Saturday, 8 August, 2009

தொப்பை "யூத்தின்" அடையாளம்.......!!!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.நான் சொல்ல வருவது நம்ம யூத் பதிவர்களின் தொப்பை பிரச்சினை பற்றியது.

இந்த பதிவர் எப்போதும் தன்னுடைய பதிவில் தான் ஒரு யூத்து எனபதை மறக்காமல் எழுதிவிடுவார்... இவரை அங்கிள் என்று சொன்னால் போதும் இந்த பதிவர் நம்மை அடிக்கவே வந்து விடுவார்.காரணம் இவரும் அவரைப்போலவே யூத்துதான்..என்னதான் யூத்துன்னு வெளியில சொல்லிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள இவங்க தொப்பைய நினைச்சி இவங்களுக்கு பலநாள் தூக்கமே கிடையாதாம்....பதிவுலகில் ஒல்லியா இருந்தாலும் கில்லியா இருக்கும் இந்த பதிவரிடம் அதன் ரகசியத்த கேட்டு டார்ச்சர் பண்றாங்களாம்...கடேசியாக கிடைத்த தகவல் படி இந்த இரு பதிவர்களும் காசி தியேட்டர் பாலத்திலிருந்து கத்திப்பாரா ஜங்ஷன் வைக்கும் தினசரி ஜாக்கிங் என்ற பெயரில் அந்த பக்கம் வருகிற ஆன்டிகளை சைட் அடிப்பதாக கேள்விப்பட்டேன்.
 
  அடுத்த பதிவர் நிஜமாவே இவர் யூத்துதான்..ஆனா என்ன 25ஐ தாண்டியதன் விளைவு இளந்தொப்பைதான் இவருக்கு மெயின் தலைவலி....ஒவ்வொருவாட்டியும் ஊருக்கு வரும்போதும் போகும் போதும் பிகரை உஷார் பண்ணிடுவார்....அந்த வாரத்தில் பகலில் அந்த பிகரை வெளியில் கூட்டி செல்லும் போது"நீங்க பாக்க நல்லாத்தான் இருக்கீங்க ஆனா இந்த தொப்பை தான்ன்னு இழுக்கும் போது ரொம்ப டென்சன் ஆகி அவர் இருக்கிற ஊரில் உள்ள மிகப்பெரிய பஸ் ஸ்டாண்டை பத்து முறை சுற்றி ஓடுவதாக உளவுத்துறை தகவல் கூறுகிறது.....

இந்த பதிவர் அந்த சைடு யூத்தா இல்லை இந்த சைடு யூத்தான்னு தெரியல... இவருக்கும் இந்த தொப்பை பிரச்சினைதான்....சிட்டிக்கு உள்ள இருக்கும் வரைக்க்கும் வாக்கிங் போகக்கூட இடமில்லாமல் தவித்தார்....அதற்காகவே தன்னுடை வீட்டை சென்னை புறநகருக்கு மாறிவிட்டார்....இப்போது அவர் கிஷ்கிந்தாவை மூணு வாட்டி சுற்றி வருகிறாராம்.

சீக்கிரமே குடும்ப இஸ்திரியாக மாறப்போகும் இந்த இளம்பதிவருக்கும் இதே பிரச்சினைதான்..அதுக்காக தமுக்கம் மைதானத்தை காலையிலும் மாலையிலும் நேரம் காலம் பாக்காமல் சுற்றி வருகிறாராம்..

இவங்க எல்லாரும் ஜாக்கிங் வாக்கிங் தினசரி போனாலும் அவர்களால் வாயை கட்டவே முடியவில்லையாம்.... இவங்க படுற கஷ்டத்தை கேள்விப்பதும் என் கண்ணுல தண்ணி வந்திடிச்சிப்பா.........அதனால என் யோசனைய கேளுங்க...


தொப்பை குறையனும்னா முதல்ல உடம்புல உள்ள கொழுப்பு குறையனும். கொழுப்பு குறையனும்னா தினசரி அதிகாலையில 5 முதல் 10 டம்ளர் வெந்நீர் குடிச்சா உடம்புல உள்ள கொழுப்பு கரைஞ்சிடுமாம்.............. அதுக்கப்புறம் இஞ்சி சாறு, சுக்கு காப்பி இதையெல்லாம் அடிக்கடி குடிங்க..........

-------------
------------
-----------
-------------------
-------------

ஏன்னா இதையெல்லாம் நானும் செஞ்சிட்டு இருக்கேன்............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

36 comments:

துபாய் ராஜா said...

நல்லதொரு நகைச்சுவையான சீரியஸ் பதிவு. :))

//அதிகாலையில 5 முதல் 10 டம்ளர் வெந்நீர் குடிச்சா உடம்புல உள்ள கொழுப்பு கரைஞ்சிடுமாம்....... அதுக்கப்புறம் இஞ்சி சாறு, சுக்கு காப்பி இதையெல்லாம் அடிக்கடி குடிங்க..........//

உண்மைதான்.அதிகாலை மட்டுமல்ல தண்ணீர் குடிக்கும்போதெல்லாம் கொஞ்சம் சூடாக குடித்தால் நிச்சயம் இடுப்பளவு குறையும்.தற்போது எல்லா அலுவலகங்களிலுமே Hot & Cold water coolers இருப்பதால் நிச்சயம் முயற்சிக்கலாம்.

வாக்கிங் முடியாவிட்டால் காலை, மாலை வீட்டிலே சிறு,சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.உணவு கட்டுப்பாடும் அவசியம்.

ஏன்னா இதையெல்லாம் நானும் செஞ்சிட்டு இருக்கேன்.............

:)))

Cable Sankar said...

தன் தொப்பையை
மறந்தவன்,
அடுத்தவன்,
தொப்பையை
நோண்டுவான்

நிகழ்காலத்தில்... said...

\\கொழுப்பு குறையனும்னா தினசரி அதிகாலையில 5 முதல் 10 டம்ளர் வெந்நீர் குடிச்சா உடம்புல உள்ள கொழுப்பு கரைஞ்சிடுமாம்.............. \\

மாம்..

ம்ம்ம் யார் மாட்டப்போறாங்களோ??

சுடுதண்ணி தொடர்ச்சியாக குடித்து வருவர்கள், தன் சளி அனுபவத்தை கொஞ்சம் எனக்கு ஞாபகமாச் சொல்லுங்கள்

ஹேமா said...

அத்திரி,தொப்பை...கொழுப்பு கரையனும்னா கொள்ளில்
(கொள்ளூப் பருப்பு) செய்த சாப்பாடுகள் நல்லது என்று சொல்கிறார்கள்.தொப்பைக்காரகள் முயற்சி செய்து பார்க்கலாமே.

சரவணகுமரன் said...

:-))

சரவணகுமரன் said...

ஹேமா, கொள்ளு’ன்னா இந்த குதிரைக்கு போடுவாங்களே, அதுவா? :-))

Anonymous said...

:))

நையாண்டி நைனா said...

உங்களுக்கு அடுத்த கதைய நான் ரெடி பண்றேன் மக்கா.

ஹேமா said...

ஆமாம் குதிரைக்குப் போடும் கொள்ளு தான்.அதில் சிலர் ரசம் ,
சூப் ,சலாட் என்று உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

Anonymous said...

இவங்க எல்லோரையும் ஆபீஸ் மாடி படியில் இருந்து தினமும் 10 முறை ஏறி இறங்க சொல்லுங்க...தானவே தொந்தி குறையும். உமக்கும் சேர்த்து தான்...

கார்த்திக் said...

/*ஏன்னா இதையெல்லாம் நானும் செஞ்சிட்டு இருக்கேன்...... */

தொப்பை குறைஞ்சிச்சா தலைவா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீ..

அறிவுரைக்கு மிக்க நன்றி..!

முயற்சித்துப் பார்க்கிறேன்..!

ஹேமா said...

//கடையம் ஆனந்த் said...
இவங்க எல்லோரையும் ஆபீஸ் மாடி படியில் இருந்து தினமும் 10 முறை ஏறி இறங்க சொல்லுங்க...தானவே தொந்தி குறையும். உமக்கும் சேர்த்து தான்...//

ஆனந்த்,ஆபீசில படிக்கட்டு
இல்லன்னா!
எங்க ஆபீசில லிஃப்ட்தான்.அப்போ !

ஆதிமூலகிருஷ்ணன் said...

கச்சிதமான முடிவுடன் அழகான ஒரு நகைச்சுவை பதிவு.

நா நிஜமாவே யூத்து சைடு யூத்துதான் நம்புங்கப்பா.!

//அடுத்த பதிவர் நிஜமாவே இவர் யூத்துதான்..ஆனா என்ன 25ஐ தாண்டியதன் விளைவு இளந்தொப்பைதான் இவருக்கு மெயின் தலைவலி.//

இளந்தொப்பை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் சின்ன லிஸ்ட்லயே முதல் பரிசு அண்ணன் கேபிளுக்கு என்றால் இரண்டாம் பரிசு பெறுவது தம்பி கார்க்கிதான். நெனப்புல வெச்சுக்குங்க..

cheena (சீனா) said...

தொப்பை வரணும்னா என்ன பண்ணனும் ? ஏன்னா நானும் யூத்தாகணும்ல

தராசு said...

அண்ணே,

இதுக்கெல்லம் ஒரு கொடுப்பினை வேணும்னே,

இருக்கறவன் வெச்சுக்கறான், இல்லாதவன் வரஞ்சுக்கறான் அவ்வளவுதான்.

பதிவ முழுக்க படிச்சுட்டு வந்து கடைசியில பார்த்தா,

//ஏன்னா இதையெல்லாம் நானும் செஞ்சிட்டு இருக்கேன்............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

வாங்கண்ணே, எப்பவாவது மாட்டாமயா போயிருவீங்க...., அப்ப இருக்கு உங்களுக்கு.

டக்ளஸ்... said...

கேபிளை இழுக்காட்டி, உங்களுக்கு தூக்கம் வராதோ..!
:)

எம்.எம்.அப்துல்லா said...

நானெல்லாம் ரியல் யூத்து.பாருங்க அதுனாலதான் நீங்ககூட என்னைய லிஸ்ட்ல சேர்க்கல :))

கார்த்திகைப் பாண்டியன் said...

இக்கி..இக்கி.. இக்கி.. இதைத்தான் ஓப்பனா சொல்ல முடியுது..(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....)

அத்திரி said...

// துபாய் ராஜா said...
நல்லதொரு நகைச்சுவையான சீரியஸ் பதிவு. :))//

வாங்க துபாய் ராஜா...கருத்துக்கு நன்றி

//Cable Sankar said...
தன் தொப்பையை
மறந்தவன்,
அடுத்தவன்,
தொப்பையை
நோண்டுவான்//

இந்த யூத்துக்கு கவித எல்லாம் எழுத தெரியுமா.........நன்றி அண்ணே

அத்திரி said...

//நிகழ்காலத்தில்... said...
சுடுதண்ணி தொடர்ச்சியாக குடித்து வருவர்கள், தன் சளி அனுபவத்தை கொஞ்சம் எனக்கு ஞாபகமாச் சொல்லுங்கள்//

கவலையேப்படாதீங்க இன்னும் ஒரு வாரத்துல நான் சொல்லுறேன்,..நன்றி


// ஹேமா said...
அத்திரி,தொப்பை...கொழுப்பு கரையனும்னா கொள்ளில்
(கொள்ளூப் பருப்பு) செய்த சாப்பாடுகள் நல்லது என்று சொல்கிறார்கள்.தொப்பைக்காரகள் முயற்சி செய்து பார்க்கலாமே.//

புதுசா இருக்கே......நமக்கு சுக்கும் வெந்நீரும் போதும்..................நன்றி ஹேமா

அத்திரி said...

//சரவணகுமரன் said...//
:-))


வருகைக்கு நன்றி ...சரவணகுமரன்

// சரவணகுமரன் said...
ஹேமா, கொள்ளு’ன்னா இந்த குதிரைக்கு போடுவாங்களே, அதுவா? :-))//

அதேதான்.........அதான் குதிரையெல்லாம் சிலிம்மா இருக்கா?

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
:))//

மாப்ளே வெறும் சிரிப்பு மட்டும்தானா

// நையாண்டி நைனா said...
உங்களுக்கு அடுத்த கதைய நான் ரெடி பண்றேன் மக்கா.//


சரிங்க அண்ணாச்சி

அத்திரி said...

// கடையம் ஆனந்த் said...
இவங்க எல்லோரையும் ஆபீஸ் மாடி படியில் இருந்து தினமும் 10 முறை ஏறி இறங்க சொல்லுங்க...தானவே தொந்தி குறையும். உமக்கும் சேர்த்து தான்...//

டேய் ஆணவத்துல ஆடாதடா.....உன் இளந்தொப்பையை நினைவில் வைத்துக்கொள்

அத்திரி said...

// கார்த்திக் said...
/*ஏன்னா இதையெல்லாம் நானும் செஞ்சிட்டு இருக்கேன்...... */

தொப்பை குறைஞ்சிச்சா தலைவா//

இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன்..அதுக்குள்ள கேட்டா எப்படி.....


//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பீ..அறிவுரைக்கு மிக்க நன்றி..முயற்சித்துப் பார்க்கிறேன்..!//


வாங்க அண்ணே நன்றி

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
கச்சிதமான முடிவுடன் அழகான ஒரு நகைச்சுவை பதிவு.
நா நிஜமாவே யூத்து சைடு யூத்துதான் நம்புங்கப்பா.!//

சரி அண்ணே

//இளந்தொப்பை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் சின்ன லிஸ்ட்லயே முதல் பரிசு அண்ணன் கேபிளுக்கு என்றால் இரண்டாம் பரிசு பெறுவது தம்பி கார்க்கிதான். நெனப்புல வெச்சுக்குங்க..//

கார்க்கி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

அத்திரி said...

//ஹேமா said...
ஆனந்த்,ஆபீசில படிக்கட்டு
இல்லன்னா!
எங்க ஆபீசில லிஃப்ட்தான்.அப்போ !//


அப்ப ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு நடந்து போங்க ஹேமா................


// cheena (சீனா) said...
தொப்பை வரணும்னா என்ன பண்ணனும் ? ஏன்னா நானும் யூத்தாகணும்ல//


தொடர்புக்கு கேபிள் சங்கரை அணுகவும் ஐயா..நன்றி

அத்திரி said...

// தராசு said...
அண்ணே,
இதுக்கெல்லம் ஒரு கொடுப்பினை வேணும்னே,//

அப்படியா ..........


//வாங்கண்ணே, எப்பவாவது மாட்டாமயா போயிருவீங்க...., அப்ப இருக்கு உங்களுக்கு.//

அவ்ளோ சீக்கிரத்துல மாட்ட மாட்டேன்..........நன்றி அண்ணே

அத்திரி said...

//டக்ளஸ்... said...
கேபிளை இழுக்காட்டி, உங்களுக்கு தூக்கம் வராதோ..!//:)//

கேபிள் அண்ணன் ரொம்ப நல்லவரு ......நன்றி டக்ளஸ்

//எம்.எம்.அப்துல்லா said...
நானெல்லாம் ரியல் யூத்து.பாருங்க அதுனாலதான் நீங்ககூட என்னைய லிஸ்ட்ல சேர்க்கல :))//

அண்ணே உங்களை மறந்துட்டேனே...........பரவாயில்லை அடுத்த வாட்டி சேத்துக்குறேன்

நன்றி அண்ணே

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இக்கி..இக்கி.. இக்கி.. இதைத்தான் ஓப்பனா சொல்ல முடியுது..(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....)//

என்ன நண்பா ஒன்னுமே சொல்லமுடியலையா?............

வால்பையன் said...

நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் அங்கிள்!

jackiesekar said...

தன் தொப்பையை
மறந்தவன்,
அடுத்தவன்,
தொப்பையை
நோண்டுவான்//

கேபிளை வழிமொழிகின்றேன்....

அமுதா கிருஷ்ணா said...

கட்டாயம் வாக்கிங் போகணும்..வேறு வழியே இல்லை..

அத்திரி said...

// வால்பையன் said...
நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் அங்கிள்!//

அப்படியா யூத்து......நல்லது......யூத்துன்னா என்ன அர்த்தம் தெரியுமில்ல........நன்றி வால்

//jackiesekar said...
தன் தொப்பையை
மறந்தவன்,
அடுத்தவன்,
தொப்பையை
நோண்டுவான்//

வாங்க ஜாக்கி நன்றி

அத்திரி said...

//அமுதா கிருஷ்ணா said...
கட்டாயம் வாக்கிங் போகணும்..வேறு வழியே இல்லை..//

கண்டிப்பா..வேற வழியே இல்ல.......நன்றி அமுதா கிருஷ்ணா

நாஞ்சில் நாதம் said...

:))