Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வேண்டிய படம் தான்

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் இந்த படத்தைதான் நம்ம மக்கள் அதிக விமர்சனம் செஞ்சிருக்காங்க.சேரன்,சோழன்,பாண்டியன் வரலாறுகளை சிறு வயதில் படிக்கும்போதே ஆவலாக இருக்கும்.. கேபிளின் விமர்சனம் & கார்க்கியின் விமரசனத்தை படிச்ச பிறகுதான் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்.. குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் பார்த்தேன் டிக்கெட் விலை 100ரூபாய்.(டிக்கெட்டில் 17ரூபாய் என்று இருந்தது).... வாழ்க தியேட்டர் அதிபர்கள்...இப்ப்படியெல்லாம் டிக்கெட் விலை விற்றால் எவன் வருவான் படம் பார்க்க.காலேஜ் படிக்கும் நிஜ யூத்கள்தான் வரிசையில் அதிகம் பேர் இருந்தனர். 

ஹீரோயின், ஹீரோ அறிமுக காட்சியில் ஆரம்பமான கைத்தட்டல் இடைவேளை வரைக்கும் தொடர்ந்தது. கதையையும், காட்சிகளையும் நம்ம பதிவர்கள் நூடுல்ஸ் பண்ணிட்டதால அத பத்தி நான் சொல்ல மாட்டேன்...அதோ அந்த பறவை போல வாழவேண்டும் பாடல் ஒரிஜினல் கெடாமல் அழகாக இருந்தது.. கார்த்தி இன்னும் ப்ருத்திவீரன் பாதிப்பில் இருந்து மீளவில்லை.. இருந்தாலும் ரசிக்க வைக்கிறார்...எல்லோரிடமும் அடிவாங்குகிறார்.இடைவேளை வரைக்கும் இவர் என்ன பண்ண போறார் என்பது .......ஆங்.ஆண்ட்ரியாவிடமும், ரீமாவிடமும் கார்த்தி அடிக்கும் லூட்டி கலகல.காட்சிக்கு காட்சி ரெட்டை அர்த்த வசனங்கள் ரசிக்க வைக்கிறது...ஹீரோவை ரொம்ப பயந்தாங்கொள்ளியாவும், ஹீரொயினை எதற்கும் அஞ்சாதவளாக கண்பிப்பது அருமை.இடைவேளை வரை படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

அதிலும் முக்கியமாக நடராஜர் சிலை நிழல் போல் வரும் காட்சி மிக மிக அருமை. இடைவேளைக்கப்புறம் ஆண்ட்ரியாவுக்கு வேலையில்லை.பார்த்திபன் நடிப்பு ஓஹோ.சுத்த தமிழில் இவர் பேசும் வசனங்கள் வாவ்.என்ன நல்லா கவனிச்சாத்தான் அந்த சுத்த தமிழின் அர்த்தம் புரிகிறது.இடைவேளைக்கப்புறம் படத்தில் தொய்வு ஏற்பட்டாலும் சண்டைக்காட்சிகள் அருமை ( கிளாடியேட்டர் படத்தை போல் வரும் சண்டைக்காட்சி ஓகே)கார்த்தி சோழ அரசனின் தளபதியாக மாறுவது அனுமாஷ்யமான காட்சிகள் என்றாலும் நல்லாவே சொல்லியிருக்காங்க.... ஒளிப்பதிவு, இசை அனைத்தும் அருமை. எடிட்டர் கோலா பாஸ்கரை விட தியேட்டர் ஆப்பரேட்டர் எத்தனை சீன்களை கத்தரி போட்டாரோ....தாய் தின்ற மண்ணே பாட்டையும் கட் பண்ணிட்டாங்கப்பா............ துணை நடிகர்கள் அனைவரையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்....


மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் செல்வா எடுத்த வாந்தியல்ல...அவர் கொடுத்த பூந்தி என்று சொல்லலாம்( லட்டுதான் கொடுக்கனும்னு நினைச்சி கொஞ்சம் மாறிப்போய் பூந்திய கொடுத்திட்டார்.......).நம்ம எப்பவுமே தமிழ் படத்தை ஒரு மனநிலையிலும், ஆங்கில படத்தை வேறொரு மாதிரி மனநிலையிலும் பார்க்கிறதை மாத்துங்கப்பா.......... ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஆங்கிலப்படத்தில் ஹீரோ எங்கிருந்து குதித்தாலும் ஆஹா ஓஹோ.........அதையே தமிழ் படத்தில் செய்தால்................... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... மாத்துங்க மாறுங்க

கண்டிப்பா படத்தை தியேட்டரில் போய் பாருங்கள்

23 comments:

தராசு said...

//காலேஜ் படிக்கும் நிஜ யூத்கள்தான் வரிசையில் அதிகம் பேர் இருந்தனர்.//

எப்ப பாத்தாலும் ஒரு குரூப்பை குறி வெச்சுத்தான் உங்க எழுத்துக்கள் எல்லாம் இருக்குது. இதுக்காக யூத் சங்கத்திலிருந்து கண்டன தீர்மானம் நிறைவேத்தப் போறோம்.

அப்பவும் நீங்க மாறலைன்னா, எங்க தலைவர், வேற வழி முறைகளை கையாள வேண்டி வரும் என கூறிக் கொள்கிறேன்.

//ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... மாத்துங்க மாறுங்க//

Ashok D said...

அத்திரி அப்டி போடுங்க கத்திரி.. யூத்து கவிஞர் எங்கிருந்தாலும் வரவும்

Unknown said...

கண்டிப்பாக தியேட்டர்லதான் பார்க்கப் போறேன்

வெற்றி said...

லட்டு சரியாய் பண்ணாததால் பூந்தியாகிவிட்டது..ஆனாலும் இனிக்கத்தான் செய்கிறது..:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வேண்டிய படம் தான்"//

பூந்தியை சாப்பிட்டுட்டு இப்படிக்கூட சொல்லலைன்னா எப்படி

துபாய் ராஜா said...

அழகான, அருமையான,நியாயமான, நேர்மையான, நடுநிலையான விமர்சனம்.

நம்மளை மாதிரி பூந்தி ரசிக்கிற ஆடகள் நிறைய பேர் இருக்கிறது குறித்து மகிழ்ச்சி.

தமிழனை தமிழன் தட்டி கொடுக்க வேண்டாம். திட்டி கெடுக்காமல் இருந்தாலே போதும். தமிழினம் தன்னாலே தலை நிமிரும்.

சிநேகிதன் அக்பர் said...

அருமையான விமர்சனம்.

படம் எப்படியிருந்தாலும் நாங்க பார்த்தே தீருவோம்.

பொக்கிஷத்தையே ரெண்டு வாட்டி பார்த்தாச்சுன்னா பார்த்துக்கோங்க.

//ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஆங்கிலப்படத்தில் ஹீரோ எங்கிருந்து குதித்தாலும் ஆஹா ஓஹோ.........அதையே தமிழ் படத்தில் செய்தால்................... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... மாத்துங்க மாறுங்க//

அதேதான் பாஸ் நானும் நெனச்சேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கருத்து சொன்னதெல்லாம் சரிங்கப்பு..

//ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஆங்கிலப்படத்தில் ஹீரோ எங்கிருந்து குதித்தாலும் ஆஹா ஓஹோ... அதையே தமிழ் படத்தில் செய்தால்................... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........//

இதுல யாரையும் வேட்டையாடுற அளவுக்கு உள்குத்து இல்லையே?

:-))))))))

குடுகுடுப்பை said...

சூப்பர்.

இன்னும் இங்கே பெட்டி வரலை, வெயிட்டிங் பார் பெட்டி. வாந்தியோ பூந்தியோ பாத்திர வேண்டியதுதான்.

Cable சங்கர் said...

ஒழுங்கு மரியாதையா முழு கதையையும்.. என் கிட்ட வந்து சொல்லலை.. அவ்வளவுதாண்டி நீ..:))

ஹேமா said...

அப்போ அலுப்பில்லாம படம் பாக்கலாம்ம்னு சொல்றீங்க.
சரி.பாத்துடலாம்.

கந்தப்பு said...

கண்டிப்பாக பார்க்கப் போறேன்

நட்புடன் ஜமால் said...

பார்த்துடுவோம் ... :)

கார்க்கிபவா said...

அத்திரி, அதே அதே

அந்த மந்திர உடை உங்க கண்ணுக்கு தெரியுது இல்ல? அதான்.. நீங்க அறிவாளி..இந்த டிரஸ்ஸையே போட்டுக்குட்டி போங்க :))

அத்திரி said...

// தராசு said...
//எப்ப பாத்தாலும் ஒரு குரூப்பை குறி வெச்சுத்தான் உங்க எழுத்துக்கள் எல்லாம் இருக்குது. இதுக்காக யூத் சங்கத்திலிருந்து கண்டன தீர்மானம் நிறைவேத்தப் போறோம்.
//

இதுக்கெல்லாம் டென்சன் ஆனா எப்படி அண்ணே....வருகைக்கு நன்றி


//D.R.Ashok said...
அத்திரி அப்டி போடுங்க கத்திரி.. யூத்து கவிஞர் எங்கிருந்தாலும் வரவும்//


வருகைக்கு நன்றி அஷோக் அண்ணே

அத்திரி said...

//தாமோதர் சந்துரு said...
கண்டிப்பாக தியேட்டர்லதான் பார்க்கப் போறேன்//

வருகைக்கு நன்றி சந்துரு

//வெற்றி said...
லட்டு சரியாய் பண்ணாததால் பூந்தியாகிவிட்டது..ஆனாலும் இனிக்கத்தான் செய்கிறது..:)))//

வருகைக்கு நன்றி வெற்றி

அத்திரி said...

// T.V.Radhakrishnan said...
//ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வேண்டிய படம் தான்"//
பூந்தியை சாப்பிட்டுட்டு இப்படிக்கூட சொல்லலைன்னா எப்படி//

வருகைக்கு நன்றி ஐயா


// துபாய் ராஜா said...
அழகான, அருமையான,நியாயமான, நேர்மையான, நடுநிலையான விமர்சனம்.நம்மளை மாதிரி பூந்தி ரசிக்கிற ஆடகள் நிறைய பேர் இருக்கிறது குறித்து மகிழ்ச்சி.
தமிழனை தமிழன் தட்டி கொடுக்க வேண்டாம். திட்டி கெடுக்காமல் இருந்தாலே போதும். தமிழினம் தன்னாலே தலை நிமிரும்.//

கருத்துக்கு நன்றி ராஜா

அத்திரி said...

//அக்பர் said...
அருமையான விமர்சனம்.
படம் எப்படியிருந்தாலும் நாங்க பார்த்தே தீருவோம்.பொக்கிஷத்தையே ரெண்டு வாட்டி பார்த்தாச்சுன்னா பார்த்துக்கோங்க.//

அப்போ இந்த படத்தை நூறுவாட்டி பாக்கலாம்.நன்றி அக்பர்..

// கார்த்திகைப் பாண்டியன் said...
கருத்து சொன்னதெல்லாம் சரிங்கப்பு..
//ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஆங்கிலப்படத்தில் ஹீரோ எங்கிருந்து குதித்தாலும் ஆஹா ஓஹோ... அதையே தமிழ் படத்தில் செய்தால்................... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........//
இதுல யாரையும் வேட்டையாடுற அளவுக்கு உள்குத்து இல்லையே?//]

நான் சொன்னது எல்லா தமிழ் படத்துக்கும் பொருந்தும் அப்பு.........நன்றி புரொபசர்

அத்திரி said...

//குடுகுடுப்பை said...
சூப்பர். இன்னும் இங்கே பெட்டி வரலை, வெயிட்டிங் பார் பெட்டி. வாந்தியோ பூந்தியோ பாத்திர வேண்டியதுதான்
//
நன்றி குடுகுடுப்பை.


//Cable Sankar said...
ஒழுங்கு மரியாதையா முழு கதையையும்.. என் கிட்ட வந்து சொல்லலை.. அவ்வளவுதாண்டி நீ
//

கதை சொன்னா எவ்ளோ அண்ணே தருவீங்க....??

அத்திரி said...

// ஹேமா said...
அப்போ அலுப்பில்லாம படம் பாக்கலாம்ம்னு சொல்றீங்க.
சரி.பாத்துடலாம்.//

நன்றி ஹேமா


// கந்தப்பு said...
கண்டிப்பாக பார்க்கப் போறேன்//

நன்றி கந்தப்பு

அத்திரி said...

// நட்புடன் ஜமால் said...
பார்த்துடுவோம் ... :)//

நன்றி...........


//கார்க்கி said...
அத்திரி, அதே அதே
அந்த மந்திர உடை உங்க கண்ணுக்கு தெரியுது இல்ல? அதான்.. நீங்க அறிவாளி..இந்த டிரஸ்ஸையே போட்டுக்குட்டி போங்க :))//

சகா படம் எனக்கு பிடிச்சிருக்கு..........லாஜிக் ஓட்டைகள் இருக்கு........ஆனா அதை மட்டுமே சொல்லக்கூடாது.......லாஜிக்கே இடிக்காத ஏதாவது ஒரு திரைப்படத்தை சொல்லு பார்க்கலாம் கிராபிக்ஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டும் என் அறிவுக்கு தெரிஞ்சி நல்லாயில்லை..... சிகப்பு கலர்ல ஒரு பூச்சி காண்பிப்பாங்களே அந்த காட்சி மட்டுமே..... மற்றபடி அந்த மந்திர உடையை நான் அணிந்தால் நன்றாக இருக்காது............ ரீமா அண்ட்ரியா அணிந்தால் நன்றாக இருக்கும்

ஜெட்லி... said...

//மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் செல்வா எடுத்த வாந்தியல்ல...அவர் கொடுத்த பூந்தி என்று சொல்லலாம்//


என்ன ஒரு பஞ்ச்....

priyamudanprabu said...

மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் செல்வா எடுத்த வாந்தியல்ல...அவர் கொடுத்த பூந்தி என்று சொல்லலாம்( லட்டுதான் கொடுக்கனும்னு நினைச்சி கொஞ்சம் மாறிப்போய் பூந்திய கொடுத்திட்டார்.......).நம்ம எப்பவுமே தமிழ் படத்தை ஒரு மனநிலையிலும், ஆங்கில படத்தை வேறொரு மாதிரி மனநிலையிலும் பார்க்கிறதை மாத்துங்கப்பா.......... ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஆங்கிலப்படத்தில் ஹீரோ எங்கிருந்து குதித்தாலும் ஆஹா ஓஹோ.........அதையே தமிழ் படத்தில் செய்தால்................... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... மாத்துங்க மாறுங்க
///

சரியா சொன்னீக