Sunday, July 19, 2009

குடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சி

இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சிகள் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது...காலையில் 10மணிக்கு ஆரம்பிக்கும் நெடுந்தொடர்கள் இரவு 10மணி வரைக்கும் தொடர்ந்து பல குடும்பங்களில் கலகத்தை உண்டாக்க கூடியதாக மாறிவிட்டது... பெண்களின் சீரியல் ஆர்வத்தை பற்றி வரும் ஜோக்குகள் ஆரம்பத்தில் வெறும் நகைச்சுவையாக இருந்தாலும்....... கொஞ்ச நாளுக்கப்புறம் அதுதான் உண்மை என்ற நிலைமை..

நம்ம மேட்டருக்கு வருவோம்...சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி வழக்கம் போல் காலையில் இருந்து இரவு வரைக்கும் முண்ணனி சேனலுக்கு போட்டியாக தொடர்களை ஆரம்பித்தது... ஆரம்பத்தில் ஒரளவுக்கு போட்டியைக்கொடுத்த இந்த தொலைக்காட்சியின் தொடர்கள் ஒரு கட்டத்தில் போணியாகாமல் போக என்ன செய்வது என்று கையை பிசைந்த தொலைக்காட்சி நிறுவனம் ....தன்னுடைய நெடுந்தொடர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு அதற்கு பதில் நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது...தொடர்கள் எல்லாம் நிறுத்தப்பட்டதால் அந்த தொலைக்காட்சியை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்தது....மண்டையை பிய்த்த அந்த தொலைக்காட்சி பிரைம் டைம் என சொல்லப்படும் முக்கிய நேரத்தில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது...சென்ற ஆண்டு வெளி வந்த முக்கால் வாசி திரைப்படங்களின் உரிமையை பெற்றிருந்ததும் ஒரு காரணம்..........


இந்த புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டதும் நம்ம தமிழ்நாட்டு குடும்பங்களில் கலகம் உண்டாக காரணமாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அதுவரைக்கும் புகைச்சலாய் இருந்த தங்கமணி--ரங்கமணிகள் சண்டை பற்றி எறிய ஆரம்பித்துள்ளதாக தங்கமணி உளவுத்துறை தலைவர் ஆதி ரகசிய அறிக்கை அளித்துள்ளார்... அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று ரங்கமணிகள் சொல்ல வழக்கம் போல் தங்கமணிகள் சீரியல்தான் என்று சொல்லி முட்டி மோத அறிவிக்கப்படாத இந்திய-பாகிஸ்தான் போர் நடைபெற்றுவருவதாக ரகசிய தகவல்கள் கூறுகின்றன...

இதை அறியாத அந்த தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் புதிய மொக்கை திரைப்படங்களை அறிவித்து வருகிறது................. யாராவது இந்த மேட்டரை எடுத்து சொல்லுங்கப்பா......

22 comments:

Anonymous said...

அடிங்கண்ணே...அடிங்கண்ணே இந்த டி.வி.களே இப்படி தான்.

Anonymous said...

நண்பா கலைஞர் டி.வி. தானே?

Anonymous said...

"குடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சி"
//
உங்க வீட்டுல உண்டா நண்பா? சொல்லவேயில்ல...

ஆ.ஞானசேகரன் said...

//இதை அறியாத அந்த தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் புதிய மொக்கை திரைப்படங்களை அறிவித்து வருகிறது................. யாராவது இந்த மேட்டரை எடுத்து சொல்லுங்கப்பா...... //

நான் வேற என்னமோ நினைச்சேன்

இராகவன் நைஜிரியா said...

ம்... நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா...

எந்த வீட்டில் அய்யா ரங்கமணிகள் தொலைக் காட்சிப் பெட்டியைப் பார்க்கின்றனர்... பார்க்க விடப் படுக்கின்றனர்...

Cable சங்கர் said...

அவஙக் சீரியலை எடுத்ததுக்கு ஏதோ ஒரு உள்குத்து காரணம் இருக்குன்னு சொல்றாஙக்ளே அது நிஜமா.. இரண்டெழுத்து டிவி பி.ஆர்.ஓ. அத்திரி அவர்களே..:)

ஊர்சுற்றி said...

நல்லா பீதிய கிளப்புறாய்ங்கப்பா!

நட்புடன் ஜமால் said...

இராகவன் அண்ணா வாழ்க!

தராசு said...

எந்த டி,வி இது, என்ன விவரம்னு சொன்னாத்தான புரியும், சும்மா கிசு கிசு எழுதற மாதிரி எழுதப்படாது.

கார்த்திகைப் பாண்டியன் said...

சொந்தக் கதை சோகக் கதை.. பதிவாய் இங்கே நிற்கிறதே.. டோயு டோயு..(மீஜிக் எபெக்ட்)

நையாண்டி நைனா said...

மக்கா... லேட்டா போட்டாலும் ஹாட்டா போட்டிருக்கே... மக்கா...

நாஞ்சில் நாதம் said...

:))))

நாஞ்சில் நாதம் said...

:))))))

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
அடிங்கண்ணே...அடிங்கண்ணே இந்த டி.வி.களே இப்படி தான்.//

வாங்க மாப்ளே

//"குடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சி"
//
உங்க வீட்டுல உண்டா நண்பா? சொல்லவேயில்ல...
//

ஏன் எதுக்கு, வலிக்குது அழுதிருவேன்.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

//ஆ.ஞானசேகரன் said...
//இதை அறியாத அந்த தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் புதிய மொக்கை திரைப்படங்களை அறிவித்து வருகிறது................. யாராவது இந்த மேட்டரை எடுத்து சொல்லுங்கப்பா...... //

நான் வேற என்னமோ நினைச்சேன்//

வேற என்ன அண்ணாச்சி..........நன்றி

அத்திரி said...

// இராகவன் நைஜிரியா said...
ம்... நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா...

எந்த வீட்டில் அய்யா ரங்கமணிகள் தொலைக் காட்சிப் பெட்டியைப் பார்க்கின்றனர்... பார்க்க விடப் படுக்கின்றனர்.../

அண்ணே உங்க பீலிங் எனக்கு புரியுது அண்ணே

அத்திரி said...

// Cable Sankar said...
அவஙக் சீரியலை எடுத்ததுக்கு ஏதோ ஒரு உள்குத்து காரணம் இருக்குன்னு சொல்றாஙக்ளே அது நிஜமா.. இரண்டெழுத்து டிவி பி.ஆர்.ஓ. அத்திரி அவர்களே..:)//

என்ன அண்ணே புது மேட்டர் சொல்றீங்க..................

அத்திரி said...

//ஊர்சுற்றி said...
நல்லா பீதிய கிளப்புறாய்ங்கப்பா!//


ஏதோ நம்மால முடிஞ்சது.......நன்றி ஊர்சுற்றி


//நட்புடன் ஜமால் said...
இராகவன் அண்ணா வாழ்க!//

ஜமால் அண்ணே நல்லா இருக்கியளா???

அத்திரி said...

//தராசு said...
எந்த டி,வி இது, என்ன விவரம்னு சொன்னாத்தான புரியும், சும்மா கிசு கிசு எழுதற மாதிரி எழுதப்படாது.//

அண்ணாச்சி இது கூடவா தெரியல................நன்றி

// கார்த்திகைப் பாண்டியன் said...
சொந்தக் கதை சோகக் கதை.. பதிவாய் இங்கே நிற்கிறதே.. டோயு டோயு..(மீஜிக் எபெக்ட்)//

ஆஹா........... முடியல.........ஏன் ஏன் இப்படி நண்பா?

அத்திரி said...

.//நையாண்டி நைனா said...
மக்கா... லேட்டா போட்டாலும் ஹாட்டா போட்டிருக்கே... மக்கா...//

ரொம்ப நன்றி நைனா


// நாஞ்சில் நாதம் said...
:))))//

வாங்க நாஞ்சில்.....நன்றி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எல்லா வீட்டுலயும் இதே (சோக )கதைதான்.

அத்திரி said...

//ஸ்ரீதர் said...
எல்லா வீட்டுலயும் இதே (சோக )கதைதான்.//


ஹிஹிஹி..............நன்றி


// T.V.Radhakrishnan said...
:-)))//

நன்றி ஐயா