சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதல் விருப்பம் ரெயில் பயணம்,ரென்டாவது தனியார் டிராவல்ஸ், கடேசி சாய்ஸ்தான் அரசுப்பேருந்து பயணம்.தென் மாவட்டங்களுக்கு அரசுப்பேருந்தில் பயணம் என்றால் சகிப்புத்தன்மையுடன் கூடிய ஒரு பெரிய மனசு வேண்டும்.. நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய பதிவில் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ஓட்டுனர்க்கு நன்றி சொன்னதாக எழுதியிருந்தார்... சொன்ன நேரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் ஓட்டுனர்கள் தெய்வத்தின் தெய்வத்திற்கு சமமானவர்கள். அந்த மாதிரி ஓட்டுனர்களுக்கு கோயிலே கட்டலாம்.....
ஒரே ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்கோ நெல்லைக்கோ
தென்காசிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அரசு விரைவுப்பேரூந்தில் சென்றால்தான் நமக்கு எவ்ளோ பெரிய மனசு இருக்கும்னு தெரியும்.
என்னுடைய அனுபவத்தை சொல்லுகிறேன் ...
\1. சென்னையிலிருந்து தென்காசி செல்ல இரவு 8 மணிக்கு அரசு விரைவுப்பேருந்தில் ஏறினேன்.. நடத்துனரிடம் எத்தனை மணிக்கு அண்ணே தென்காசிக்கு போகும்ணே கேடதற்கு சிரிப்புடன் அதெல்லாம் டயத்துக்கு போயிடும் அப்படினார். இரவு 8மணிக்கு சென்னையில் இருந்தி கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 6 மணிக்குத்தான் திருச்சிக்கே வந்தது.... ஓட்டுனர் மாற்றம் என்று 30 நிமிடம் அங்கேயே நின்றது... அதுக்கப்புறம் வந்த ஓட்டுனர் மதியம் 12 மணிக்கு தென்காசி கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.... 13 மணிநேரத்தில் தென்காசிக்கு செல்ல வேண்டிய பேருந்து சென்னை-திருச்சி ஓட்டுனரின் திறமையால் 16 மணி நேரம் ஆகியது.
2. அவசர வேலை காரணமாக ஊருக்கு போக வேண்டியிருந்ததால் மறுபடியும் மதுரை செல்லும் அரசு விரைவுப்பேருந்தில் பயணம்...... மதியம் 2மணிக்கு சென்னையில் கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 3 மணிக்கு மதுரையை வந்தடைந்தது........ மதுரைக்கே 13 மணி நேரம்னா அதுக்கப்புறம் தென்காசிக்கு அதுக்கப்புறம் எங்க ஊருக்கு கணக்கு போட்டுப்பாருங்க.............
பேருந்து நடத்துனரிடம் இது பற்றி கேட்டால்.நமக்குதான் மண்ட காயும்..... 1லிட்டர் டீசலுக்கு 5 கிலோமீட்டர், ஒரு டிரிப்புக்கு அதிகாரிகள் சொல்லும் கலெக்சன், ஆள் பற்றாக்குறை........ 1 லிட்டர் டீசலுக்கு 5கிலோமீட்டர் மைலேஜ் வேண்டும் என்றால் 40கிலோமீட்டர் வேகத்திற்கு போனால்தான் கிடைக்கும்....... டீசல் சிக்கனமும் வேணும் கலெக்சனும் வேணும் அதிகாரிங்க ரொம்பத்தான் ஆசைப்படுறாங்க....... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு விரைவுப்பேருந்துகளில் இரண்டு ஓட்டுனர்கள் ஒரு நடத்துனர் அல்லது இரண்டு ஓட்டுனர்கள் மட்டும் ஒருவர் நடத்துனராகவும் இருப்பார் இருந்ததுண்டு.. இப்பவெல்லாம் நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் மதுரை வரை செல்லும் வழித்தட பேருந்துகளுக்கு திண்டிவனத்தில் ஓட்டுனர் நடத்துனர் மாறுவார்கள்.... மதுரை தாண்டி செல்லும் பேருந்துகளுக்கு திருச்சியில் மாறுவார்கள்...பயண நேரம் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இப்பவெல்லாம் அரசு விரைவுப்பேருந்துகளில் மறந்தும் கால் வைப்பதில்லை..... ஊருக்கு அவசரமாக போக வேண்டும் என்றால் சென்னையில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு, அப்புறம் அங்கிருந்து தென்காசிக்கு காலை 5மணிக்குள் சென்றுவிடுவேன்.................
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
16 comments:
சென்னை - நெல்லைக்கு,அரசுபேருந்தில்90களில் 12 மணி நேரத்தில் சென்ற அனுபவமும் இருக்கிறது.சென்ற வருடம்
20 மணி நேரம் பயணித்த அனுபவமும்
இருக்கிறது.
நம்ம போக்குவரத்துகழகங்களின் நிலைமை வரவர மாமியார்..... கதைதான்
துபாய் ராஜாவின் அனுபவம் நமக்கும் உண்டு.
நான் எப்போதும் தென்காசிக்கு ரயில்தான்.
பெரும்பாலும் குற்றாலத்துக்குக் கதை விவாதத்துக்குத்தான் போவதால் அவசரப் பயணம் இதுவரை இல்லை.
RELAXED JOURNEY தான்.அதனால் கசப்பு அனுபவங்கள் இல்லை,அத்திரி.
அண்ணாச்சி புளியங்குடி எப்படி இருக்கு ?
புரியுது, புரியுது,
எங்கடா கொஞ்ச நாளா அண்ணாச்சிய கடைப் பக்கம் காணோம்னு பார்த்தேன். இப்பத்தான் தெரியுது அரசு விரைவுப் பேருந்தில் பயணித்து நொந்து போனது, ஊர்ப்பக்கம் போயிருந்தீகளோ!!!!!!
அரசு பேருந்துகளில் வெளியூர் பயணம் செய்து வெகுநாட்களாகி
விட்டது.
அதிரடி ரிப்போட் ஃப்ரம் அத்திரி..நன்றி !!!
ஆஜர்ப்பா.. ஏன் இப்பவெல்லாம் பதிவு வர மாட்டேங்குது?
// T.V.Radhakrishnan said...
:-)))//
வருகைக்கு நன்றி ஐயா.
//துபாய் ராஜா said...
சென்ற வருடம்
20 மணி நேரம் பயணித்த அனுபவமும்
இருக்கிறது.//
நல்ல அனுபவம் போல....முதல் வருகைக்கு நன்றி துபாய் ராஜா
//ஆதிமூலகிருஷ்ணன் said...
துபாய் ராஜாவின் அனுபவம் நமக்கும் உண்டு.//
வாங்க அண்ணே.......
//ஷண்முகப்ரியன் said...
நான் எப்போதும் தென்காசிக்கு ரயில்தான்.
பெரும்பாலும் குற்றாலத்துக்குக் கதை விவாதத்துக்குத்தான் போவதால் அவசரப் பயணம் இதுவரை இல்லை.//
அவசர பயணத்தில்தான் இந்த அனுபவங்கள்.......மற்றபடி ஊருக்கு போகனும்னா ரெயில்தான் ...... நன்றி ஐயா
// நசரேயன் said...
அண்ணாச்சி புளியங்குடி எப்படி இருக்கு ?//
தமிழ்நாட்டிலேயே உங்க ஊர்ல தான் குடிநீர் பஞ்சம் தலைவிரிச்சி ஆடுது
//தராசு said...
புரியுது, புரியுது,
எங்கடா கொஞ்ச நாளா அண்ணாச்சிய கடைப் பக்கம் காணோம்னு பார்த்தேன். இப்பத்தான் தெரியுது அரசு விரைவுப் பேருந்தில் பயணித்து நொந்து போனது, ஊர்ப்பக்கம் போயிருந்தீகளோ!!!!!!//
இதெல்லாம் போன வருசத்து அனுபவம் அண்ணாச்சி.....நன்றி
//அ.மு.செய்யது said...
அரசு பேருந்துகளில் வெளியூர் பயணம் செய்து வெகுநாட்களாகி
விட்டது.
//
வருகைக்கு நன்றி செய்யது
// கார்க்கி said...
ஆஜர்ப்பா.. ஏன் இப்பவெல்லாம் பதிவு வர மாட்டேங்குது?//
வா சகா......பணிச்சுமைதான்.......
:-)
பலமுறை வாய்த்ததுண்டு
அந்த சோக கதைய எல்லாம் ஏன் சாமி ஞாபக படுத்துறீங்க???
மதியம் ஒரு மணிக்கு வந்த கதையெல்லாம் இருக்குங்க.
நன்றி கடவுள்
நன்றி முரளிகண்ணன்
நன்றி நையாண்டி நைனா
நன்றி ஷாகுல்
Post a Comment