Monday, March 23, 2009

தேர்தல்-- கூட்டணி குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பமாகுது.. ஆனால் பல மாநிலங்களில் கட்சிகல் தங்களுடைய கூட்டணி குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் இன்னும் தடுமாற்றத்துடன் இருக்கின்றன. மாநிலக் கட்சிகளின் ஆட்டத்தை காங்கிரசாலும், பிஜேபியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.. இதுல மூன்றாவது அணிய வேற ஆரம்பிச்சிட்டாங்க.... இந்த உச்சக்கட்ட குழப்பத்தில் அரங்கேற்ம் காமெடி காட்ட்சிகள் மக்களை சலிப்படைய செய்திருக்கிறது.


 காங்கிரசுக்கு நாமம் போட்ட லல்லு


பீகாரில் மொத்தமுள்ள தொகுதிகளில் 3 தொகுதியை மட்டுமே காங்கிரசுக்கு ரொம்ப பெரிய மனசு பண்ணி ஒதுக்கினார் லல்லு. ஆனா காங்கிரசு "ஐயா நாங்க நாட்டையே ஆளுறவங்க கொஞ்சம் மேல போட்டுக் கொடுங்க என காலில் விழாத குறையாக கெஞ்சி பார்த்தும் லல்லு மசியவில்லை... வேறு வழியில்லாமல் காங்கிரசு 37 தொகுதிகளில் தனித்து போட்டி என அறிவித்து விட்டது.இவ்ளோ நடந்த பிறகும் லல்லு தான் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய்ப்பொவதில்லை என்றும் இன்னும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருப்பதாகவும் கூறுகிறார்....

கம்யூனிஸ்ட்களின் உச்சக்கட்ட காமெடி அறிக்கை



சில மாதங்களுக்கு முன்பிருந்து காங்கிரசை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் தேர்தலுக்கு பிறகு மதச்சர்பற்ற அரசு அமைய காங்கிரஸ் தங்களுக்கு உதவ வேண்டும் என்று பிரகாஷ் கரத் அறிக்கை விட்டுள்ளார்... இதுதான் இந்த ஆண்டின் சிறந்த அரசியல் பல்டி.... வாழ்க கம்யூனிஸ்ட்களின் மதச்சார்பின்மை


தமிழகத்தில் கட்சிகளின் நிலை


இன்று வரை தமிழகத்தில் இன்னும் தெளிவான கூட்டணி அமையவில்லை..காரணம் தேமுதிக மற்றும் பாமக... மக்களுடந்தான் கூட்டணி என்று விசயகாந்த் அறிவித்தாலும் அவர் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரவில்லை...40 தொதிகளுக்கும் வேட்பாள்ரை அறிவித்தாலும் மதுரைக்கு தெற்கே தேமுதிகவின் நிலை பரிதாபம்தான்.. காரணம் போன சட்டமன்றதேர்தலில் மதுரை மற்றும் வடதமிழகத்தில் கணிசமான வாக்குகள் பெற்ற தேமுதிக திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் சொற்ப வாக்குகளே வாங்கியது. இருந்தாலும் ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி அப்படின்றாரோ கேப்டன்.


பாமகவின் வியாபாரக்கணக்கு இன்னும் முடியவில்லை போலும்...அதனாலதான் இன்னும் ஒரு தெளிவில்லாமல் இருக்காங்க போல. எப்பவுமே அய்யா சூப்பரா கணக்கு போட்டு கச்சிதமா முடிப்பார்.... இப்ப என்ன ஆச்சு???... இப்ப இருக்கிற அமைதியை பார்த்தால் அம்மாவுடன் ஐக்கியமாகிவிடுவார் என்பது போல் தெரிகிறது.


தமிழகத்தில் பிஜேபியின் நிலைதான் மிக பரிதபமாக இருக்கிறது.. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்த அம்மா இப்படி நட்டாத்துல விடுவாங்கன்னு கனவுல கூட நினைத்திருக்கமாட்டாங்க.... கவலையேப்படாதிங்க தேதல் முடிவு இந்திய அளவில் உங்களுக்கு சாதகமாச்சுன்னா அமமா உங்களுக்கு கண்டிப்பா கை கொடுப்பாங்க.


மொத்தத்தில் நாளுக்கு நாள் தேர்தலை முன்னிட்டு மிக சிறப்பான காமெடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன.. மக்களே உசாரா இருங்க........

12 comments:

Anonymous said...

me the first

Anonymous said...

ஆமா தல ஏன் இவ்வளவு ஆராயச்சி? நீங்க எந்த தொகுதியில போட்டியிட போறீங்க. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திருநெல்வேலியில போட்டியாம்? உங்களை இறக்கி விட்டுருமா?

Anonymous said...

சிவசைலம் மக்கள் முன்னேற்ற கழகம் பெயர் நல்லாயிருக்கா?

நசரேயன் said...

எந்த கட்சிக்கு ஓட்டு போடன்னு எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

//சிவசைலம் மக்கள் முன்னேற்ற கழகம் பெயர் நல்லாயிருக்கா?//

இது சூப்பரு.. நண்பா பட்டைய கட்டி இறக்கி விட பாக்குறாரு ஆனந்த்.. வேணாம்.. எஸ்கேப்பு..

Cable சங்கர் said...

//சிவசைலம் மக்கள் முன்னேற்ற கழகம் பெயர் நல்லாயிருக்கா?//

நான் தான் கோ.ப.செ.. நான் தான் கோ.ப.செ

நையாண்டி நைனா said...

அடப்பாவி..... நம்ம ஊரு பையா என்னமா? யோசிகிறே...

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
ஆமா தல ஏன் இவ்வளவு ஆராயச்சி? நீங்க எந்த தொகுதியில போட்டியிட போறீங்க. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திருநெல்வேலியில போட்டியாம்? உங்களை இறக்கி விட்டுருமா?//

நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?

//கடையம் ஆனந்த் said...
சிவசைலம் மக்கள் முன்னேற்ற கழகம் பெயர் நல்லாயிருக்கா?//

ஏன் இந்த கொலைவெறி?? நண்பா நன்றி

அத்திரி said...

//நசரேயன் said...
எந்த கட்சிக்கு ஓட்டு போடன்னு எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு//


கண்ண மூடிட்டு யாருக்காவது குத்திருங்கண்ணே நன்றி

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
//சிவசைலம் மக்கள் முன்னேற்ற கழகம் பெயர் நல்லாயிருக்கா?//

இது சூப்பரு.. நண்பா பட்டைய கட்டி இறக்கி விட பாக்குறாரு ஆனந்த்.. வேணாம்.. எஸ்கேப்பு..//

நாம எப்பவுமே எஸ்கேப்பு... நன்றி பாண்டியன்

அத்திரி said...

//Cable Sankar said...
//சிவசைலம் மக்கள் முன்னேற்ற கழகம் பெயர் நல்லாயிருக்கா?//
நான் தான் கோ.ப.செ.. நான் தான் கோ.ப.செ/


கோ.ப.செ. அப்படினா என்ன அண்ணே... கேபிள் முன்னேற்ற கழகம் அப்படின்னு ஆரம்பிக்கலாமா... நான் ரெடி.. நீங்க ரெடியா???.....

அத்திரி said...

//நையாண்டி நைனா said...
அடப்பாவி..... நம்ம ஊரு பையா என்னமா? யோசிகிறே...//


நீங்களும் நம்ம ஊரா?? நன்றி நைனா