Sunday, December 13, 2009

பதிவர் சந்திப்பில் மாட்டிக்கொண்ட வேட்டைக்காரன்

இணைய நண்பர்களை நேரில் சந்திப்பது என்பது அலாதியான விசயம்......அந்த வகையில் மதுரை மைந்தன் புரொபசர் கா.பா என்னை பார்க்க பலமுறைஅன்போடு அழைத்தாலும் நேரம் அமையவில்லை......ஊருக்கு போகனும் என்றால் மதுரையை தாண்டித்தான் போக வேண்டும்.......மதுரை நெருங்கும்போது நள்ளிரவு இல்லை அதிகாலை என்ற நேரத்தில் கடக்க வேண்டியிருக்கும்.....இருமுறை முயற்சித்தும் கா.பா வை சந்திக்க இயலவில்லை.



போன வாரம் சென்னை வந்தவர் என்னை அலைபேசியில் அழைத்து கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். விசயம் புரியாமல்!! சரி என்று மாப்பிள்ளை கடையம் ஆனந்திடமும், கேபிள் அண்ணனிடமும் பேசி வடபழனியில் சந்திப்பதாக முடிவானது.
 
கேபிளுடன் தம்பி விஸ்கியும் மன்னிக்கவும் பெஸ்கியும் வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் புரொபசரும், அவரது நண்பர் சுரேஷும் வர சரவண பவனில்காபியோடு ஆரம்பித்தது சந்திப்பு.. கேபிள் அண்ணன் வந்ததாலோ என்னவோ சினிமாவை சுற்றியே வந்தது. கிம்-டு-கிக்கில் ஆரம்பித்து தமிழ் சினிமாவை யோகி மூலம் தூக்கி வைத்திருக்கும் அமீர் வரைக்கும் வந்தது.............. நம்ம புரொபசரும் சினிமால பிஎச்டி பண்ணியிருப்பார் போல....... கேபிள் அண்ணனுடம் ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டிருந்தார்.
 
என்னோட வேலை அதுவரைக்கும் வேடிக்கை பார்ப்பதாகவே இருந்தது.பெரியவங்க பேசும் போது யூத்துகளெல்லாம் சும்மா பேசாமத்தான் இருக்கனும்...... பின் சரவணபவனுக்கு வேளியில் பேசிட்டிருக்கும் போது மாப்ளை கடையம் ஆனந்த் வந்து சேர்ந்தார்.......புது மாப்பிள்ளை நல்லா களையாத்தான் இருந்தார்......எம்ஜியாரில் ஆரம்பித்த பேச்சு ரஜினிக்கு வந்து அப்படியே நான் எதிர்பார்த்த மாதிரியே வேட்டைக்கரன் வரைக்கும் வந்தது...அவங்களுக்கு ஏற்றார்போல் சூப்பர் ஸ்டார்ங்க எல்லாம் நடிக்க வேண்டிய தேவையே இல்லை திரையில் வந்தாலே போதும்னு சொன்னதுதான் தாமதம் மும்முனை தாக்குதலில் என்னை நிலைகுலைய வச்சிட்டாங்கப்பா( இப்பதான் புரிஞ்சிது புரொபசர் எதுக்கு கூப்பிட்டாருனு).அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....போர்ப்படை தளபதி இல்லாமல் அங்கு போனது ரொம்ப தப்பு போல............வடிவேலு காமெடி மாதிரி ஒருத்தன் சிக்கிட்டான் என்ற ரேஞ்சில் அகப்பட்டுக்கொண்டேன்..... பிளாக், எஸ் எம் எஸ்லதான் அப்படினா நேர்ல வந்துமா ..எவ்ளொ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது......................வேலைக்கு நேரம் ஆகிவிட்டதால் எல்லோரிடமும் அழாத குறையாக விடை பேற்றேன்.......

போன வாரம் வைரஸ் தாக்கப்பட்டிருந்த என் பிளாக்கை காப்பாற்றிய அன்பு அண்ணன் யூத்துக்களின் நாயகன்........ வருங்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கப்போகும் கேபிள் அண்ணனுக்கு ஆயிரம் நன்றிகள்

22 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதலிலேயே தெரிஞ்சிருந்தா நானும் வந்து உங்களை சந்தித்திருப்பேனே..

Thamira said...

சொல்லவேயில்ல.. நடத்துங்க.!

Starjan (ஸ்டார்ஜன்) said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

கார்க்கிபவா said...

சகா.. :))

Cable சங்கர் said...

அது...

Raju said...

ஏய்..எவன்டா அங்க..எட்றா வண்டியை..நம்ம கானாபானாவையும் க்விஞர்.கேபிளையும் ஒரு ஆளு "பெரியவுக" சொல்லீட்டாபல்..!
நாங்கன்னா சைலன்டா பேசுனாலே சைரம் அலறும்டியேய்.! இந்தா வார்றோம்.

தராசு said...

ரைட்டு

துபாய் ராஜா said...

எப்போ போடுவாய்ங்க..., எப்போ போடுவாய்ங்க.... வேட்டைக்காரன் படத்தை எப்போ போடுவாய்ங்கன்னு தான் எல்லோரும் காத்துக்கிட்டுறாங்கய்யா.... :))

Anonymous said...

அன்பு நண்பர்கள் கார்த்திகை பாண்டியன், கேபிள்சங்கர், பெஸ்கி ஆகியோரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் அளிக்கிறது.

நிகழ்ச்சியில் இடையில் வந்து... அவசர வேலை காரணமாக உடனடியாக புறப்பட வேண்டி இருந்தாலும் இந்த சந்திப்பு என்னை பொறுத்தவரையில் வரலாற்று சிறப்புமிக்கது தான்....

Anonymous said...

வடபழனி முருகன் கோவில் அருகில் ஒரு இனிய சந்திப்பு. ஒருங்கிணைத்த அத்திரிக்கு நன்றி.

priyamudanprabu said...

.எவ்ளொ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது......................

ha haa

thiyaa said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி said...

வாத்தியார் வந்திருந்தாரா?!!!!!!

ஓ... தெரியாமப் போச்சே!

எறும்பு said...

வேட்டைக்காரன் வரட்டும். குருவிய சுட்ட மாதிரி இதையும் சுடறதுக்கு நிறைய பேரு வைடிங். :-))

அத்திரி said...

நன்றி டிவிஆர் ஐயா

நன்றி ஆதி அண்ணே

நன்றி ஸ்டார்ஜன்

அத்திரி said...

என்ன சகா சிரிப்பா...அவ்வ்வ்வ்.நன்றி

இப்போ சந்தோசமா கேபிள் அண்ணே நன்றி

கொலை வெறியோட இருக்கீங்க போல ராஜூ..நன்றி

அத்திரி said...

நன்றி தராசு அண்ணே

நன்றி துபாய் ராஜா..எல்லா பயலும் ஒரு மார்க்கமாத்தான் அலையிரானுவ

நன்றி மாப்ளே

அத்திரி said...

நன்றி பிரபு

நன்றி தியா

நன்றி ஊர்சுற்றி

அத்திரி said...

நன்றி ராஜகோபால்.....

சிநேகிதன் அக்பர் said...

படம் வர்றதுக்குள்ளே இவ்வளவு களோபாரமா.

நடத்துங்க.

நினைவுகளுடன் -நிகே- said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

பாபு said...

eppadi irukkeenga??