Sunday, March 29, 2009

சென்னை எஸ்சிவி-- ஹாத்வே கேபிள் யுத்தம்--- ஒரு அலசல்....

கேபிள் டிவியின் அடுத்த கட்டமான டிடிஎச் வளர்ந்து வரும் இந்நிலையில் சென்னையில் தொழில் போட்டி காரணமாக எஸ்சிவியும் ஹாத்வேயும் அடித்துக்கொள்ளாத குறையாக களத்தில் இருக்கின்றன.. இவர்களுக்குள் ஏற்படும் இந்த மாதிரியான போட்டிக்காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவது கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மட்டுமே. இந்தியாவிற்கு டிடிஎச் டெக்னாலஜி வந்து 5 வருடங்கள் தான் ஆகிறது... அதற்கு முன்பு வரை கேபிள் டிவி ஆப்பரேட்டகள்தான் ஒன் மேன் ஆர்மி ஆக இருந்தனர்... எப்போது இந்த தொழிலில் அரசியல் குறுக்கிட ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து பாதிக்கப்படுது இந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தான்...


கொஞ்சம் ஒரு 10 வருசம் முன்னாடி போகலாம்.

10வருசம் முன்னாடி சென்னையில் ஒவ்வொரு ஏரியாவிலும் குறிப்பிட்ட ஆப்பரேட்டர்கள் எம் எஸ் ஓக்களாக செயல் பட்டுக் கொண்டிருந்தனர்... அப்போதைக்கு பெரிய எம் எஸ்ஓ என்று பார்த்தால் சிட்டி கேபிளும், ஹாத்வே மட்டுமே... இந்த சூழ்நிலையில் சூப்பர் டூப்பர் என்ற ஒரு கம்பெனி சென்னையில் உள்ள அனைத்து ஆப்பரேட்டர்களையும் தனக்கு கீழ் கொண்டுவர அஜால் குஜால் வேலையை செய்ய ஆரம்பித்தது.. அது வரை இந்த தொழிலை அமைதியாக நடத்திக்கொண்டிருந்த கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு ஆரம்பித்தது தலைவலி.. சூப்பர் டூப்பர் பின்னால் அதிமுக இருந்ததும் ஒரு காரணம்.. மேலும் சூப்பர் டூப்பர் அடாவடியாக செயல் பட்டதாலும் பல அரசியல் குறுக்கீடு அதிகமாக ஆப்பரேட்டர்களின் நிலை தடுமாறத் தொடங்கினர். அதுவரை வெறும் பார்வையாளராக கோலாச்சி கொண்டிருந்த சன் குழுமத்தினர் சில ஆப்பரேட்டர்களின் உதவியுடன் எஸ்சிவியை ஆரம்பித்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்களில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆப்பரேட்டர்கள் திமுகவினராக இருந்தது வசதியாக போய்விட்டது.. 1999ல் எஸ் சி வி சென்னையில் ஆரம்பிக்கும்போது ஹாட்வேயும், சிட்டி கேபிளும் எம் எஸ் ஓக்களாக இருந்தது... சிட்டி கேபிளின் சாம் ராஜ்யம் எஸ் சி வியினால் முடித்து வைக்கப்பட்டது... அந்த நேரத்தில் சென்னையில் சுமார் 60 சதவீத இணைப்புகள் ஹாத்வேயிடம் இருந்தது.



2003ஆம் ஆண்டு எஸ் சி விக்கும் ஹாத்வேக்கும் கே டிவியை வைத்து பிரச்சினை கிளம்பியது... அதை சாக்காக வைத்து சன் குழுமமம் கே டிவியை ஹாத்வேக்கு தராமல் இரண்டு நிறுவனங்களும் கோர்ட்டை நாடியது... கேடிவி இல்லாத காரணத்தால் ஹாத்வேயின் பல ஆப்பரேட்டர்கள் எஸ் சிவிக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்... இதனால் சென்னையின் கேபிள் இணைப்பில் சுமார் 80 சதவீதம் எஸ் சிவியின் கீழ் வந்தது... இதே நேரத்தில் ஹாத்வே நிறுவனத்திற்கு ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு இருந்தும் தமிழ் சேனல் இல்லாத காரணத்தால் ஹாத்வேயால் ஒன்றும் செய்ய இயலவில்லை..அதுவரை இலவசமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த சன் டிவியும் கட்டண சேனலாக மாறியதால் ஹாத்வேயின் நிலை மேலும் சிக்கலானது... இந்த பிரச்சினையும் கோர்ட் வரை சென்றது....

 இந்நிலையில் கோர்ட் தீர்ப்பின் மூலம் சன் நெட்வொர்க் ஹாத்வேக்கு தனது சேனல்களை தர சம்மதித்தது.. அப்புறம் 2007 ல் நடந்த பிரச்சினை உங்களுக்கே தெரியும் இந்த பிரச்சினைக்கு பிறகு ஆளும் திமுகவின் ஆதரவு ஹாத்வேக்கு கிடைக்க மீண்டும் கேபிள் யுத்தம் ஆரம்பமாகியது... சென்னையில் மட்டும் அல்லாது எஸ் சிவியின் கட்டு பாட்டில் உள்ள நகரங்களிலும் குறிப்பா மதுரையில் ராயல் கேபிள் விசன் ஆரம்பித்து மதுரையில் சன் நெட்வொர்க் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டது... சென்னையில் பழையபடி ஆப்பரேட்டர்கள் ஹாத்வேயில் இணைந்தனர்... இணைத்து வைக்கப்பட்டனர்.... சில புத்திசாலி ஆப்பரேட்டர்கள் இரண்டு நிறுவனத்தின் இணைப்புகளையும் வைத்திருந்தனர்.... நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று... இவ்வளவு நடந்தும் சன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இயலாத நிலையில் அரசு கேபிள் டிவி அவசரமாக ஆரம்பிக்கப்பட்டது.. அரசு கேபிளும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை காரணம் ஸ்டார் குழுமம் மற்றும் சன் நெட்வொர்க் தனது சேனல்களை வழங்கவில்லை...தமிழ்நட்டில் உள்ள பெரும்பான்மையான ஆப்பரேட்டர்கள் திமுகவினராக இருந்தும் அரசு கேபிள் செயல் படாததற்கு சன் நெட்வொர்க் சேனல்களும் ஒரு காரணம்.. சன் சேனல்களை புறக்கணித்து தங்கள் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும் ஒரு காரணம். இப்போது அரசு கேபிள் இருக்கிறதா என்பதே ஒரு சந்தேகம்.....



போன வருசம் கடேசியில் மீண்டும் கண்கள் பணித்து இதயம் இனித்ததும் பழைய ஆட்டங்கள் ஆரம்பித்து விட்டன.. கிட்டத்தட்ட 1மாதமாக நடக்கும் கேபிள் யுத்தம் இன்று வெளிவந்து விட்டது... எஸ் சிவி இணைப்புகள் உள்ள ஏரியாக்கள் அனைத்திலும் இன்று காலை முதல் படம் தெரியவில்லை... காரணம் கேட்டால் எதிர் நிறுவனத்தினர் சென்னையில் உள்ள எஸ் சிவிக்கு சொந்தமான அனைத்து கேபிள்களையும் துண்டித்து விட்டதாக தகவல்...



ஒட்டு மொத்தமாக இந்த ஆட்டத்தில் பாதிக்கப்படுவது


1. கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள்


2. மக்கள்


3. செட் டாப் பாக்ஸ்


இந்த இரு நிறுவனங்களும் அடித்து கொள்வதன் மூலம் டிடி எச் இணைப்பு அதிகமாவதற்கும் காரணமாகிறார்கள்..


இந்த இரண்டு பூனைகளுக்கும் மணி கட்ட போவது யார்???????????

20 comments:

நட்புடன் ஜமால் said...

ஒருத்தரும் கட்ட மாட்டாங்க

எல்லாம்

இதுவும் கடந்து போகும் ...

அப்படின்னுட்டு போக வேண்டியதுதேன்

Anonymous said...

எல்லாம் மாயம் தல. வீட்டுல டி.வி.யாவது இருக்கே? அதுக்கும் அப்பு வைத்து விட போகிறhர்கள்.

Cable சங்கர் said...

அருமையான் அலசல் அத்திரி.. இன்னும் இவர்களின் பிரச்சனைகளை பற்றி நிறைய எழுதலாம். கண்டிப்பாய் நான் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள்.. இன்னும் பல விஷயஙக்ளை நீங்கள் விட்ட விஷயங்களோடு எழுதப் போகிறேன். விரைவி......,,,ல்ல்ல்ல்ல்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல அலசல்

ஊர்சுற்றி said...

அப்படியா!!!
நம்ம வூட்ல டீவி பொட்டி இல்லாததால இதெல்லாம் தெரியலீப்பு!

இனிமே என்னா நடக்கும். யாருக்காவது கண்கள் கோபத்தில் கொப்பளிக்குமோ?!!!

malar said...

அரசியல் வாதிகள் +பணம் படைத்தவர்கள் அட்டகாசம் ஆடத்தான் செய்வார்கள் .

திரும்பவும் யாருக்காவது கண்கள் பணித்து இதயம் இனித்தால் நிலைமை சரியாகுமா ?

அரசியல் வாதிகள் வாழவும் விடமாட்டங்க ஆனால் அடுத்தவரை ஈசியாகா சாவடிதுவிடுவாங்க .

கார்த்திகைப் பாண்டியன் said...

மக்களுக்கு பிரச்சினைனா யாரு கவலைப்படப் போறா நண்பா.. பார்க்கலாம் இது எங்க போய் முடியுதுன்னு?

தராசு said...

தல,

இது ஒரு பணம் கொழிக்கும் துறை. இதுல திரையில தெரியற நாடகங்களை விட திரைக்குப்பின்னால இருக்க்கற நாடகங்கள் பயங்கரமானவை.

நல்லா அலசியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.

அத்திரி said...

//நட்புடன் ஜமால் said...
ஒருத்தரும் கட்ட மாட்டாங்க
எல்லாம்
இதுவும் கடந்து போகும் ...
அப்படின்னுட்டு போக வேண்டியதுதேன்//

நன்றி ஜமால்...

//கடையம் ஆனந்த் said...
எல்லாம் மாயம் தல. வீட்டுல டி.வி.யாவது இருக்கே? அதுக்கும் அப்பு வைத்து விட போகிறhர்கள்.//

வா நண்பா பதிவுக்கு வரும் போதெல்லாம் பீதிய கிளப்புற...

அத்திரி said...

// Cable Sankar said...
அருமையான் அலசல் அத்திரி.. இன்னும் இவர்களின் பிரச்சனைகளை பற்றி நிறைய எழுதலாம். கண்டிப்பாய் நான் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள்.. இன்னும் பல விஷயஙக்ளை நீங்கள் விட்ட விஷயங்களோடு எழுதப் போகிறேன். விரைவி......,,,ல்ல்ல்ல்ல்..//

அண்ணே நீங்க எழுதப்போகும் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

அத்திரி said...

// T.V.Radhakrishnan said...
நல்ல அலசல்//

நன்றி ஐயா...

//ஊர் சுற்றி said...
அப்படியா!!!
நம்ம வூட்ல டீவி பொட்டி இல்லாததால இதெல்லாம் தெரியலீப்பு!
இனிமே என்னா நடக்கும். யாருக்காவது கண்கள் கோபத்தில் கொப்பளிக்குமோ?!!!//

டீவி பொட்டி இல்லையா................. நன்றி ஊர்சுற்றி

அத்திரி said...

// malar said...
அரசியல் வாதிகள் +பணம் படைத்தவர்கள் அட்டகாசம் ஆடத்தான் செய்வார்கள் .
திரும்பவும் யாருக்காவது கண்கள் பணித்து இதயம் இனித்தால் நிலைமை சரியாகுமா ?
அரசியல் வாதிகள் வாழவும் விடமாட்டங்க ஆனால் அடுத்தவரை ஈசியாகா சாவடிதுவிடுவாங்க .//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர்...

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
மக்களுக்கு பிரச்சினைனா யாரு கவலைப்படப் போறா நண்பா.. பார்க்கலாம் இது எங்க போய் முடியுதுன்னு?//

மக்களுக்கு இப்ப பிரச்சினை கிடையாது.. ஏன்னா இது இல்லனா அது அப்படின்னு சாய்ஸ் இருக்கு... இடையில் மாட்டுவது ஆப்பரேட்டர்களே... நன்றி பாண்டியன்

அத்திரி said...

//தராசு said...
தல,
இது ஒரு பணம் கொழிக்கும் துறை. இதுல திரையில தெரியற நாடகங்களை விட திரைக்குப்பின்னால இருக்க்கற நாடகங்கள் பயங்கரமானவை.
நல்லா அலசியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.//

வெளியில் இருந்து பாக்கும் போதுதான் இது நீங்க சொன்ன மாதிரி தெரியும்... ஆனா என்னைக்கு அரசியல்வாதிங்க உள்ள புகுந்தாங்களோ... அன்னைக்கு ஆரம்பிச்ச பிரச்சினை இன்னும் முடிவில்லாமல் போகுது..நன்றி அண்ணே

ஆதவா said...

நல்ல அலசல். ஆதிகால சண்டை முதல் இப்பொது துளிர்விடும் சண்டை வரை நன்கு கொடுத்திருக்கிறீர்கள்!!

நசரேயன் said...

அது என்ன பூனையா?
புலி மாதிரி இருக்கே

Thamira said...

பெரிய பெரிய மேட்டரையெல்லாம் போட்டு அலசுறீங்களே.. படா ஆளுதான் நீங்க.. போங்க.!

அத்திரி said...

//ஆதவா said...
நல்ல அலசல். ஆதிகால சண்டை முதல் இப்பொது துளிர்விடும் சண்டை வரை நன்கு கொடுத்திருக்கிறீர்கள்//

நன்றி ஆதவா....

அத்திரி said...

// நசரேயன் said...
அது என்ன பூனையா?
புலி மாதிரி இருக்கே//

நன்றி அண்ணாச்சி

அத்திரி said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
பெரிய பெரிய மேட்டரையெல்லாம் போட்டு அலசுறீங்களே.. படா ஆளுதான் நீங்க.. போங்க.!//

நன்றி அண்ணே