பதான் டைம் கெடைச்சது போல..

அண்ணே கேபிள் அண்ணே நான் ஒருமாசமா கேட்டுக்கிட்டு இருந்தேன்.இதுதான் உங்க ...!!!!!!!ஒரு சாதாரண விசயத்துல இவ்ளோ நுண்ணரசியல் பண்றீங்களே.... இது நியாயமா??


ஒரு நாளைக்கு ரெண்டு மூனு சினிமா பதிவு போட மட்டும் டைம் கெடைக்குது..... நான் கூப்பிடும்போது எழுதாம இன்னைக்கு உங்களுக்கு சமமான பிரபல பதிவர்கள் கூப்பிட்ட உடனே எழுதுறீங்களே.... ஒரு குரூப்பாத்தான் இருக்கீங்க......................அரசியல் கட்சிக்குள்ளத்தான் கோஷ்டிகள் அதிகமா இருக்கும்..வலையுலகிலுமா.........
 
அதனால பிரபலமில்லாத பதிவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் தொடர் பதிவுக்கு எல்லாம் உங்க ரேஞ்சுக்கு தகுந்த பதிவர்களை மட்டும் தொடர் பதிவு எழுத கூப்பிடுங்கப்பா...... அப்புறம் "பிரபல" பதிவர்களின் ரேஞ்சு என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குங்க.....



இன்னும் ஒரு மேட்டர்... இன்னைக்கு ஒரு"பிரபல" பதிவர் அதே கேள்விகள் தொடரில் பிரபல பதிவர் கூப்பிட்டதனால எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்...ஆனால் இந்த பதிவரை இரண்டு மாதங்களுக்கு முன்பே கடையம் ஆனந்த் இந்த தொடரை எழுதச்சொல்லி அழைத்திருந்தார்........


49 comments:

Cable சங்கர் said...

//நான் சொன்ன முதல் "பிரபல" பதிவர் நம்ம கேபிள் சங்கர்.//

1)அல்லோவ்வ்வ்.. நானெல்லாம் பிரபல பதிவர்னு யார் சொன்னாங்க.. முதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க..
2)அந்த அறிவுக்கும் திறமைக்கும் சவாலா கேள்வி கேட்ட அந்தபிரபல பதிவர் யாரு>?
3)நுண்ணரசியல்னா என்ன..?
4)நான் எப்ப ஒரு நாளுல ரெண்டு மூணு சினிமா மேட்டர் எழுதினேன். ஒண்ணு எழுதறதுக்கே நாக்கு தள்ளுது..?
5) அதான் யார் யார் எல்லாம் கூப்டாஙக்ளோ அவங்க பேர் எல்லாம் சொல்லி எழுதிட்டனில்ல அப்புறம் என்ன>?
6) எனக்கென்னவோ யாரோ சொல்லி கொடுத்து எழுதினமாதிரி இருக்கு..? யார் சொல்லி கொடுத்து எழுதியது..?
7)ஒரு குருப்பா தான் அலையறோம்னு சொல்றீங்களே.. எங்க குரூப்புக்கு யார் தலிவர்னு சொல்லுங்களேன்..?
8)கோஷ்டி.. என்றால் என்ன எட்டு முழ வேஷ்டி மாதிரியா..அது..?
9)என்னை மட்டும் குறிவைத்து தாக்கியமாதிரி இருக்குதே.. அது ஏன்.. உங்களூக்கு ஏன் இந்த் கொலைவெறி../
10) ஒரு ரவுண்டா இருக்கட்டுமேன்னுதான் இந்த கேள்வி.. உங்களுக்கு இந்த பெயர் யார் வைத்தது..? உங்களுக்கு பிடிச்சுதான் வச்சீங்களா.?

சென்ஷி said...

ஆஹா :-))

அபி அப்பா said...

அட லூஸ்ல விடுங்க!

அத்திரி said...

//அல்லோவ்வ்வ்.. நானெல்லாம் பிரபல பதிவர்னு யார் சொன்னாங்க.. முதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க..//


அதான் 2லட்சம் ஹிட்ஸு..200 பாலோயர் அப்படின்னு சொல்றீங்களே???/ அத வச்சித்தான்

//அந்த அறிவுக்கும் திறமைக்கும் சவாலா கேள்வி கேட்ட அந்தபிரபல பதிவர் யாரு>?//

உங்க அறிவையும் திறமையையும் வச்சி கண்டுபிடிச்சிக்கிடுங்க

Cable சங்கர் said...

அது சரி ஒரு கேள்வி உட்டுபோச்சு.. அது யார்ணே.. புதுசா இன்னைக்கு கேள்வி பதில் எழுதின பதிவர்..?:)

Cable சங்கர் said...

கேட்ட 10 கேள்விக்கே ஒட்டுக்கா பதில் சொல்ல முடியலையே.. நீங்க மட்டும் 32 கேள்வி கேட்டா எவ்வளவு கஷ்டம்..?:(

அத்திரி said...

//Cable Sankar said...
3)நுண்ணரசியல்னா என்ன..?//

நீங்க பண்றீங்களே ஒரு அரசியல் அதான்..................

// அதான் யார் யார் எல்லாம் கூப்டாஙக்ளோ அவங்க பேர் எல்லாம் சொல்லி எழுதிட்டனில்ல அப்புறம் என்ன>?//

பெயர் எழுதிட்டா போதுமா???.......... நான் எப்ப எழுதச்சொன்னேன்........ உங்க நண்பர் எழுத சொன்னார்ன உடனே எழுதுறீங்களே.அதுக்குத்தான்

நட்புடன் ஜமால் said...

ஆஹா! ...

அத்திரி said...

//எனக்கென்னவோ யாரோ சொல்லி கொடுத்து எழுதினமாதிரி இருக்கு..? யார் சொல்லி கொடுத்து எழுதியது..?//

ஆமா சொல்லிக்கொடுத்தவர் எனக்கு குரு மாதிரி

//ஒரு குருப்பா தான் அலையறோம்னு சொல்றீங்களே.. எங்க குரூப்புக்கு யார் தலிவர்னு சொல்லுங்களேன்..?//

நீங்கதான் அந்த குரூப்புக்கு தலிவர்ன்னு கேள்விப்பட்டேன்

அத்திரி said...

//சென்ஷி said...
ஆஹா :-))//

வாங்க சென்ஷி.நன்றி

//அபி அப்பா said...
அட லூஸ்ல விடுங்க!//

ஒரு குரூப்பா இருந்துகிட்டு அவங்களுக்குள்ளே ஏகப்பட்ட ரவுசு.என்ன சொல்றது...நன்றி அபி அப்பா

அத்திரி said...

Cable Sankar said...
//கோஷ்டி.. என்றால் என்ன எட்டு முழ வேஷ்டி மாதிரியா..அது..?//

அது உங்களோட யூத்து கோஷ்டி

//என்னை மட்டும் குறிவைத்து தாக்கியமாதிரி இருக்குதே.. அது ஏன்.. உங்களூக்கு ஏன் இந்த் கொலைவெறி..//

காய்ச்ச மரம்தான் கல்லடி படும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்


//ஒரு ரவுண்டா இருக்கட்டுமேன்னுதான் இந்த கேள்வி.. உங்களுக்கு இந்த பெயர் யார் வைத்தது..? உங்களுக்கு பிடிச்சுதான் வச்சீங்களா.?//

ஊட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும்...........

அத்திரி said...

//நட்புடன் ஜமால் said...
ஆஹா! ...//

என்ன ஜமால் வெறும் ஆஹாவோட போய்ட்டீங்க...இந்த மாதிரி பிரபலங்களை பற்றி ஏதாவது சொல்லுங்க..........நன்றி

அத்திரி said...

//Cable Sankar said...
அது சரி ஒரு கேள்வி உட்டுபோச்சு.. அது யார்ணே.. புதுசா இன்னைக்கு கேள்வி பதில் எழுதின பதிவர்..?:)//


உங்க ரெண்டாவது கேள்விக்கு என்ன பதிலோ அதுதான் இதுக்கும்

நட்புடன் ஜமால் said...

நிறைய இருக்கு அத்திரி சொல்ல

ஆனாலும் இன்னும் குழப்ப நிலையில் தான் உள்ளேன்.

மேலும் என்னை அறிந்தவர்கள் மிக குறைவு,

நாம எல்லாம் நட்பு கூட்டம்.

போகட்டும் விடுங்க.

அத்திரி said...

//Cable Sankar said...
கேட்ட 10 கேள்விக்கே ஒட்டுக்கா பதில் சொல்ல முடியலையே.. நீங்க மட்டும் 32 கேள்வி கேட்டா எவ்வளவு கஷ்டம்..?:(//


அதான் பதில் சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன??

ARV Loshan said...

ஆஹா.. என்னைய்யா நடக்குதிங்கே...

கோஷ்டி & வேஷ்டி.. நல்லா இருக்குங்கோவ்..

உண்மைத்தமிழன் said...

அத்திரி தம்பி..

நான் உனக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்..

நீ ஏப்ரல் மாதம் கேட்ட கேள்விக்கு ஒன்றரை மாதம் கழித்துத்தான் கேபிளு எழுதியிருக்காரு..

அதுலேயும் ஹாலிவுட்பாலா கூப்பிட்டாராம்.. அக்னிபார்வை கூப்பிட்டாராம்.. இதுக்கப்புறமும் எழுதாம இருந்தா நல்லாயிருக்காதாம்..

நல்லா காது குத்துறார்ய்யா நம்ம வருங்கால டைரக்டரு..

நீ விட்ராத.. இதைக் கெட்டியா பிடிச்சுக்க..

அப்பால நோட்டீஸ் அடிச்சு போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்புன்னு ஆரம்பிப்போம்..

தீக்குளிக்க யார் வர்றாங்களோ வரலையோ நம்ம வண்ணத்துப்பூச்சியார் ஓடோடி வருவார்..

கேபிள் மேல அவருக்கு அவ்ளோ பாசம்..?

அப்புறம் நமக்கென்ன கவலை..?

Raju said...

அய்யா, நமக்கு இன்னோரு டைம்பாஸ் கிடைச்சுருச்சு...!
:)

வேத்தியன் said...

அத்திரி கலக்குங்க....

:-)

அத்திரி said...

//LOSHAN said...
ஆஹா.. என்னைய்யா நடக்குதிங்கே...

கோஷ்டி & வேஷ்டி.. நல்லா இருக்குங்கோவ்..//

வாங்க லோஷன்....... நன்றி

அத்திரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நீ விட்ராத.. இதைக் கெட்டியா பிடிச்சுக்க..//

அண்ணே சொல்லிட்டீங்க.......விட்டுடுவேனா............நன்றி

அத்திரி said...

//டக்ளஸ்....... said...
அய்யா, நமக்கு இன்னோரு டைம்பாஸ் கிடைச்சுருச்சு...!
:)//


நான் எவ்ளோ சீரியசா எழுதியிருக்கேன் உங்களுக்கு டைம் பாசா.......நன்றி டக்ளஸ்


//வேத்தியன் said...
அத்திரி கலக்குங்க....

:-)//

நன்றி வேத்தியன்

Anonymous said...

பிரபல பதிவர்கள் என்று நான் யாரையும் நினைப்பதில்லை.


அதிக நாட்களாக எழுதிக்கொண்டிருக்கின்ற போதும் எல்லோருடன் நட்பு பாராட்டுபவர் என்றைக்கும் சிறந்த பதிவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.


இடையில் ஒரு நேரத்தில் பிரபல பதிவர்கள் யார் என்ற போட்டி வந்தது? போட்டி போட்டுக்கொண்டு அதிக பாலோர்ஸ் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் பிரபல பதிவர் என்றும் ஒருவரும், அசிங்கமான தலைப்பை வைத்து தினமும் வெப்ப இடுக்கையில் இடம் பெறுகிறவரே பிரபல பதிவர் என்று மற்றெhருவரும் விளக்கம் கொடுத்தனர்.

இன்னும் சிலர் பெயருக்கு முன்னால் பட்டங்களை வைத்துக்கொண்டு தங்களை பிரபல பதிவர்கள் என்று முன் நிறுத்தி கொண்டதும் உண்டு.


கவுன்டமணி ஒரு ஒரு படத்தில் சொல்வார்....நீ வாங்குற 5 ,10-க்கு இந்த விளம்பரம் தேவையான்னு? அப்படி தான் இருக்கு இந்த பிரபல பதிவர்கள் கூத்து. அந்த கூத்து காலம் காலம் நடந்து கொண்டு தான் இருக்கும்.


அதை பத்தி நம்ப ஏன் கவலைப்படனும்...

இதில முக்கால் வாசி பேர் தங்களின் உண்மையான பெயரை கூட பதிவுகளில் கொடுக்க தெம்பு இல்லாதவர்கள்.

சமயங்களை கடந்து ஏற்ற தாழ்வுகளை கடந்து சிலர் நட்பு பாராட்டுவார்கள்.அவர்களை நான் சிறந்த பதிவராக நினைக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் எவ்வளவு உயரத்திற்கு செல்கின்ற போதும் அகந்தை கொள்ள மாட்டார்கள்.


இப்படி நான் சொல்வதால் அனானி போல் வந்து மறுமொழியிடுவார்கள். இதை தவிர அவர்களுக்கு என்ன தெரியும்.

பிரபல பதிவர்கள் என்று பெயர் எடுப்பதை விட சிறந்த பதிவர் என்று மற்றவர்கள் சொல்கின்ற விதத்தில் இருப்பது தான் சிறப்பு.

Anonymous said...

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா. விடுங்க அத்திரி.

குசும்பன் said...

கேபிள் அண்ணாச்சி இந்தனை கேள்வி கேட்பதற்கு பதில் அப்பவே பதில் எழுதி இருக்கலாமேன்னு தோனுதான் இல்லீயா?

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா முடியல! எத்தனை கேள்வி எத்தனை பதில்!

குசும்பன் said...

அத்திரி அண்ணாச்சி குத்துங்க எசமான் குத்துங்க..இந்த பிரபல பதிவருங்களே இப்படிதான்!

Anonymous said...

//பிரபல பதிவர்கள் என்று பெயர் எடுப்பதை விட சிறந்த பதிவர் என்று மற்றவர்கள் சொல்கின்ற விதத்தில் இருப்பது தான் சிறப்பு.//

வெகு அருமை மிஸ்டர் ஆனந்த்!

நிகழ்காலத்தில்... said...

லேபிளில் நையாண்டி என உள்ளதால் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.

ஆனாலும் கடையம் ஆனந்த் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்

Thamira said...

யோவ்.. வெண்ணை.! உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு உங்களுக்கு பதில் எழுதி கடைசியில் அதை பதிவாகவே போட்டுத்தொலைத்துவிட்டேன். வந்து பாரும்.

Thamira said...

மேலும் உங்கள் பதிவில் பின்னூட்டத்தில் நண்பர் கடையம் ஆனந்த் //அதிக நாட்களாக எழுதிக்கொண்டிருக்கின்ற போதும் எல்லோருடன் நட்பு பாராட்டுபவர் என்றைக்கும் சிறந்த பதிவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.// என்றும் // நீ வாங்குற 5 ,10-க்கு இந்த விளம்பரம் தேவையான்னு? அப்படி தான் இருக்கு இந்த பிரபல பதிவர்கள் கூத்து.// என்றும் // இதில முக்கால் வாசி பேர் தங்களின் உண்மையான பெயரை கூட பதிவுகளில் கொடுக்க தெம்பு இல்லாதவர்கள்.// என்றும் கருத்துச்சொல்லியிருக்கிறார். முதல் பகுதிக்கான கருத்து : எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர் ஒரு நல்ல நண்பர், சிறந்த பதிவராகவும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டாவது பகுதிக்கான கருத்து : நீங்கள் பிரபலம் என்று கருதும் அனைவரையும் நோக்கியுமே இந்தக்கமெண்ட்டா? இப்படிப் பொதுவாகச் சொல்லலாமா? சற்று சிந்தியுங்கள். மூன்றாவது பகுதிக்கான கருத்து : எழுதுவதற்காக பல்வேறு காரணங்களுக்காக புனைப்பெயர் வைத்துக்கொள்வதென்பது உலகவழக்கம். இதில், உண்மையான பெயரைக்கொடுக்க எந்தத் தெம்பு வேண்டும் என்கிறீர்கள்? ரெண்டு முட்டை உடைச்சுக்குடித்தா அது வருமா?

தராசு said...

கொஞ்ச நாளா "ஈழப்பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு" ன்னு பதிவுலகம் சூடா இருந்துச்சு.

அதுக்கப்புறமா, அத்திரி அண்ணன் ஒரு வெடியை (நியாயாமா) கொளுத்திப் போட்டுருக்கறாரு, என்னாகப் போகுதோ...,

எதுவாயிருந்தாலும் லூசுல விடுங்கப்பு.

Anonymous said...

முதல்ல இருக்கற தண்ணி கஷ்டத்தில் குளிக்கற வழியப்பாரு அப்பு அப்பறம் டி சரி தீ குளிக்கலாம்..

சென்ஷி said...

@ அத்திரி & கடையம் ஆனந்த்

முடியலை! :(((((

கார்த்திகைப் பாண்டியன் said...

பத்த வச்சுட்டீங்க நண்பா.. இது எங்க எல்லாம் வெடிக்கப் போகுதோ?

நையாண்டி நைனா said...

ம்ம்ம்.....பாக்குறேன் என்னா தான் நடக்குது என்று???

அத்திரி said...

//இதில முக்கால் வாசி பேர் தங்களின் உண்மையான பெயரை கூட பதிவுகளில் கொடுக்க தெம்பு இல்லாதவர்கள். //

மாப்ளே ஏன் இந்த கொலைவெறி????? நல்லா இரு..

// globen said
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா. விடுங்க அத்திரி.//

நன்றி globen

அத்திரி said...

//குசும்பன் said...
அத்திரி அண்ணாச்சி குத்துங்க எசமான் குத்துங்க..இந்த பிரபல பதிவருங்களே இப்படிதான்!//

ஆதி அண்ணன் நீங்க கூப்பிட்டதுக்கு அப்புறம்தான் தொடர் எழுதினார்......அதனால் நீங்களும் பிரபல பதிவர்தான்......நன்றி குசும்பன்

அத்திரி said...

//நிகழ்காலத்தில்... said...
லேபிளில் நையாண்டி என உள்ளதால் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.//

உண்மையிலே நையாண்டிதான் ஐயா.......நன்றி நிகழ்காலத்தில்

//ஆதிமூலகிருஷ்ணன் said...
யோவ்.. வெண்ணை.! உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு உங்களுக்கு பதில் எழுதி கடைசியில் அதை பதிவாகவே போட்டுத்தொலைத்துவிட்டேன். வந்து பாரும்.//

அண்ணே பதிவை பாத்து பின்னூட்டமும் போட்டுட்டேன்

அத்திரி said...

// தராசு said...
அத்திரி அண்ணன் ஒரு வெடியை (நியாயாமா) கொளுத்திப் போட்டுருக்கறாரு, என்னாகப் போகுதோ...,//

வெடினாலே எனக்கு ரொம்ப பயம் அண்ணே...நன்றி

//மயில் said...
முதல்ல இருக்கற தண்ணி கஷ்டத்தில் குளிக்கற வழியப்பாரு அப்பு அப்பறம் டி சரி தீ குளிக்கலாம்..//

யாருப்பா அது .....தேவையில்லாம தண்ணி பிரச்சினைய பேசுறது????நன்றி மயில்

அத்திரி said...

//சென்ஷி said...
@ அத்திரி & கடையம் ஆனந்த்
முடியலை! :(((((//

இதுக்கே முடியலையா??

//கார்த்திகைப் பாண்டியன் said...
பத்த வச்சுட்டீங்க நண்பா.. இது எங்க எல்லாம் வெடிக்கப் போகுதோ?//

பத்த வைக்கிறதுன்னா எப்படி??
நன்றி பாண்டியன்

அத்திரி said...

// நையாண்டி நைனா said...
ம்ம்ம்.....பாக்குறேன் என்னா தான் நடக்குது என்று???//

நைனா நையாண்டியா ஒன்னுமே சொல்லலியே......

பிரபலப் பதிவர் said...

என்னப்பா இங்க என்னையப் பத்தி ஏன் எல்லாரும் சண்டப் போட்டுக்கிட்டு இருக்கீங்க?

யாரு பிரபலப்பதிவர்னு நீங்களா அடிச்சுக்கிறீங்க?

போங்க போங்க போயி வேலைய பாருங்க.

அத்திரி said...

//பிரபலப் பதிவர் said...
என்னப்பா இங்க என்னையப் பத்தி ஏன் எல்லாரும் சண்டப் போட்டுக்கிட்டு இருக்கீங்க?

யாரு பிரபலப்பதிவர்னு நீங்களா அடிச்சுக்கிறீங்க? //


நீங்கதான் அவரா??????.....

பாபு said...

நலமா அத்திரி ,ரொம்ப நாளாச்சு உங்க பக்கம் வந்து ,பார்த்தா இப்படி ஒரு பதிவு
ஏன்? என்ன ஆச்சு??

Anonymous said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர் ஒரு நல்ல நண்பர், சிறந்த பதிவராகவும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
//

இல்லை நண்பா. பதிவர்கள் சிறந்த நண்பராகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். புகழ் வரும் போது இது போன்ற பண்புகளும் அவசியம். எல்லோம் சேர்ந்தால் தானே தலைமை பண்பு.
//
இரண்டாவது பகுதிக்கான கருத்து ் நீங்கள் பிரபலம் என்று கருதும் அனைவரையும் நோக்கியுமே இந்தக்கமெண்ட்டா? இப்படிப் பொதுவாகச் சொல்லலாமா? சற்று சிந்தியுங்கள்.
//

ஒரு சிலரை தவிர என்று வைத்துக்கொள்ளலாம்.
//

மூன்றாவது பகுதிக்கான கருத்து ் எழுதுவதற்காக பல்வேறு காரணங்களுக்காக புனைப்பெயர் வைத்துக்கொள்வதென்பது உலகவழக்கம். இதில், உண்மையான பெயரைக்கொடுக்க எந்தத் தெம்பு வேண்டும் என்கிறீர்கள்? ரெண்டு முட்டை உடைச்சுக்குடித்தா அது வருமா?
//
சின்ன திருத்தம் நண்பா. புனைப்பெயர் வைத்துக்கொள்வது தவறியல்லை. இன்னும் சொல்ல போனால் இந்த பெயர் நம்முடைய பெயராக இருக்க கூடாதா என்று நினைக்கும் பலர் அது போன்ற பெயர்களில் எழுதுகிறhர்கள். பெயரின் உள்ள காதலால். அதை நான் விமர்ச்சிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

சிலர் புனைப்பெயரில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டும் என்று எண்ணத்தில் பதிவிடும் அந்த அனானி போன்றவர்களை தான் நான் குறிப்பிட்டேன்.

அனானி என்பது யார் என்பதை நீங்கள் விளக்க முடியுமா? இதில் முக்கால்வாசி பிரபலங்கள் அனானி போர்வையில் வந்து தானே கமாண்டு போடுகிறhர்கள். அந்த புனை நாயகர்களை பற்றி தான் குறிப்பிட்டேன்.

முட்டை குடித்தால் தெம்பு வருமா என்று எனக்கு தெரியாது. கலைஞர் இப்போது 3 முட்டை போடுகிறரே தாமிரா?

Sanjai Gandhi said...

எச்சுச்மி.. இந்த அட்ரஸ்க்கு எப்டி போகனும்?

அத்திரி said...

//பாபு said...
நலமா அத்திரி ,ரொம்ப நாளாச்சு உங்க பக்கம் வந்து ,பார்த்தா இப்படி ஒரு பதிவு
ஏன்? என்ன ஆச்சு??//


வாங்க பாபு ஒன்னுமில்லைச் சும்ம்ம்ம்ம்மா........

அத்திரி said...

//$anjaiGandh! said...
எச்சுச்மி.. இந்த அட்ரஸ்க்கு எப்டி போகனும்?//


பிரபல் பதிவருங்க கிட்ட கேளுங்க அவங்க சொல்வாங்க... நன்றி சஞ்சய்

ஊர்சுற்றி said...

உண்மையிலேயே நான் ரொம்ப லேட்டா வர்றேன்....