Monday, August 17, 2009

ஓட்டுப் போட காசு வாங்கலையோ..........

அம்மா வாங்க, அய்யா வாங்க,பிரபல பதிவர்களே வாங்க,பிரபலமில்லா பதிவர்களே வாங்க, சின்ன பதிவர்களே வாங்க,பெரிய பதிவர்களே வாங்க, எல்லோரும் வாங்க வந்து ஓட்டு போடுங்க.........அப்படி இப்படினு எப்படி கத்தினாலும் கதறினாலும் நம்ம மக்களுக்கு ஓட்டு போடுறதுனாலே சோம்பேறித்தனம் தான்.


இந்தப்பதிவில் ஓட்டு போடுங்கன்னு சொல்லியிருந்தேன்.பதிவுக்கு கூட ஓட்டு போடவேண்டாம்..அந்த மேட்டர்ல குத்துங்கன்னு சொல்லியிருந்தேன்...அந்தப்பதிவுக்கு ரெண்டு நாள் சேர்த்து 1200 ஹிட்ஸ் வந்திருந்தது..ஆனால் ஓட்டு போட்டவங்களின் எண்ணிக்கையை பார்த்தால் 100க்கும் குறைவே...... இப்பதான் தெரியுது அரசியல்வாதிங்க எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு.பின்ன மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டு போடனும்றதுக்காக என்னவெல்லாம் செய்றாங்க...நீங்க அப்படி ஏதாவது செஞ்சத்தான் ஓட்டு போடுவாங்க அப்படினு ஒரு சில பேர் சொன்னாங்க....அதுக்காக ஒரு வோட்டுக்கு 100,200 குடுக்கனும்னு எதிர்பாத்தா எப்படினு கேட்ட பதில் இல்லை..

அதனால் யூத்து சங்க தலைவரின் ஆலோசனைப்படி ஒரு ஓட்டுக்கு அஞ்சு பைசா கொடுப்பதாக முடிவு பண்ணியுள்ளேன்..என் பதிவுக்கு தமிழிஷ்ல ஓட்டு போட்டிங்கன்னா அஞ்சு பைசா, தமிழ்மணத்தில் ஓட்டு போட்டா அஞ்சு பைசா, மொத்தமா உங்க கணக்கில் 100 ஓட்டு வந்ததும் அதற்கான தொகை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை சந்தோசமாக சொல்லிகொள்கிறேன்........

அதனால பதிவுலக மக்களே மறக்காம என் பதிவுக்கு ஓட்டு போடுங்க சொல்லிட்டேன்......

ஸ்பெசல் ஆபர்
1000 ஓட்டு போட்டா 1கிலோ ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா சுடச்சுட பார்சல் அனுப்பி வைக்கப்படும்

29 comments:

Anonymous said...

யோவ் வேலையை ஆரம்பிச்சிட்டியா...

Anonymous said...

அதனால பதிவுலக மக்களே மறக்காம என் பதிவுக்கு ஓட்டு போடுங்க சொல்லிட்டேன்......
//
இந்த ஒரு தகுதி போதுமய்யா நீங்க அரசியல்ல இறங்க...

Anonymous said...

என் பதிவுக்கு தமிழிஷ்ல ஓட்டு போட்டிங்கன்னா அஞ்சு பைசா, தமிழ்மணத்தில் ஓட்டு போட்டா அஞ்சு பைசா, மொத்தமா உங்க கணக்கில் 100 ஓட்டு வந்ததும் அதற்கான தொகை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை சந்தோசமாக சொல்லிகொள்கிறேன்........
//

இதுல ஊழல் ஏதாவது வந்தா அந்நியன் படம் மாதிரி தண்டிக்கப்படும்.

Anonymous said...

1000 ஓட்டு போட்டா 1கிலோ ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா சுடச்சுட பார்சல் அனுப்பி வைக்கப்படும்
//

பேசமா இந்த வியாபாரம் பார்க்கலாம்....

mjothi said...

1000 ஓட்டு போட்டா 1கிலோ ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா சுடச்சுட பார்சல் அனுப்பி வைக்கப்படும் //

சர்க்கரை வியாதி உள்ளவங்களுக்கு என்னப்பா பார்சல் ?

ஹேமா said...

சுவிஸுக்கும் பார்சல் வருமா...அல்வாவோட.

Cable சங்கர் said...

ஒழுங்கு மரியாதையா ராயல்டி அனுப்பிச்சிரு.. அவ்வளவுதான் சொல்ல்லிட்டேன்.

Raju said...

இங்கே என்ன நடக்குது..?
நான் எங்க இருக்கேன்.?

நட்புடன் ஜமால் said...

இதுவரையில் ஓட்டு போட்டுகிட்டு தான் இருந்தேன்

இனி யோசிக்கனும் போலயே! ... :)

தராசு said...

இதுல அந்த 49 O பட்டன் எங்க இருக்குதுண்ணே?

கார்க்கிபவா said...

ரைட்டு சகா

Thamira said...

நானும் நிறைய தேர்தல் நடத்திருக்கேன். என்ன கதறுனாலும் போடவே மாட்டாய்ங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

போங்கப்பா.. காமெடி பண்ணிக்கிட்டு..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))

snkm said...

பிரமாதம் போங்க! சீக்கிரம் அரசியலுக்கு போய் முன்னேற்றுங்கப்பா நாட்டை !

Anonymous said...

உங்களுக்கு ஒரு விருது என் பக்கம் வாருங்கள்.

அத்திரி said...

// கடையம் ஆனந்த் said...
அதனால பதிவுலக மக்களே மறக்காம என் பதிவுக்கு ஓட்டு போடுங்க சொல்லிட்டேன்......
//இந்த ஒரு தகுதி போதுமய்யா நீங்க அரசியல்ல இறங்க...//
ஏன் மாப்ளே இதை சொல்லலைனா உனக்கு தூக்கம் வராதா?

// மகேஷ்வரன் ஜோதி said...
1000 ஓட்டு போட்டா 1கிலோ ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா சுடச்சுட பார்சல் அனுப்பி வைக்கப்படும் //சர்க்கரை வியாதி உள்ளவங்களுக்கு என்னப்பா பார்சல் ?//

சுகர் பிரீ அல்வா அனுப்பப்படும்.....முதல் வருகைக்கு நன்றி ..மகேஷ்வரன் ஜோதி

அத்திரி said...

..//ஹேமா said...
சுவிஸுக்கும் பார்சல் வருமா...அல்வாவோட//

அனுப்பிட்டாப்போச்சு......... நன்றி ஹேமா

// Cable Sankar said...
ஒழுங்கு மரியாதையா ராயல்டி அனுப்பிச்சிரு.. அவ்வளவுதான் சொல்ல்லிட்டேன்.//

ராயல்டியா மாசம் ஒரு கிலோ அல்வா தாரேன்.......

அத்திரி said...

//டக்ளஸ்... said...
இங்கே என்ன நடக்குது..?
நான் எங்க இருக்கேன்.?//]

நீங்க எங்க இருக்கனுமோ அங்கதான் இருக்கீங்க டக்ளஸ்

அத்திரி said...

//நட்புடன் ஜமால் said...
இதுவரையில் ஓட்டு போட்டுகிட்டு தான் இருந்தேன்இனி யோசிக்கனும் போலயே! ... :)//


ஆஹா.........வாங்க ஜமால்

அத்திரி said...

// தராசு said...
இதுல அந்த 49 O பட்டன் எங்க இருக்குதுண்ணே?//


ஹிஹிஹி..அதெல்லாம் இங்க கிடையாது.......இதுக்குத்தான் அம்மா ஆளுங்கள சேக்கக்கூடாது

அத்திரி said...

// கார்க்கி said...
ரைட்டு சகா//

ஒகே சகா

அத்திரி said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
நானும் நிறைய தேர்தல் நடத்திருக்கேன். என்ன கதறுனாலும் போடவே மாட்டாய்ங்க..//


வாங்க அண்ணே

அத்திரி said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
போங்கப்பா.. காமெடி பண்ணிக்கிட்டு..//


இது காமெடியில்லை...... உண்மை........ நண்பா

அத்திரி said...

//Earn Staying Home said...
அருமை//

முதல் வருகைக்கு நன்றி Earn Staying Home

அத்திரி said...

ஸ்ரீ said...
:-))))))

வாங்க ஸ்ரீ... வெறும் சிரிப்புதானா..

அத்திரி said...

//snkm said...
பிரமாதம் போங்க! சீக்கிரம் அரசியலுக்கு போய் முன்னேற்றுங்கப்பா நாட்டை !//

கட்சி ஆரம்பிக்கலாமா.snkm......முதல் வருகைக்கு நன்றி

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
உங்களுக்கு ஒரு விருது என் பக்கம் வாருங்கள்.//


நன்றி மாப்ளே......

உங்கள் தோழி கிருத்திகா said...

raila thanaiyya ipdilam nadakkum..ippo thirunelvelikaarangalum aaramichuttangalaa....