Saturday, January 24, 2009

மாநகரப்பேருந்துகளும்-- மாதாந்திர பயணச்சீட்டும்-- நானும்

சென்னை நகரில் மிக முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று மாநகரப்பேருந்துகள் தான். அப்படிப்பட்ட மாநகரப்போக்குவரத்துக்கழகம் இன்றைக்கு அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்களை சுலபமாக காலியாக்கும் கழகமாக மாறிவிட்டதுதான் வேதனை... இதற்கு அச்சாரம் போட்டவர் அம்மையார்... அதிலேயே ரோடு போட்டுக்கொண்டிருப்பவர் கலைஞர் அய்யா.... ஆறு வகை வழித்தடப்பேருந்துகள் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது...


1. சாதாரண பேருந்துகள்( வெள்ளை போர்டு)-- மினிமம் டிக்கெட் 2ரூபாய்
2."M" வகைப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
3. விரைவுபேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
4.சொகுசுப்பேருந்துகள் --- மினிமம் டிக்கெட் 5ரூபாய்
5.குளிர்சாதனப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 10ரூபாய்.
6.எல் எஸ் எஸ் பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 2.50ரூபாய்.


சென்னையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்கு ஒரு வாரம் எம்டிசிலதான் பயணித்தேன்..அசோக் பில்லர்ல இருந்து லிபர்டிக்கு பஸ் ஏறுவது சவாலான விசயம் என்பதால் மின்சார ரயிலில் பயணிக்க ஆரம்பித்தேன்...ஈக்காட்டுத்தாங்கல் டூ கிண்டி 20 நிமிட நடை அப்புறம் 10 நிமிடத்தில் கோடம்பாக்கம் ... நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது ராமாபுரத்திற்கு ரூமை மாற்றும் வரையில்.... இதுவரைக்கும் கண்ணில் எப்போதாவதுதான் விரைவு பேருந்து கண்ணில் தென்படும்.. இந்த நேரத்துல தான் மாதாந்திரப்பயணச்சீட்டு--மாநகரப்பேருந்து-- மின்சார ரயில்...பிரச்சினை இல்லாம நல்லா இருந்திச்சி.


2002ன்னு நினைக்கிறேன்..அப்போ முதல்வரா இருந்த நம்ம அம்மையார் ."M" வகைப்பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்... இந்த வகை பேருந்துகளில் மினிமம் கட்டணம் 3ரூபாய்..மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லாது...அந்த நேரத்தில் M49 இந்த வண்டிய பாத்தாலே கடுப்பா இருக்கும்..பீக் அவர்ல இந்த வண்டிதான் அதிகமா இருக்கும்... ராமச்சந்திரா டூ திருவான்மியூர் வழித்தடம்.........இருந்தாலும் அம்மையார் ஆட்சிக்காலத்தில் இந்த வகைப்பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தன,,


2006ல் நம்ம கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஜூன் மாதத்தில் இருந்து ."M" வகைப்பேருந்துகளில் மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இங்கேயிருந்துதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சு.. வழைப்பழத்தில ஊசிய குத்துற மாதிரி சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகளின் வழித்தடம் குறைக்கப்பட்டு அதே வழித்தடத்தில்"M" வகைப்பேருந்துகள் ஓட ஆரம்பித்தன..அம்மா ஆட்சியில் எப்போதாவது கண்ணில் தென்பட்ட விரைவுப்பேருந்துகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிமாக தென்பட ஆரம்பித்தது.இதனால் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்போருக்கு செலவு கொஞ்சம் அதிகமாகியது.இந்த நேரத்தில்தான் சொகுசுப்பேருந்துகள் அறிமுகமாகியது..முதலில் புறநகர்களுக்கு இயக்கப்பட்ட இவ்வகைப்பேருந்துகள் கொஞ்ச நாள் கழிச்சி நகருக்குள்ளும் இயங்க ஆரம்பித்தன...நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாணப்பேருதுகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டு அதே நேரத்தில் விரைவுப்பேருந்துகளும்,சொகுசுப்பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு மாதாந்திரப்பயனச்சீட்டு வைத்திருப்போரின் பாக்கெட்டுகளை இரு மடங்காக காலி செய்யும் பணியை இன்று வரை செவ்வனே செய்கின்றன...


சொகுசுப்பேருந்துகள் மற்றும் விரைவுப்பேருதுகள் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்துதான் இயக்கப்படுகின்றன. இங்கதான் பிரச்சினை ஆரம்பமாகுது. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து நீங்க வேளச்சேரிக்கு மாநகரப்பேருந்தில் போகனும்னா காலையில் 7:25மணிக்கு முன்னால் பஸ் ஸ்டாப்புக்கு வந்தீங்கன்னா சுலபமா பஸ் ஏறிவிடலாம்.. ஆனால் 7:30 மணிக்கு வந்தீங்கன்னா நீங்க பஸ் ஏறுவதற்கு மினிமம் அரைமணி நேரமாகும்..7:30மணியில் இருந்து 8:00மணி வரை 11 மாநகரப்பேருந்துகள் வரும்ம்ம்ம்ம்ம்.......ஆனா ஏறமுடியாது..


வருகிற 11 பேருந்துகளில் 4 சொகுசுப்பேருந்துகள்,4 விரைவுப்பேருந்துகள்,2சாதாரணப்பேருந்துகள், 1 குளிர்சாதனப்பேருந்துகள்.


குளிர்சாதன பேருந்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.தினசரி சொகுசுப்பேருந்துகளில் போவது இயலாத காரியம்... விரைவுப்பேருந்துகளில் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தும் அழமுடியாது.. அவசரம்னா ஓகே. அந்த ரெண்டு சாதாரணப்பேருந்துகளுக்கும் அந்த நேரத்துல பஸ் நிறுத்தமே மறந்து போகும்....


மேலும் நெரிசல் மிகுந்த நேரம் என்பதை இன்னும் பழைய நேரத்தையே மாநகரப்பேருந்து நிர்வாகம் பயன்படுத்துகிறது... இப்பவெல்லாம் காலை 7 மணிக்கே நெரிசல் நேரம் ஆரம்பமாவுது... ஆனா இந்த நேரங்களில் இயக்கப்படும் வழித்தடங்கள் மிகக்குறைவு. மாநகரப்பேருந்து நிர்வாகம் இதை கவனிக்குமா?..இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??

29 comments:

நட்புடன் ஜமால் said...

வந்துட்டேன் ...

நட்புடன் ஜமால் said...

\\இன்றைக்கு அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்களை சுலபமாக காலியாக்கும் கழகமாக மாறிவிட்டதுதான் வேதனை\\

சரிதான்

அத்திரி said...

பதிவை இணைப்பதற்குள் பின்னூட்டம்..... ரொம்ப ஸ்பீடுதான்.. நன்றி ஜமால்

நட்புடன் ஜமால் said...

\\ஆனா ஏறமுடியாது..\\

ஏன் கூட்டமா

நட்புடன் ஜமால் said...

\\இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??\\

அவுரு பஸ்ல வந்தா தெரியும்.

நட்புடன் ஜமால் said...

அண்ணேன் தீர்வாக ஏதேனும் முன்மொழியுங்களேன்

விகடன்ல போட்டாலும் போடுவாங்க

Rajaraman said...

பெங்களூர் மாநகரில் கூட நகர போக்குவரத்து தமிழ்நாட்டைபோல் இவ்வளவு இம்சைகள் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறது. அங்கு போக்குவரத்து நிர்வாகம் பயணிகள் நலன் மற்றும் அவர்களின் சவுகரியம் என்று ஒன்று இருப்பதை கவனத்தில் கொள்கிறார்கள். ஆனால் இங்கு அதெல்லாம் எந்த கடையில் கிடைக்கும் என்று செயல்படுகிறார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற பெயரில் பதவி சுகம் அனுபவிப்பவரை குறைந்தது ஒரு வாரத்திற்காவது மாநகர பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டும் என்றால் திரியும் சேதி.

நட்புடன் ஜமால் said...

முதல் ஓட்டே நாந்தானா.

அண்ணே நீங்க ஓட்டு போடலையா

Cable சங்கர் said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

அந்த அம்மையாரின் ஆட்சியில் அநியாயமாய் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, அப்போது உயர்த்திய பஸ் கட்டணங்களை மீண்டும் இன்றளவு உயர்த்தாமல் மக்கள் நலனே பெரிது என்று நினைத்து நான் நல்லாட்சி செய்து கொண்டிருப்பதை கெடுக்கும் வகையில் அத்திரி என்கிற பெயரில் அம்மையார் ஜெயல்லிதா என்னை பற்றி இணையத்தில் எழுதி வ்ருவதை நான் கண்டிக்கிறேன்.

பக்கத்து மாநிலத்தை விட 17.99% சதவிகிதம் பஸ் கட்டணம் குறைவாக் உள்ள ஓரே மாநிலம் நம் தமிழ்நாடுதான் என்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொண்டிருக்கின்றான். என்பதை யாராலும் மறைக்க முடியாது என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

இப்படிக்கு
முதல்வர் கலைஞர் கருணாநிதி

அ.மு.செய்யது said...

நீங்கள் சொல்லும் கருத்து ஒருபுறமிருக்க..எங்களைப் போன்று வடசென்னைவாசிகளின்
பாடு வெகு திண்டாட்டம்.மத்திய,தென்சென்னையில் ஓடி உடைசலாகி கழிக்கப் பட்ட‌
பேருந்துகள் தான் வடசென்னைக்கு ஒதுக்க படுகிறது.அதுவும் குறைவான எண்ணிக்கையில்...கூட்டம்,நெரிசல்,தூசி,வியர்வை,இதோடு கட்டண உயர்வும் வருத்துகிறது.

இன்னும் நிறைய‌ எழுதுங்க‌ள் இதைப் ப‌ற்றி..

குடந்தை அன்புமணி said...

பொங்கல் திருநாளின்போது மாநகரப் பேருந்துகள் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காரணம் வெள்ளை போர்டுகள் கொண்ட அனைத்து பேருந்துகளும் 'M' சர்வீஸ்களாக மாற்றி கொள்ளையடித்துவிட்டு அதற்கு பெயர் சாதனையாம்.... என்னத்த சொல்றது....

தமிழ் மதுரம் said...

நண்பா... ஆட்சியாளர்களுக்கு அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது சந்தோசம்... ஆனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்...என்ன பதில்??? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....

Anonymous said...

நல்ல பதிவு. இந்த கொடுமையில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். இந்த புலம்பல் அரசின் காதுகளுக்கு எட்டினால் நல்லதுதான்.

தேவன் மாயம் said...

மேலும் நெரிசல் மிகுந்த நேரம் என்பதை இன்னும் பழைய நேரத்தையே மாநகரப்பேருந்து நிர்வாகம் பயன்படுத்துகிறது... இப்பவெல்லாம் காலை 7 மணிக்கே நெரிசல் நேரம் ஆரம்பமாவுது... ஆனா இந்த நேரங்களில் இயக்கப்படும் வழித்தடங்கள் மிகக்குறைவு. மாநகரப்பேருந்து நிர்வாகம் இதை கவனிக்குமா?..இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??///

எப்படி கேக்கும்? இப்ப 2 மடங்குக்கு லாபம் வருகிறதாக அமைச்சர் நேற்று சொன்னாரே செய்தியில்>>>

அத்திரி said...

//அவுரு பஸ்ல வந்தா தெரியும்.
அண்ணேன் தீர்வாக ஏதேனும் முன்மொழியுங்களேன்
விகடன்ல போட்டாலும் போடுவாங்க//

அமைச்சருங்க எல்லாம் பஸ்ல வந்தா மறுபடியும் சுனாமி வந்துடும்..
நாம ஒன்லி புலம்பல்தான்... பதிவுலக பெரியவங்க ஏதாவது தீர்வு சொல்லுங்கப்பா நன்றி ஜமால்


//பெங்களூர் மாநகரில் கூட நகர போக்குவரத்து தமிழ்நாட்டைபோல் இவ்வளவு இம்சைகள் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறது. அங்கு போக்குவரத்து நிர்வாகம் பயணிகள் நலன் மற்றும் அவர்களின் சவுகரியம் என்று ஒன்று இருப்பதை கவனத்தில் கொள்கிறார்கள். ஆனால் இங்கு அதெல்லாம் எந்த கடையில் கிடைக்கும் என்று செயல்படுகிறார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற பெயரில் பதவி சுகம் அனுபவிப்பவரை குறைந்தது ஒரு வாரத்திற்காவது மாநகர பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டும் என்றால் திரியும் சேதி.//

நன்றி ராஜாராமன்

அத்திரி said...

//அந்த அம்மையாரின் ஆட்சியில் அநியாயமாய் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, அப்போது உயர்த்திய பஸ் கட்டணங்களை மீண்டும் இன்றளவு உயர்த்தாமல் மக்கள் நலனே பெரிது என்று நினைத்து நான் நல்லாட்சி செய்து கொண்டிருப்பதை கெடுக்கும் வகையில் அத்திரி என்கிற பெயரில் அம்மையார் ஜெயல்லிதா என்னை பற்றி இணையத்தில் எழுதி வ்ருவதை நான் கண்டிக்கிறேன்.

பக்கத்து மாநிலத்தை விட 17.99% சதவிகிதம் பஸ் கட்டணம் குறைவாக் உள்ள ஓரே மாநிலம் நம் தமிழ்நாடுதான் என்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொண்டிருக்கின்றான். என்பதை யாராலும் மறைக்க முடியாது என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
இப்படிக்கு
முதல்வர் கலைஞர் கருணாநிதி//

அண்ணே இப்படியெல்லாம் பீதிய கிளப்பக்கூடாது ..சொல்லிப்புட்டேன்... நன்றி கேபிள் அண்ணே.


//நீங்கள் சொல்லும் கருத்து ஒருபுறமிருக்க..எங்களைப் போன்று வடசென்னைவாசிகளின்
பாடு வெகு திண்டாட்டம்.மத்திய,தென்சென்னையில் ஓடி உடைசலாகி கழிக்கப் பட்ட‌
பேருந்துகள் தான் வடசென்னைக்கு ஒதுக்க படுகிறது.அதுவும் குறைவான எண்ணிக்கையில்...கூட்டம்,நெரிசல்,தூசி,வியர்வை,இதோடு கட்டண உயர்வும் வருத்துகிறது.
இன்னும் நிறைய‌ எழுதுங்க‌ள் இதைப் ப‌ற்றி..//


செய்யது உங்க ஏரியான்னு இல்ல.. மெயின் வழித்தடம் தவிர ஊருக்குள்ள போறவண்டியெல்லாம் டப்பா வண்டிதான் நன்றி செய்யது.

அத்திரி said...

//பொங்கல் திருநாளின்போது மாநகரப் பேருந்துகள் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காரணம் வெள்ளை போர்டுகள் கொண்ட அனைத்து பேருந்துகளும் 'M' சர்வீஸ்களாக மாற்றி கொள்ளையடித்துவிட்டு அதற்கு பெயர் சாதனையாம்.... என்னத்த சொல்றது....//

எல்லா வழித்தடத்தையும் சொகுசுப்பேருந்துக்கு மாற்றிவிட்டா ஒருநாளைக்கு ஒரு கோடியென்ன நாலு கோடிகூட வசூல் பண்ணலாம் நன்றி அன்பு மணி

//நண்பா... ஆட்சியாளர்களுக்கு அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது சந்தோசம்... ஆனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்...என்ன பதில்??? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....//

அரசாங்கம் நினைத்தால் இன்றைக்கே இந்த பிரச்சினைக்கு முடிவுக்கட்டலாம். நன்றி கமல்

அத்திரி said...

//நல்ல பதிவு. இந்த கொடுமையில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். இந்த புலம்பல் அரசின் காதுகளுக்கு எட்டினால் நல்லதுதான்.//

நன்றி ஜீவா

//எப்படி கேக்கும்? இப்ப 2 மடங்குக்கு லாபம் வருகிறதாக அமைச்சர் நேற்று சொன்னாரே செய்தியில்>>>//


இப்படியே இருந்திச்சின்னா நாலு மடங்கு லாபம் மட்டுமே சம்பாதிக்கலாம்,,,,,,, மக்கள்?? நன்றி தேவா

அத்திரி said...

//முதல் ஓட்டே நாந்தானா.

அண்ணே நீங்க ஓட்டு போடலையா//


நெட் இணைப்பு செயல்படவில்லை அதான்...........நன்றி ஜமால்

வனம் said...

வணக்கம் அத்திரி

ம்ம்ம் இப்பத்தான் தெரியுது.

நான் சென்னை மாநகராட்சி பேருந்தில் சென்று வருசம் 10 ஆகுது

நன்றி
இராஜராஜன்

அத்திரி said...

//வணக்கம் அத்திரி
ம்ம்ம் இப்பத்தான் தெரியுது.
நான் சென்னை மாநகராட்சி பேருந்தில் சென்று வருசம் 10 ஆகுது
நன்றி
இராஜராஜன்//

என்ன ராஜராஜன் ரொம்ப நாளா ஆளைக்காணோம்... குடுத்து வச்சவங்க நீங்க....
நன்றி

//ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை
நிஜார் போட்ட மனிதனின் பேஜார்//

ரணகளத்திலையும் இப்படி ஒரு கவிதையா?? தேவையா?

நன்றி புதுகைச்சாரல்

ஆ! இதழ்கள் said...

நினைத்தாலே பயமாக இருக்கிறது.

ஏதாவது செய்யுங்கப்பா...

அது சரி AC பஸ்ஸா ஓடுது சென்னையில, லோக்கல் டிரிப்புக்கு?

:)

அத்திரி said...

//நினைத்தாலே பயமாக இருக்கிறது.
ஏதாவது செய்யுங்கப்பா...
அது சரி AC பஸ்ஸா ஓடுது சென்னையில, லோக்கல் டிரிப்புக்கு//

ஏசி பஸ்தான் இப்பொதைக்கு சென்னையில் டாப்பு.. நன்றி ஆ..இதழ்கள்

Thamira said...

அமைச்சருங்க எல்லாம் பஸ்ல வந்தா மறுபடியும் சுனாமி வந்துடும்..
நாம ஒன்லி புலம்பல்தான்... பதிவுலக பெரியவங்க ஏதாவது தீர்வு சொல்லுங்கப்பா//

ஒன்லி பொலம்பல்தான்.. அழகா சொன்னீங்க அத்திரி.! கொஞ்ச நாளா பிஸியா இருந்ததால அடிக்கடி வரமுடியலைங்க..

அத்திரி said...

//ஒன்லி பொலம்பல்தான்.. அழகா சொன்னீங்க அத்திரி.! கொஞ்ச நாளா பிஸியா இருந்ததால அடிக்கடி வரமுடியலைங்க..//

வாங்க அண்ணே...... நாம எப்பவும் பிசிதான்............ஆங்....

ஆ! இதழ்கள் said...

அத்திரி அவர்களே.

தங்களை வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன், தயவு செய்து பதிவிடவும். நன்றி.

:)

ஊர்சுற்றி said...

அத்திரி நான் கூட இது சம்பந்தமா ஒரு இடுகையிடணும்னு இருக்கேன்.

சென்னை அனுபவம் நிறைய உங்க கிட்டே இருக்கு. அப்புறமா நான் உங்ககிட்டே இருந்து கத்துக்குறேன்.

அத்திரி said...

//ஊர் சுற்றி கூறியது...
அத்திரி நான் கூட இது சம்பந்தமா ஒரு இடுகையிடணும்னு இருக்கேன்.

சென்னை அனுபவம் நிறைய உங்க கிட்டே இருக்கு. அப்புறமா நான் உங்ககிட்டே இருந்து கத்துக்குறேன்//

நன்றி ஊர் சுற்றி